வேலன்:-கனவு காணுங்கள்.

அன்பு தோழர்களுக்கு வணக்கம்...
தொழில்நுட்பம் சார்ந்து இல்லாது ஒரு கட்டுரையை -என் மனதில்
உள்ள ஆதங்கத்தை வெளியிட விரும்புகின்றேன். என் மனதில்
உள்ளவைகள் உண்மையிலே நடக்க கனவு காண்கின்றேன்.

பிளாஸ்டிக் தடை:- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என
கூறும்அரசு அதை கடுமையாக்க வேண்டும். முன்பு எல்லாம்
பால் கண்ணாடிபாட்டில்களில் வரும். அதைப்போல் இப்போது
மீண்டும் கண்ணாடிபாட்டில்களில் கொண்டு வரலாம்.
(அவ்வளவு பாட்டில்கள் எப்படிகையாள்வது என்பவர்களுக்கு -
பிரபல குளிர்பானங்கள் தங்கள்குளிர்பானங்களை கண்ணாடி
பாட்டில்களில் தானே வினியோகம்செய்கின்றது) .
பிரபல ஜவுளிக் கடைகளில் பிளாஸ்டிக் பைகளில்
துணிகளை போட்டு தருகின்றார்கள். அதை தவிர்த்து
துணிப்பைகளிலேஅவற்றை போட்டு தரலாம்.
அவர்களுக்கு அதுஒன்றும் பெரிய முதலீடுஇல்லை.

தண்ணீர்பாட்டில்:- பிரபல நிறுவனங்கள் தண்ணீர்பாட்டில்
களைபிளாஸ்டிக் கேனில் விற்கின்றது. அதை தவிர்த்து
கண்ணாடி பாட்டில்களில்விற்கலாம். அதிக மாக
பொதுமக்கள் கூடும் இடங்களில் அவர்களின்
தண்ணீர் ஸ்டோரேஜ் வைத்து தேவைபடுபவர்கள்
அந்த இடங்களில்தண்ணீர் பிடித்துகொண்டு காசு கொடுத்து
செல்லலாம். சமீபத்தில்ஒரு மலை மீது ஏறும் போது
வழியெங்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்இருப்பதை கண்டு
வருந்தினேன்.மலைமேல் தண்ணீர்கொண்டு செல்பவர்கள்
தண்ணீர் குடித்துவிட்டு காலி பாட்டில்களை வழியில்
போட்டுவிட்டு செல்கின்றார்கள். இதற்காக மொத்தமாக
பிளாஸ்டிக்கைதடை செய்யவேண்டும் என சொல்ல
வரவில்லை. நீண்ட காலங்களுக்குஉபயோகப்படும்
பொருட்களை பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கலாம்.
(உதாரணம்:-பிளாஸ்டிக் கதவு. மேஜை,நாற்காலி மற்றும்
எலக்ட்ரானிக்பொருட்கள் முதலியன)

மரம் நடுதல்:- தொழிற்சாலைகளுக்கு லைசன்ஸ்
கொடுக்கும் போதேகுறிப்பிட் ட அளவு மரங்கள்
தொழிற்சாலைகளில் வைக்க சொல்ல
வேண்டும். தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு
அரசு மான்யம்வழங்குகின்றது. அதை தவிர்த்து
ஒரு படம் பூஜை போடும் சமயம்ஒரு லட்சத்திற்கு
ஒரு மரம் என அவர்கள் செலவு செய்யும் பணத்திற்கு
ஒரு மரம் வைக்கலாம்.அதற்காக அரசு அவர்களுக்கு
இடம் ஒதுக்கிதரலாம். அவர்கள் வைக்கும் மரத்திற்கு
அந்த படத்திற்கு வைக்கும்பெயரையே வைக்கலாம்.
படம் தோல்வி அடைந்தாலும் மரம் வளரும்.
படம் வெளியிடும் சமயம் அரசு அதிகாரி மரங்களை
பார்வையிட்டுதமிழ் பெயருக்கு வழங்கும் மானியத்தை
மரம் வைத்ததற்காக வழங்கலாம்.
அதைப்போல் அவர்கள் வைக்கும் மரம் பட்டு
போனாலும் அதை எடுத்துவிட்டு அடுத்தவர்
எடுக்கும் படத்திற்காக மரத்தை அங்கு நடலாம்.
மின்சார லைன் செல்லும் இடங்களில் வளரும் மரத்தை
வெட்ட மின்ஊழியர் கத்தி எடுத்துக்கொண்டு செல்லுவர்.
அதை தவிர்த்து மின் ஓயர்குறிக்கிடும் இடங்களை மின்
கேபிள்களை பூமிக்கு அடியில் கொண்டுவரலாம்.

