நாம் நமது கணிணியில் சேமித்துவைத்திருக்கும்
தகவல்கள் சிறு சிறு ஐ-கான்களாக இருக்கும்.
ஆனால் பெரும்பாலும் அவையெல்லாம ஒரே
மாதிரியாக இருக்கும். ஆனால் அந்த ஐ-கான்களையே
நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி -உள்ளே
உள்ள தகவல்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்
கொள்ளலாம். அந்த ஐ-கான் படங்களை
எவ்வாறு மாற்றுவது என இப்போது பார்க்கலாம்.
முதலில் ஏதாவது ஒரு போல்டரை தேர்வு
செய்யுங்கள். அதை கிளிக் செய்து Properties
தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Customise தேர்வு செய்யுங்கள். அப்போது
அதில் கீழே உள்ள Chang Icon என்பதை
கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ் கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த போல்டர் பயன்படுகின்றதோ அந்த
உபயோகத்திற்கு ஏற்றாற்போல படத்தை
தேர்வு செய்யுங்கள். உதாரணத்திற்கு நீங்கள்
புகைப்படங்கள் உள்ள போல்டருக்கு ஐ-கான்
படம் வைப்பதாய் இருந்தால் கேமரா படத்தை
வைக்கலாம். அதைப்போல் பாடல்கள் சம்பந்தமான
போல்டராக இருந்தால் இசை குறியீடு சம்பந்தமான
நான் ஒவ்வோரு போல்டருக்கும்
அதனதன் உள்ளே இருக்கும் தகவல்களுக்கு
ஏற்ப ஐ-கான்களை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுக்கு தேவையான ஐ-கானை தேர்வு
செய்து ஓ,கே. கொடுங்கள். இப்போது கீழே
உள்ள படத்தை பாருங்கள்.
இப்போது Change Icon என்கின்ற இடத்தில்
நாம் தேர்வு செய்த படம் வந்திருக்கும். அதில்
உள்ள Apply கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்
உங்கள் போல்டருக்கு உரிய ஐ-கான்
மாறியிருப்பதை காண்பீர்கள். சரி இதுகூட
தெரியாதா என நீங்கள் கேட்பது புரிகின்றது.
ஆனால் இதே ஐ-கான்களுக்கு நமது
புகைப்படங்கள் வைத்தால் அது எவ்வளவு
நன்றாக இருக்கும். கீழே உள்ள படத்தை
பாருங்கள். ஐ-கான்களுக்கு பதில் எனது
புகைப்டங்கள் உள்ளன.
இதை எவ்வாறு கொண்டுவருவது என
அடுத்த பதிவில் 07.02.2010 அன்று காலையில்
அதை பதிவிடுகின்றேன். அடுத்து பதிவு சற்று
ஸ்பெஷல் பதிவு.அதுவரை காத்திருப்பதற்கு
மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
இந்த மாதிரி தொங்கனா உடம்புக்கு நல்லது....
தொங்கலைனா கொம்புக்கு நல்லது..
தொங்கலைனா கொம்புக்கு நல்லது..
thank u
ReplyDeleteசூப்பரொ சூப்பர்
ReplyDeleteஅண்ணாமலையான் கூறியது...
ReplyDeletethank u//
தங்கள் வருகைக்கு நன்றி அண்ணாமலைசார்.. வாழ்க வளமுடன் வேலன்.
kathal கூறியது...
ReplyDeleteசூப்பரொ சூப்பர்//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.
உங்கள் பதிவுகளை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகிறேன்.ஒவ்வொன்றும் அருமை சகோ!!.ஸ்பெஷல் பதிவுக்காக வெயிட்டிங்.....
ReplyDeleteMrs.Menagasathia கூறியது...
ReplyDeleteஉங்கள் பதிவுகளை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகிறேன்.ஒவ்வொன்றும் அருமை சகோ!!.ஸ்பெஷல் பதிவுக்காக வெயிட்டிங்..//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
super thanks valan sir.
ReplyDeleteFile Name Tamil ?
ReplyDeletegogd evening sir, i am synudeen from saudi, my native trichy, please enakku ella photoshop padangalayum anupuvingala.. ungal blog very very super..
ReplyDeleteall the best..
live long..
...synudeen
kannan கூறியது...
ReplyDeletesuper thanks valan sir. நன்றி கண்ணன் அவர்களே.... வாழ்க வளமுடன் வேலன்.
smsheefa கூறியது...
ReplyDeletegogd evening sir, i am synudeen from saudi, my native trichy, please enakku ella photoshop padangalayum anupuvingala.. ungal blog very very super..
all the best..
live long..
...synudeenஃஃ முந்தைய பதிவுகளில் பார்த்துக்கொள்ளுங்கள். மொத்தப்பாடங்களையும் தொகுக்கும் வேலை இன்னும் ஆரம்பிக்கவில்லை.(நேரம் இல்லாததே அதற்கு காரணம்)முடித்ததும் அனுப்புகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன். வேலன்.
ghjghj கூறியது...
ReplyDeleteFile Name Tamil ? அடுத்து அதை பதிவிடுகின்றேன். நண்பரே.்... வாழ்க வளமுடன் வேலன்.