Monday, January 18, 2010

வேலன்:-எக்ஸெல்லில் ரோ - காலம் - ஷீட் மறைக்க

<span title=

வேர்டில் புதியவர்களுக்காக நிறைய தகவல்கள் பதி
விட்டு வருகின்றேன். அதுபோல் எக்ஸெல்லிலும்
புதியவர்களுக்காக பதிவிட உள்ளேன். நண்பரிடம்
பேசும்சமயம் எக்ஸெல்லில் ரோ - காலம் - 'ஷீட்
மறைப்பதை பற்றி பதிவிடபோகின்றேன் என்றேன்.
அதற்கு அவர் -சார் இதெல்லாம் ஒன்றுமே இல்லை
சார்...சிம்பிள் என்றார்.(அவர் எக்ஸெல்லில் கடல்
கடந்தவர்) புதியவர்களுக்கு எக்ஸெல்லில் நிறைய
வசதிகள் இருப்பது தெரியாது என்பதால் எனக்கு
தெரிந்தவற்றை இங்கு பதிவிட விரும்புகின்றேன்.
எக்ஸெல்லிலும் தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பி.....
வேலன்.

இன்றைய பதிவில் எக்ஸெல்லில் ரோ - காலம் - ஷீட்
மறைப்பதை பற்றி பார்க்கலாம். முதலில் ரோ என்றால்
என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள். எக்ஸெல்
ஒப்பன் செய்து கொள்ளுங்கள். இதில் இடமிருந்து
வலமாக செல்வது ரோ ஆகும்.1 என்கின்ற எண்ணுக்கு
நேரே A,B,C,D,E,F, என வரிசையாக செல்வதை கவனி
யுங்கள். இதில் நீங்கள் கர்சரை எங்கு வைக்கின்றீர்களோ
அதுவே அந்த செல்லினுடைய அடையாளம் ஆகும்.
அதாவது முதல் வரிசையில் 1 என்கின்ற எண்ணுக்கு
நேராக G - என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு கீழே
உங்கள் கர்சரை வைத்தால் கர்சர் வைத்த இடம்
பெட்டியாக மாறிவிடுவதை காணலாம். அந்த பெட்டி
யின் அடையாளம் G1. நீங்கள் கர்சரை எங்கு வைத்து
உள்ளீர்கள் என எழுத்தில் உங்களுக்கு A காலத்திற்கு
மேலே உள்ள கட்டத்தில் காணலாம்.
ரோ -வும் அதைப்போலதான். மேலிருந்து கீழாக உள்ள
கட்டங்கள் அனைத்தும் ரோ எனப்படும். உதாரணமாக
நீங்கள் C என்கின்ற ரோவை எடுத்தீர்களே யானால்
C1,C2,C3,C4,C5....என அவை தொடர்ந்து செல்லும்.
5 ஆவது ரோவில் நீங்கள் C -காலத்தில் கர்சரை
வைத்தால் அந்த செல்லுடைய எண் C5 ஆகும்.
ரோ - காலம் - புரிந்திருக்கும் எண் எண்ணுகின்றேன்.
இப்போது ஷீட்....அந்த எக்ஸெல் புத்தகத்தில்
பார்த்தீர்களேயானல் கீழே Sheet 1 .Sheet 2, Sheet 3  என
போட்டுள்ளதை காணலாம்...இதைப்போல் நாம்
விரும்பியவாறு 'ஷீட்டுகளை சேர்த்துக்கொண்டு
செல்லலாம்.  சரி இப்போது காலம் மறைப்பதை
பற்றி பார்க்கலாம். நீங்கள் மறைக்கவிரும்பும்காலம்வில்
மேல்புறம் கர்சரை வைத்து கிளிக் செய்யுங்கள்.
இப்போது நீங்கள் தேர்வு செய்த காலம் ஆனது
இரண்டுபுறமும் தடித்த கோடுடன் தேர்வாகி
இருப்பதை காணலாம். நான் G - காலத்தை தேர்வு
செய்துள்ளேன்.இப்போது கர்சரை அந்த காலத்தில்
வைத்து ரைட்கிளிக் செய்யுங்கள் .உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Hide என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்.
நீங்கள் தேர்வு செய்த காலம் ஆனது காணாமல் போயிருக்கும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் G காணவில்லை.
 F- ம்.H-ம் தான் உள்ளது.
இதை மீண்டும் கொண்டுவர நீங்கள் F H இரண்டு காலத்தையும்
தேர்வு செய்து மீண்டும் கர்சரால் ரைட் கிளிக் செய்யு்ஙகள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும். அதில்
Unhide கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு பழைய படி கிடைத்துவிடும். அதைப்போலவே
நீங்கள் ரோவிலும் செய்யலாம். நான் 5 ரோ வை தேர்வு
செய்துள்ளேன்.
இப்போது பாருங்கள். 4க்கு பிறகு 6 தான் வருகின்றது. 5 வது
ரோ வை காணவில்லை.
ஷீட் டை மறைக்க இதுபோல் செய்யலாம். மறைக்கவிரும்பும்
ஷீட்டை கிளிக்செய்யவும். மேலே சொன்னவாறு செய்யவும்.
இப்போது கீழே உள்ள படத்தை பாருங்கள். ஷீட் 1 க்கு பிறகு
ஷீட் 3 தான் உள்ளது.
ஷீட் 2 -ஐ கொண்டுவர மேலே சொன்னவாறு செய்யவும்.
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும்.
ஓ.கே. கொடுங்கள். நீங்கள் மறைத்த ஷீட் மீண்டும் தெரியும்.
 பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்த எக்ஸெல் பதிவில் ஓரே ஓரு செல்லை இரண்டு
வழிகளில் மறைப்பது பற்றி பதிவிடுகின்றேன்.
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
அம்மா தூங்கறாங்க...டிஸ்ரப் செய்யாதீங்க....ப்ளீஸ்....
இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.