விளை நிலங்கள்:-விளை நிலங்களை போலி சான்றிதழ்
கொடுத்துகிராம அதிகாரிகள்பிளாட் போட அனுமதிக்
கின்றனர். அதனால் என்னஆகின்றது. அபரிதமானபணத்தால்
விவசாயி சோம்பேறியாகின்றான்.பகட்டு வாழ்க்கைக்கு
பழகிகொள்கின்றான். காரில் வலம் வருகின்றான்.
கிராமத்துவீட்டிற்கு ஏ.சி.போடுகின்றான்.
(அவர்கள் வீட்டிற்கு ஏ.சி .போடகூடாத என நீங்கள்
கேட்பது புரிகின்றது. கிராமத்து வீடுகளில்
இயற்கையாகவே காற்று நன்றாக வரும்).சமீபத்தில்
ஒரு ஷோ ரூம்சென்றிருந்தேன். அங்கு ஒரு கிராமத்து
பெண் வந்திருந்தார் . உடன்அவர்கள் ஊர் எலக்ட்ரீஷியனும்.
டி.வி.களை பார்ததுகொண்டு வந்தார்பெண்மணி.
அப்போது பெரிய டி.வி.யை காண்பித்து எலட்ரீஷியன்
அம்மாஇதை வாங்குங்கள் . நமது வீட்டிற்கு அருமையாக
இருக்கும் என்றார்.விலை கேட்டார் அம்மணி.ரூபாய் 35,000
என கடைக்காரர் சொல்ல -காய்கறி
கடையில் கத்தரிக்காய் முருங்கைக்காய் வாங்குவது
போல் அதில் ஒன்றுகொடு என கேட்டார்.
இந்த வசதியை பார்க்கும் பக்கத்து நிலத்துக்காரன்
நாம் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும் என தமது
நிலத்தையும் விற்றுவிடுகின்றான். நிலங்களும்
காணவில்லை- விவசாயிகளும்காணவில்லை.
விளைவு இன்று நல்ல அரிசி வாங்க போனால் கிலோ
35 ரூபாய் என்கின்றார்கள்.சர்க்கரை கிலோ 32 ரூபாய்.
வெல்லம் கிலோ42 ரூபாய். துவரம் பருப்பு
கிலோ 92 ரூபாய்.அரசாங்கள் இனியாவது
விழித்துக்கொண்டு விளைநிலங்களை கூறுபோடுவதை
தவிர்க்கவேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.

இவ்வாறு ஓவ்வோன்றாக கனவு கண்டு கொண்டு
செல்லலாம்.ஆனால் "ஊமையின் கனவினை யார் அறிவார்..."
.என ஒரு பாடல்தான் நினைவிற்கு வருகின்றது.
பதிவின் நீளம் கருதி கனவினை இத்துடன் முடிக்கின்றேன்.

உங்கள் ஆழ் மனது கருத்துக்களை வரவேற்கின்றேன்.
கருத்துக்கள் தொடர கனவுகள் தொடரும்.....

வாழ்க வளமுடன்,

வேலன்.

சுதந்திரத்தை கொண்டாடியவர்கள்:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

உங்கள் ராட் மாதவ் said...

நியாயமான கனவுகள். பலிக்கட்டும். வாழ்த்துக்கள்.

யூர்கன் க்ருகியர் said...

மிக நல்ல விடயங்களை உள்ளடக்கி இருக்கிறது .
நியாயமான ஆதங்கம்தான்.

Muthu Kumar N said...

\\துணிப்பைகளிலே அவற்றை போட்டு தரலாம்\\

இந்தக் காலத்து ஷாப்பிங் போகும் மனிதர்கள் கடையில் விற்பவர் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்தாலும்,
வாங்குபவருடைய கௌரவத்திற்கு இழுக்கு என்று கூறி துவைத்தால் அழுக்கு போக கூடிய துணிப்பையில் போட்டு கொடுத்துக்கொண்டிருந்த சிறு கிராமத்து கடையிலும் பிளாஸ்டிக் பேக்கின் பயன்படுத்துதலை தொடங்கி வைத்த பெருமை மற்றும் அதை நிறுத்தாமல் செய்வதிலும் ஆதரவு
கொடுத்துக்கொண்டுருக்கும் அருமையான மக்கள் நாம்.......

\\தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு அரசு மான்யம்வழங்குகின்றது\\

எனக்கு இதில் எள்ளவும் உடன்பாடில்லை படம் எடுப்பவர் என்ன தமிழின் மீதுள்ள
அக்கரையாலும் தமிழ் வளர்க்கவுமா படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்....

அவரவருடைய கல்லாப் பெட்டியை நிரப்பத்தான் அவரவர் ஆன மட்டும் முயற்சி செய்து கொண்டிருக்க அவர்களுக்கு மானியம் என்பது வட்டிக்கு விடும் சேட்டை பாராட்டி
ஊக்கத் தொகை கொடுப்பது போலுள்ளது.....

படத்தின் பேரை மட்டும் தமிழில் வைத்து விட்டு தமிழனின் இக்கால தறிகெட்ட போக்கிற்கு இது வரை வந்த படங்களும் ஒருவகையில் காரணமே என்றால் மிகையாகாது......

\\அதை தவிர்த்து ஒரு படம் பூஜை போடும் சமயம்ஒரு லட்சத்திற்கு ஒரு மரம் என அவர்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஒரு மரம் வைக்கலாம்.அதற்காக அரசு அவர்களுக்கு இடம் ஒதுக்கிதரலாம்\\

அவர்கள் படத்திற்கு பூஜை போடும் மற்றும் படம் எடு்க்கும் காசிற்கு சரியாக வரி கட்டினாலே எவ்வளவோ லாபம் அரசாங்கத்திற்கு அப்படி இருக்க அவர்களுக்கு மரம் வளர்க்க இடம் ஒதுக்கினால் ஐந்து மாதம்
கழித்து அந்த இடத்தில் ஒரு புதிய பங்களா முளைத்திருக்கும் அந்தப் பட அதிபருக்கு.....

\\விளை நிலங்களை போலி சான்றிதழ் கொடுத்துகிராம
அதிகாரிகள்பிளாட் போட அனுமதிக்கின்றனர்.
அதனால் என்னஆகின்றது. அபரிதமானபணத்தால்
விவசாயி சோம்பேறியாகின்றான்\\

கிராம அதிகாரிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும்
நம் இந்தியாவில் சட்டத்தை மீறி ஒரு செயல் செய்வதென்றால்
அல்வா சாப்பிடுவது போல அலாதி பிரியம், மற்றும் முடிந்த வரை இருக்கும் எல்லா தவறுகளையும் செய்து பார்த்து விடுவதி்லும், தவறு செய்து மாட்டினாலும் சட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டைகளின்
வழியே முழுவதும் அந்தக் குற்றத்திலிருந்து விடுபட்டு வருவதிலும் நம் நாட்டிற்கு
இணை நம் நாடுதான் என்று கூறவும் வேண்டுமோ.......

\\அரசாங்கள் இனியாவது விழித்துக்கொண்டு
விளைநிலங்களை கூறுபோடுவதை தவிர்க்கவேண்டும்\\

அரசாங்கம் என்றுமே விழித்துக்கொள்ளாது எனென்றால் எதுவுமே அதற்கு தெரியாமல் நடக்க வில்லை. எல்லாமே தெரிந்து மற்றும் புரிந்து மேலும் அதன் விளைவுகளை நன்கு அறிந்து தெள்ளத் தெளிவாகத்தான் அரசாங்கம் நாம் விடுதலைஆன நான்னாளிலிருந்து செயல் பட்டுக்கொண்டு வருகிறது......

எதுவுமே மாறக்கூடாது எனென்றால் எந்த மாற்றமும் மக்களுக்கு
விளங்கக்கூடாது விளங்கிவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும்
என்பதால் என்றுமே கண்ணில் கடிவாளம் கட்டிய குதிரைகளாகத்தான்
அவர்களு்கு வேண்டும் அவர்களுடைய ரத்தத்தின் ரத்தங்கள் அப்போதுதான்
உறிஞ்ச முடியும் அவர்களின் உதிரத்தை அவர்களின் உடலில் ஒட்டிய அட்டைகளாகிப்போன
அரசாங்க அதிகாரத்தி்ன் உச்சாணிக்கொம்பு முதல் ஆணிவேர் வரை பரவியுள்ள புரையோடிப்போன
புண்கள் என்று ஆறுமோ என் இந்தியத் தாய்க்கு என்று வருத்தப் படுவதை தவிர வேறொன்றும் செய்ய இயலாத வெட்டிப்பேச்சு பேசியே வேளையைக் கழிக்கும் உண்மை இந்தியன் என்பதில் என்றென்றும் பெருமிதம் கொண்டே நாளைக் கடத்திக் கொண்டிருக்கும் நமது மக்களிள் நானும் ஒருவன்......

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

RAD MADHAV கூறியது...
நியாயமான கனவுகள். பலிக்கட்டும். வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பர் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Suba கூறியது...
ம்!

இந்தியா 2020ல் வல்லரசாகும்மாம்!?

வாத்தியாரின் வகுப்பறை என்னும் வலையிலே 600+ followers. ஆனால் மனித நேயத்துடன் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_14.html)பின்னூட்டம் இட்டிருப்பவர்கள் இரண்டே பேர் (RSM, THIRUNARAYANAN). மற்றவர்கள் (http://classroom2007.blogspot.com/2009/08/blog-post_15.html)இலவசத்தை (மிட்டாய்களை) பெற அடித்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியர்களின் இந்த குணம் திருந்தும் வரை இந்தியா ஒருபோதும் முன்னேறாது. வாத்தி(யார்) இது சம்பந்தமாக ஒரு பதிவு போடலாமே!?

- இது ஒரு அப்பாவி இந்தியனின் குரல்/வேண்டுகோள்.//

தங்கள் ஆதங்கத்திற்கு வாத்தியார் அருமையான விளக்கம் கொடுத்துள்ளார். சென்று பாருங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
மிக நல்ல விடயங்களை உள்ளடக்கி இருக்கிறது .
நியாயமான ஆதங்கம்தான்//

நன்றி நண்பரே...

வாழ்க மாஸ்க்குடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
\\துணிப்பைகளிலே அவற்றை போட்டு தரலாம்\\

இந்தக் காலத்து ஷாப்பிங் போகும் மனிதர்கள் கடையில் விற்பவர் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்தாலும்,
வாங்குபவருடைய கௌரவத்திற்கு இழுக்கு என்று கூறி துவைத்தால் அழுக்கு போக கூடிய துணிப்பையில் போட்டு கொடுத்துக்கொண்டிருந்த சிறு கிராமத்து கடையிலும் பிளாஸ்டிக் பேக்கின் பயன்படுத்துதலை தொடங்கி வைத்த பெருமை மற்றும் அதை நிறுத்தாமல் செய்வதிலும் ஆதரவு
கொடுத்துக்கொண்டுருக்கும் அருமையான மக்கள் நாம்.......

\\தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு அரசு மான்யம்வழங்குகின்றது\\

எனக்கு இதில் எள்ளவும் உடன்பாடில்லை படம் எடுப்பவர் என்ன தமிழின் மீதுள்ள
அக்கரையாலும் தமிழ் வளர்க்கவுமா படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்....

அவரவருடைய கல்லாப் பெட்டியை நிரப்பத்தான் அவரவர் ஆன மட்டும் முயற்சி செய்து கொண்டிருக்க அவர்களுக்கு மானியம் என்பது வட்டிக்கு விடும் சேட்டை பாராட்டி
ஊக்கத் தொகை கொடுப்பது போலுள்ளது.....

படத்தின் பேரை மட்டும் தமிழில் வைத்து விட்டு தமிழனின் இக்கால தறிகெட்ட போக்கிற்கு இது வரை வந்த படங்களும் ஒருவகையில் காரணமே என்றால் மிகையாகாது......

\\அதை தவிர்த்து ஒரு படம் பூஜை போடும் சமயம்ஒரு லட்சத்திற்கு ஒரு மரம் என அவர்கள் செலவு செய்யும் பணத்திற்கு ஒரு மரம் வைக்கலாம்.அதற்காக அரசு அவர்களுக்கு இடம் ஒதுக்கிதரலாம்\\

அவர்கள் படத்திற்கு பூஜை போடும் மற்றும் படம் எடு்க்கும் காசிற்கு சரியாக வரி கட்டினாலே எவ்வளவோ லாபம் அரசாங்கத்திற்கு அப்படி இருக்க அவர்களுக்கு மரம் வளர்க்க இடம் ஒதுக்கினால் ஐந்து மாதம்
கழித்து அந்த இடத்தில் ஒரு புதிய பங்களா முளைத்திருக்கும் அந்தப் பட அதிபருக்கு.....

\\விளை நிலங்களை போலி சான்றிதழ் கொடுத்துகிராம
அதிகாரிகள்பிளாட் போட அனுமதிக்கின்றனர்.
அதனால் என்னஆகின்றது. அபரிதமானபணத்தால்
விவசாயி சோம்பேறியாகின்றான்\\

கிராம அதிகாரிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும்
நம் இந்தியாவில் சட்டத்தை மீறி ஒரு செயல் செய்வதென்றால்
அல்வா சாப்பிடுவது போல அலாதி பிரியம், மற்றும் முடிந்த வரை இருக்கும் எல்லா தவறுகளையும் செய்து பார்த்து விடுவதி்லும், தவறு செய்து மாட்டினாலும் சட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டைகளின்
வழியே முழுவதும் அந்தக் குற்றத்திலிருந்து விடுபட்டு வருவதிலும் நம் நாட்டிற்கு
இணை நம் நாடுதான் என்று கூறவும் வேண்டுமோ.......

\\அரசாங்கள் இனியாவது விழித்துக்கொண்டு
விளைநிலங்களை கூறுபோடுவதை தவிர்க்கவேண்டும்\\

அரசாங்கம் என்றுமே விழித்துக்கொள்ளாது எனென்றால் எதுவுமே அதற்கு தெரியாமல் நடக்க வில்லை. எல்லாமே தெரிந்து மற்றும் புரிந்து மேலும் அதன் விளைவுகளை நன்கு அறிந்து தெள்ளத் தெளிவாகத்தான் அரசாங்கம் நாம் விடுதலைஆன நான்னாளிலிருந்து செயல் பட்டுக்கொண்டு வருகிறது......

எதுவுமே மாறக்கூடாது எனென்றால் எந்த மாற்றமும் மக்களுக்கு
விளங்கக்கூடாது விளங்கிவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும்
என்பதால் என்றுமே கண்ணில் கடிவாளம் கட்டிய குதிரைகளாகத்தான்
அவர்களு்கு வேண்டும் அவர்களுடைய ரத்தத்தின் ரத்தங்கள் அப்போதுதான்
உறிஞ்ச முடியும் அவர்களின் உதிரத்தை அவர்களின் உடலில் ஒட்டிய அட்டைகளாகிப்போன
அரசாங்க அதிகாரத்தி்ன் உச்சாணிக்கொம்பு முதல் ஆணிவேர் வரை பரவியுள்ள புரையோடிப்போன
புண்கள் என்று ஆறுமோ என் இந்தியத் தாய்க்கு என்று வருத்தப் படுவதை தவிர வேறொன்றும் செய்ய இயலாத வெட்டிப்பேச்சு பேசியே வேளையைக் கழிக்கும் உண்மை இந்தியன் என்பதில் என்றென்றும் பெருமிதம் கொண்டே நாளைக் கடத்திக் கொண்டிருக்கும் நமது மக்களிள் நானும் ஒருவன்......

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

அடங்கேப்பா...எவ்வளவு நீண்ட விளக்கம்.
ஒவ்வோரு பகுதியாக எடுத்து அதை அருமையாக விளக்கி உள்ளீர்கள். என்னை விட தங்களுக்கு மனக்குமுறல்கள் அதிகம் இருக்கின்றது.
இருந்தும் நாம் என்ன செய்ய முடியும்...
கனவுதான் காண இயலும்...

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...