Saturday, February 28, 2009

PDF பைலை உருவாக்குவது எப்படி?








பிடிஎப் பைலை உருவாக்குவது எப்படி?
நம்மிடம் உள்ள மைக்ரோசாப்ட் வேர்ட்
டாக்குமென்ட்களை பிடிஎப் பைலாக
மாற்றலாம் என விரும்பினால் அதை
எப்படி மாற்றுவது? அதை அவ்வாறு மாற்று
வதால் என்ன பயன்? அந்த பைலை நீங்கள்
மற்றவர்க்கு எளிதாக
வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும்
பைலானது அவர்களின் கம்யூட்டரில்
மைக்ரோசாப்ட் ஆபிஸின் எந்த
பதிப்பானாலும் சுலபமாக ஓப்பன்
ஆகும்.அது போல் நமது குழந்தைகளின்
பாட சம்பந்தமான டாக்குமென்டை பிடிஎப்
பைலாகமாற்றிவிட்டால் அதை கம் யூட்டர்
எளிதில் படித்துக் காண்பிக்கும்.
பிடிஎப் பைலை கம்யூட்டரே படித்து
காண்பிப்பதை பற்றி ஏற்கனவே
பதிவிட்டுள்ளேன். அந்த பதிவை
பார்க்காதவர்கள் இந்த தளம்
சென்று பார்க்கவும்.
இனி சாதாரண டாக்குமெண்ட்
பைலை எவ்வாறு பிடி எப் பைலாக மாற்றுவது
என காணலாம்.
முதலில் நீங்கள் இந்த தளம் சென்று இலவச
பிடிஎப் கிரியேட்டர் சாப்ட்வேரான
(பிரைமோ பிடிஎப்)டவுண்லோடு செய்யவும்.
முகவரி தளம்:-
நீங்கள் இந்த தளம் சென்றால் உங்களுக்கு இந்த
பக்கம் உருவாகும்.
இதில் உள்ள டவுண்லோடு இலவசம் நீங்கள்
கிளிக் செய்யவும். உங்களுக்கு இந்த பக்கம்
ஓப்பன் ஆகும்.
இந்த தளம் சென்று பிடிஎப் பைலாக
மாற்றுவதற்கான சாப்ட்வேரை
பதிவிறக்கம் செய்து விடவும்.
அதை நமது கணிணியில் நிறுவியபின்
கணிணியைஒருமுறை ரீ-ஸ்டார்ட்
செய்யவும். அச்சமயம் நமது இந்த
பிடிஎப்பாக மாற்றும்சாப்ட்வேரானது
நமது கணிணியில் பிரிண்ட் இடத்தில்
அமர்ந்து விடும்.அடுத்து
நீங்கள் பிடிஎப் பைலாக
மாற்ற விரும்பும் பைலை முதலில் திறந்து
கொள்ளுங்கள்.
அதனை அச்சடிக்க கட்டளை கொடுங்கள்.
அவ்வாறு அச்சடிக்க கட்டளை கொடுக்கும்
போது Printer ஆக Primo PDF தேர்ந்துஎடுக்கவும்.

அடுத்து ஓ.கே. கொடுக்கவும்.

உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும். இதில்
Options தேர்வு செய்தால் உங்களுக்கு இந்த தளம்
ஓப்பன் ஆகும்.

உங்களுக்கு தேவையான பார்மட்டில் மாற்றிக்
கொள்ளலாம். அது போல் Programe நாமே தேர்வு
செய்யலாம்.
சரி - Options ஏதும் வேண்டாம் . நேரடியாக இ-மெயிலில்
அனுப்பலாம்.
சரி- இ-மெயிலிலும் அனுப்பவேண்டாம். தேவையான
டிரைவில் சேமிக்க கட்டளை கொடுக்கலாம்.
உங்களுக்கு இது போல் ஒரு காலம்
தோன்றும்.

உங்களுடைய டாக்குமென்டை நிமிடத்தில்
மாற்றி உங்களுக்கு பிடிஎப் பைலை
காட்டும்.இந்த இலவச சாப்ட்வேரை
டவுண்லோடு செய்து உபயோகித்துப்
பாருங்கள்.கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
நமது கம்யூட்டரில் உள்ள டிரைவின் பெயரை மாற்ற மை கம் யூட்டர் கிளிக் செய்து வரும் மெனுவில் ரைட்கிளிக் செய்து விரியும் மெனுவில் ரீ-நேம் என்பதை தேர்வு செய்யவும். உங்களுக்கு தேவையான பெயரை சூட்டவும். (உங்கள் மனைவி- குழந்தைகளின் பெயர்களை வைக்கலாம்)பின்னர் என்டர் தட்டவும். பெயர் மாறிவிடும்.

Friday, February 27, 2009

A.V.G. ஏவிஜி ஆண்டி வைரஸ்








இலவசமாக வழங்கப்படும் ஆண்டிவைரஸ்


சாப்ட்வேர்களில் ஏ.வி.ஜி. முதன்மையானது.

பிரபலமானது - உபயோகிக்க எளிமையானது.

அதுமட்டுமல்லாமல் அப்டேட் செய்ய

எளிமையானது. அவ்வப்போது வருகின்ற

புதிய வைரஸ்களை நீக்குவதாலும் இது

மற்ற ஆண்டிவைரஸை விட சிறப்பானது.

இனி இதை எப்படி பதிவிறக்கம் செய்வது

என்று பார்ப்போம். முதலில் இந்த முகவரி

தளத்தை சொடுக்கவும்.

முகவரி தளம்:- http://free.avg.com/


உங்களுக்கு இந்த மாதிரி உங்களுக்கு இந்த

பக்கம் திறக்கும்.





உங்களுடைய இந்த பக்கத்தில் நீங்கள்

Avg Antivirus Free Edition கிளிக் செய்து பைலை

டவுண்லோடு செய்யவும்.

பின்னர் இன்ஸ்டால் செய்யவும்.

கம்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்.

உங்களது AVG பைலானது டாக்ஸ்க்

பாரில் நான்கு மூலை சதுரமாக




இவ்வாறு அமர்ந்து கொள்ளும்.

அதை ஓப்பன் செய்யும் போது உங்களுக்கு

இந்த மாதிரி ஓப்பன் ஆகும். இதில்



வலப்புறம் உள்ள கம்யூட்டர் ஸ்கேனரை

கிளிக் செய்யவும்.




உங்களுக்கு கம்யூட்டர் முழுவதும் ஒவ்வொரு

டிரைவாக ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கும்.

உங்கள் கம்யூட்டரில் வைரஸ் இருந்தால்

இருக்கும் வைரஸ்கள் தேர்வாகும். முழு

கம்யூட்டரும் ஸ்கேன் செய்து முடிந்ததும்

வைரஸ் இருந்தால் உங்களுக்கு வைரஸை

அடையாளம் காண்பிக்கும். பின்னர்

அதன் கீழே உள்ள ரீமுவ் கொடுத்தால்

அது வைரஸ் வால்ட் சென்று அமர்ந்து

விடும். வைரஸ் வால்ட் பார்க்க


History - Virus Vault தேர்வு செய்யவும்.


வரும் காலத்தில் Empty Vault செல்கட் செய்தால்

உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.



வைரஸை நிச்சயமாக நீக்கட்டுமா ? என கேட்கும்.

Yes கொடுக்கவும்.

உங்கள் கம்யூட்டரில் வைரஸ் நீக்கப்பட்டு விடும்.

கம்யூட்டரை ஒரு முறை ரீ-ஸ்டார்ட் செய்யவும்.

நேரம் இருப்பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில்

அப்-டேட் செய்திடவும்.

ஓரு முறை இந்த ஏவிஜி ஆண்டி வைரஸை

உபயோகித்துப்பாருங்கள். வைரஸை விரட்டி

அடியுங்கள்.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் கம்யூட்டர் மானிட்டர் 15 “ அல்லது 17” அல்லது அதற்கும் மேலே எதுவாக இருப்பினும் உங்கள் டாக்குமென்டை திறந்தபின் “View” சென்று அதில் உள்ள “Full Screen”என்பதை தேர்வு செய்தால் உங்கள் டாக்குமென்ட் திரை முழுவதும் தெரியும். அதிலிருந்து மீண்டுவர “Esc” கீயை அழுத்தவும்.

Thursday, February 26, 2009

கூகுள் அபாய எச்சரிக்கை

கூகுள் அபாய எச்சரிக்கை

பதிவுஉலக நண்பர்களே... நாம் பதிவுகளை

பதிவிட்டுவருகின்றோம். அதை தனியே

சேமித்து வைத்துள்ளோம் என்றால்

இல்லையென்ற பதில்தான் வரும்.

நமக்கு கூகுள் தரும் இணைய வசதியை

எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்-

மறைக்கலாம்- வெளியிட பணம் கேட்கலாம்.

சமீபத்தில் நமது பதிவை தொடர்பவர்களை

குறைத்தார்கள். இப்போது மறைத்துள்ளார்கள்.

அதுபோல் நமது பதிவுகளை நீக்கிவிடலாம்.

எனவே பதிவு நண்பர்கள் இதுவரை பதிவிட்டுள்ள

உங்கள் பதிவுகளை கணிணியில் தனியே

ஒரு போல்ட்ர்போட்டு சேமித்துவைக்கவும்.

இன்னும் ஒரு காப்பியை சிடியில் சேமித்து

வைக்கவும். வசதியிருந்தால் பதிவுகளை

தனியே பிரிண்ட் எடுத்து வைததுக்கொள்ளவும்.

பின்னால் வருத்தப்பட்டு பலன்இல்லை.

வாழ்க வளமுடன்,

வேலன்.

Tuesday, February 24, 2009

சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்வது எப்படி?

நமது கணிணியில் சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்வது எப்படி?


விண்டோஸ் எக்ஸ் பி சிஸ்டத்தில் சிஸ்டம்

ரீ-ஸ்டோர் என ஒரு வசதி உள்ளது. நாம் சில

சமயங்களில் புதிய சாப்ட்வேர் இன்ஸ்டால்

செய்தாலும் - கம்யூட்டர் சிஸ்டத்தில் ஏதாவது

மாற்றங்கள் செய்தாலும் கம்யூட்டர் செயல்படாமல்

செல்லலாம். அந்த மாதிரியான நேரங்களில்

புதிதாக நிறுவிய சாப்ட்வேரை நீக்கிவிடலாம்.

அப்படியும் கம்யூட்டர் தகராறு செய்தால்

சர்வீஸ் இன்ஜினியரை கூப்பிடும் முன்

ஒரு முறை சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்து

பார்க்கலாம். இதனால் கம்யூட்டர் சரியாகி

விட வாய்ப்பு உள்ளது.

இனி சிஸ்டத்தில் ரீ-ஸ்டோர் எப்படி

செய்வது என பார்க்கலாம்.

முதலில் Start -கிளிக் செய்து வரும்

காலத்தில் Help and Support தேர்வு செய்யவும்.


உங்களுக்கு Pick up Help Topic காலம் வரும். அதில்

Performance and maintenance தேர்வு செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட வாறு இந்த காலம்

ஓப்பன் ஆகும்.




அதில் நீங்கள் இடப்புறம்

உள்ள Using system Restore to undo Changes




தேர்வு செய்யவும்.



அதை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வலப்புறம்

கீழ்கண்டவாறு ஒரு காலம் ஓப்பன் ஆகும்.



அதில் உள்ள Run the System Restore Wizard தேர்வு செய்யவும்.

அதை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு மேற்கண்ட

படத்தில்உள்ள வாறு Welcome System Restore

காலம் தேர்வாகும்.

அதில் Restore my Computer to an Earlier Time

எதிரில் உள்ள ரேடியோபட்டனை தேர்வு

செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு

மாதக்காலண்டருடன் ஒரு காலம்

ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் விரும்பும்

தேதியை கடைசியாக மாறுதல் செய்த

தேதிக்கு முன் மாறுதல் செய்த தேதியை

தேர்வு செய்யவும்.
அடுத்து Next கொடுத்தால் உங்களுக்கு கீழ்கண்டவாறு

காலம் ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் மாற்றம் செய்ய

விரும்புவதை எச்சரிக்கும் செய்திவரும்.(இதில் முக்கிய

மான எச்சரிக்கை என்னவென்றால் நீங்கள் சிஸ்டம்

ரீ-ஸ்டோர் செய்யும் போது சிடி டிரைவோ அல்லது

யுஎஸ்பி போர்டோ உபயோகப்படுத்தக்கூடாது.

ஏனென்றால் அதன் டிரைவர் செயல்இழக்கும் அபாயம்

உண்டு)

அடுத்து நீங்கள் next கொடுக்கவும்.
உங்கள் கணிணி இப்போது சிஸ்டர் ரீ-ஸ்டார் ஆக ஆரம்

பிக்கும். இது முடிய சில நிமிடங்கள் ஆகலாம். அடுத்து

மீண்டும் உங்களை ஓகே கேட்கும் . ஓகே கொடுக்கவும்.

இதில் உங்களுடைய டாக்குமெண்ட் ஏதும் மாறாது.

இ-மெயில்கடிதங்கள் மாறாது. புதிதாக நிறுவிய

சாப்ட்வேர் நீங்கிவிடும். நீங்கள் சிஸ்டத்தில்

ஏற்படுத்திய மாற்றங்கள் மட்டும் நீங்கிவிடும்.

சிஸ்டம் ரீ-ஸ்டோர் செய்ய தயாரா?

இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.




இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
நீங்கள் உருவாக்கிய பைலை காணவில்லையா? ஸ்டார்ட்மெனு சென்று செர்ச் அழுத்திபின் All Files and Folders கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உங்களுடைய பைலின் பெயரைகுறிப்பிடுங்கள் . எக்ஸ் பி உங்களுக்கு பைலைத் தேடி தரும்.

Saturday, February 21, 2009

வலைப்பதிவில் ஸ்லைட்ஷோ வரவழைப்பது எப்படி?

வலைப்பதிவில் ஸ்லைட்ஷோ வரவழைப்பது எப்படி?

வலைப்பதிவில் ஸ்லைட்ஷோவை எப்படி வரவழைப்பது

என்று நண்பர் கேட்டிருந்தார்.முதலில் நீங்கள் பதிவிட

விரும்பும் புகைப்படத்தை தேர்வு செய்து தனியே ஒரு

போல்டரில் வைத்துவிடவும். பிறகு இந்த வலைத்தளத்தை

தேர்வு செய்யவும்.

முகவரி:-http://www.slide.com

உங்களுக்கு இந்த பக்கம் ஓப்பன் ஆகும்.




இதில் Browse கிளிக் செய்து நீங்கள் தேர்வு செய்து

வைத்துள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும்.



அடுத்து Styles காலத்தில் உள்ள உங்கள் விருப்பத்தை

தேர்வு செய்யவும்.




இதில் உள்ள Preset Designs ஏதேனும் ஒன்றை தேர்வு

செய்யவும்.


அடுத்து Customize Your Design தேர்வு செய்யவும்.

இவை அனைத்தையும் முடித்து Save கிளிக் செய்யவும்.



உங்களுக்கு அடுத்து இந்த காலம் ஓப்பன் ஆகும்.


இதிலும் Save SlideShow கொடுக்கவும்.



இறுதியாக உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.

இதில் Copy this code தேர்வு செய்யவும். இதை அப்படியே

வைத்துவிட்டு நமது பிளாக்குக்கு வரவும்.

நமது பிளாக்கில் முறையே டாஷ்போர்ட்-

தளவமைப்பு தேர்வு செய்யவும். அதில் உள்ள

கேஜட்டைசேர் தேர்வு செய்யவும்.

அதில் அடிப்படைகள் தேர்வு செய்து அதில்

HTML/JavaScript தேர்வு செய்யவும்.

உங்களுக்கு உள்ளமை தளம் ஓப்பன் ஆகும்.

அதில் நீங்கள் விரும்பும் பெயரை தலைப்பில்

சுட்டிவிட்டு உள்ளடக்கத்தில் முன்பு தேர்வு

செய்த Copythis Code - ஐ இங்கு Paste செய்து

சேமியை அழுத்தவும். உங்கள் தள முன்னோட்டம்

பார்த்தால் நீங்கள் தேர்வு செய்த படம் சிலைட்

ஷோவாக காட்சியளிக்கும்.

பிராட்பாண்ட் உபயோகிப்பவர்கள் புகைப்படத்தை

அப்படியேயும், செல்போன் மூலம் உபயோகிப்

பவர்கள் படத்தின் Resulation அளவை குறைத்தும்

பதிவேற்றலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் இல்லத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளின் சமயம் புகைப்படக்கார ரால் எடுக்கப்படுகின்ற புகைப்படங்களின் ஆல்பத்துடன் புகைப்படத்தின் சிடியையும் ஒன்று வாங்கிவிடவும். பின்னாலில் ஆல்பம் சேதம் அடையும் சமயம் அந்த சிடி உங்களுக்கு உதவக்கூடும்.


சிறுவர்களுக்கான பிரத்தியேக சேமிப்பு கணக்கு

சிறுவர்களுக்கான பிரத்தியேக சேமிப்பு கணக்கு

CANCHAMP






தங்களுக்கு நிச்சயம் 1 முதல் 12 வயது வரை குழந்தைகள்

உங்கள் வீட்டில் இருக்கும். உங்களுக்கு

தெரிந்தவர்களுக்காவவது நிச்சயம் குழந்தைகள்

இருக்கும். அவர்களின் எதிர்கால கல்விக்காக

கனராவங்கி ஆரம்பித்துள்ள சேமிப்பு கணக்குதான்

கேன்சாம்ப்(canchamp). இதில் சேர்வதால் என்ன

நன்மை என்று கேட்கிரீ்ர்களா? ஒரே கல்வித்

தகுதி உடைய இரண்டுபேர் மேல்படிப்புக்காக

வங்கியில் விண்ணப்பித்தால் கேன்சாப்

கணக்கு உள்ளவர்க்கே கேட்ட தொகை கிடைப்ப

துடன் முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த கணக்கு ஆரம்பிக்க என்ன செய்யவேண்டும்.

உங்கள் மகன் அல்லது மகள் 12 வயதுக்குள் இருக்க

வேண்டும்.

கணக்கை தொடங்க வெறும் 100 ரூபாய் போதும்.

பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கை இயக்கலாம்.

கணக்கு புத்தகம், வாரிசு நியமணம் மற்றும்

இணையதள வசதி உள்ளது.

நீங்கள் சேமிக்கும் தொகை ரூபாய் 15,000க்கும்

மேல் செல்லும் சமயம் அதை நிரந்தர வைப்பில்

மாற்றும் வசதி உண்டு்.

இக்கணக்கினை வைத்திருப்பவர் எந்த பிணைத்

தொகையும் இன்றி எதிர்காலத்தில் (+2 முடித்தவுடன்)

உயர்கல்வியைக் கற்க கல்விக்கடன் பெறும் தகுதியை

பெறுகிறார்.

இந்த கணக்கிற்கான நிபந்தனை என்னவென்றால்:-

ஒவ்வொரு அரையாண்டிலும்(ஆறு மாதத்திற்கு ஒரு

முறை) குறைந்தது இரண்டு முறை கணக்கில் பணம்

செலுத்தியிருக்கவேண்டும். இவ்வாறு செலுத்திய

மொத்த தொகை கிராம புறக் கிளைகளில் ரூபாய்

500க்கு குறையாமலும் நகர்புற கிளைகளில் ரூபாய்

1000க்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.

கணக்கிலிருந்து +2 படிப்பு முடியும் வரை செலுத்திய

தொகையினை திரும்ப பெற்றிருக்க கூடாது.

வங்கி கணக்கு ஆரம்பிக்க தேவையானவை:-

1. குழந்தையின் பிறந்த சான்றிதழ்

2. குழந்தையின் புகைப்படம்-2

3. ரேசன் கார்ட் ஜிராக்ஸ் - 1

4. ரூபாய் 100 - அல்லது அதற்கு மேலும்


வங்கி கணக்கு ஆரம்பித்ததும் உங்களுக்கு

அழகான கம்யூட்டர் மாடல் மானிட்டர்

உண்டி ஒன்று வழங்குவார்கள். அத்துடன்

புகைப்பட ஆல்பம் ஒன்றும் கையேடும்

வழங்குவார்கள்.


அவர்கள் வழங்கும் உண்டி படம் கீழே:-








குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவோ செலவு

செய்கின்றோம். அவர்கள் எதிர்கால கல்விக்காக

மாதம் ரூபாய் 100- செலவிடலாம் அல்லவா.

குழந்தைகளின் எதிர்கால கல்விக்காக இதை

பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
வங்கியில் செலுத்தும் காசேலை மற்றும் வரை ஓலை யின் தேதி மற்றும் எண்ணை தனியே வங்கி ரசீதில் குறித்து வையுங்கள். பின்னாலில் இவைகள் தவறினால் மீண்டும் பெற உதவும்.