எக்ஸெல் பற்றி தெரிந்துகொண்டவர்கள் இதுவரை:-
web counter

19 comments:

  1. நன்றி தலைவரே, கொஞ்சம் இந்த பக்கமும் வந்து பாருங்க

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றிங்க.

    அன்புடன் மஜீத்

    ReplyDelete
  3. நல்லவேளை எங்கே wordய் விட்டு வெளியே வரமாட்டீங்கலோன்னு நெனச்சேன்.புது வருட மாற்றங்கள்.

    ReplyDelete
  4. எளிமையான மற்றும் பயனுள்ள பதிவு.மேலும் நான் போட்டோஷாப்பில் எடிட் செய்த படங்களின் மேல் தமிழில் டைப் செய்வது எப்படி என்று இரண்டு முறை கேட்டிருந்தேன்.த்யவு செய்து விளக்கவும்.நான் NHM ரைட்டர் உபயோகிக்கிறேன்.

    ReplyDelete
  5. சங்கர் கூறியது...
    நன்றி தலைவரே, கொஞ்சம் இந்த பக்கமும் வந்து பாருங்கஃஃ

    தூள் கிளப்பறீங்க சங்கர்..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே்...

    வாழ்க வளமுடன்,
    'வேலன்.

    ReplyDelete
  6. பெயரில்லா கூறியது...
    பதிவுக்கு நன்றிங்க.

    அன்புடன் மஜீத்ஃஃ

    நன்றி மஜீத் சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. jailani கூறியது...
    நல்லவேளை எங்கே wordய் விட்டு வெளியே வரமாட்டீங்கலோன்னு நெனச்சேன்.புது வருட மாற்றங்கள்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. இதயம் பேசுகிறது-ஸ்ரீதர் கூறியது...
    எளிமையான மற்றும் பயனுள்ள பதிவு.மேலும் நான் போட்டோஷாப்பில் எடிட் செய்த படங்களின் மேல் தமிழில் டைப் செய்வது எப்படி என்று இரண்டு முறை கேட்டிருந்தேன்.த்யவு செய்து விளக்கவும்.நான் NHM ரைட்டர் உபயோகிக்கிறேன்ஃஃ

    விரைவில் விளக்கமாக பதிவிடுகின்றேன் நண்பரே்...தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. மிகவும் அருமை. அனைத்தும் தெளிவாக புரியும் படி சொல்லி இருக்கீர்கள்

    ReplyDelete
  10. // சங்கர் கூறியது...
    நன்றி தலைவரே, கொஞ்சம் இந்த பக்கமும் வந்து பாருங்க
    //

    Very nice info.
    I'm your follower now!

    ReplyDelete
  11. ரொம்ப நல்லாருக்கு சார்.ஆண்டி வைரஷ் பத்தி இன்னும் எழுதுங்க

    ReplyDelete
  12. நன்றி

    மேலும் அதன் பயன் என்ன என்று எனக்கு புரியல???!?!

    ReplyDelete
  13. ரமேஷ் கூறியது...
    மிகவும் அருமை. அனைத்தும் தெளிவாக புரியும் படி சொல்லி இருக்கீர்கள்//

    நன்றி ரமேஷ் சார்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. யூர்கன் க்ருகியர் கூறியது...
    // சங்கர் கூறியது...
    நன்றி தலைவரே, கொஞ்சம் இந்த பக்கமும் வந்து பாருங்க
    //

    Very nice info.
    I'm your follower now!//

    ஆகா...மற்றும் ஒரு நண்பர்...சரியான போட்டி...

    ்வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
    ரொம்ப நல்லாருக்கு சார்.ஆண்டி வைரஷ் பத்தி இன்னும் எழுதுங்கஃஃ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகின்றேன். நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. பிரியமுடன் பிரபு கூறியது...
    நன்றி

    மேலும் அதன் பயன் என்ன என்று எனக்கு புரியல???!?!

    உங்களுக்கான அதன் தேவை வரும்போது அதன் அவசியம் புரியும் நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. அண்ணாமலையான் கூறியது...
    நன்றி

    நன்றி அண்ணாமலைசார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. வேலன் அவர்களே..

    குத்தாக உள்ளவை (vertical) காலம்(column) என்றும் கிடை மட்டமாக உள்ளவை ரோஸ்(rows) என்றும் நான் படித்ததாக ஞாபகம். நீங்கள் "G-ரோவை" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். G1,G2,G3 இவை எல்லாவற்றையும் இணைத்தது G-Column தானே..?
    தவறு இருந்தால் திருத்துங்கள்..

    excel பற்றி நிரிய அறிய விடும்புகிறேன்..

    நன்றி...

    ReplyDelete
  19. வேலன் அவர்களே..

    குத்தாக உள்ளவை (vertical) காலம்(column) என்றும் கிடை மட்டமாக உள்ளவை ரோஸ்(rows) என்றும் நான் படித்ததாக ஞாபகம். நீங்கள் "G-ரோவை" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். G1,G2,G3 இவை எல்லாவற்றையும் இணைத்தது G-Column தானே..?
    தவறு இருந்தால் திருத்துங்கள்..

    excel பற்றி நிரிய அறிய விடும்புகிறேன்..

    நன்றிஃஃ

    தவறை சரி செய்துவிட்டேன் நண்பரே...
    தகவலுக்கு நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete