
"தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு" (குறள் #129
நாவினால் சுட்ட வடு" (குறள் #129
சில சமயம் நமக்கு இந்த அனுபவம் ஏற்படும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டு பின்னர் அதற்கு வருத்தப்படுவோம்.காதலன் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தனது மகன் பிரபுதேவாவிடம் சொல்லுவார்...இன்பமோ துன்பமோ...எது வந்தாலும் ஒன்றிலிருந்து 10 வரை எண்ணு.பின்னர் அதனை ஏற்றுக்கொள் என்பார். அதுபோல நாம் அவசரப்பட்டு மெயில் அனுப்பிவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்பட்டு பயனில்லை....அதற்காக ஜி - மெயிலில் ஒரு சின்ன செட்டிங்ஸ் செய்துவிட்டால் போதும். நீங்கள் ஜி-மெயில் அனுப்பும் சமயம் உங்களுக்கு ஒரு சின்ன கணக்குவரும் அதை நீங்கள் சரியாக போட்டாலதான் உங்களுக்கு மெயில் செல்லும்.அதை எப்படி செய்வது என பார்க்கலாம். முதலில் நீங்கள் ஜி-மெயில் ஓப்பன் செய்து பின்னர் அதில் Setting - Labs -தேர்வு செய்து அதில் உள்ள Mail Googles -எதிரில் உள்ள Enables ரேடியோ பட்டனை கிளிக் செய்து பின்னர் Save Changes கிளிக் செய்து வெளியேறவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது நீங்கள் மெயில அனுப்பும் சமயம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கணக்குடன் ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள கணக்குகளை நீங்கள் போட்டுவிட்டு பின்னர் Send அனுப்பவேண்டும்.விடை சரியாக இருந்தால்தான் மெயில் உங்களுக்கு செல்லும்.உங்களுக்கு அனுப்புபவர்மீது கோபம் இருந்தாலும் கோபம் தனிந்துவிடும்.இந்த செட்டிங்ஸ் நீங்கள் விரும்பவில்லையென்றாலும் மேற்சொன்ன வழியில் சென்று Disable செய்துவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சும்மாவே இப்படி பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது சும்மா அவ்வளவு சுலபமில்லைங்க.....
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
சும்மா சொல்லக்கூடாது. சும்மாவே கலர்புல்லாக இருக்குதுங்க. அதுலே, சும்மா கலக்கலா ஒரு கமென்ட் வேற...... சும்மா, அசத்திட்டீங்க!
ReplyDeleteநல்ல பதிவு சார்
ReplyDeleteஅட சூப்பரா இருக்கே, கலக்கல் பதிவு வேலன் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeletenalla visyamthan, ennai pondra kobakkaara pasangaluku ithu avasiam
ReplyDeleteஉபயோகமான தகவல் நண்பரே, டெக்னிக்கல் தகவலுடன் அறிவுரையும் சொன்னது அருமை, நன்றி.
ReplyDeleteஇந்த வேலையே வேணாம்
ReplyDeleteசொன்னது சொன்னதுதான் ..கதம் கதம் !!
நானும் மாப்ள யூர்கனும் ஒரேமாதிரிதான். சொன்னா சொன்னதுதான்.
ReplyDeleteவிட்ட விட்டதுதான்.
நல்ல பதிவு மாப்ஸ் . வழக்கம் போல.
velan sir,
ReplyDeletevery useful information..
super posting
thanks sir....
ஹாய் நண்பா,
ReplyDeleteஅட.., பரவாயில்லையே இது கூட நல்லாயிருக்கே...ம்ம்ம்ம்..சிலசமயம் இப்படி ஒன்னு தேவையாத் தான் இருக்கு.நன்றி நண்பா..
இத்தனை எளிமையான பதிவுகளை வேறு எங்கும் பார்க்கவில்லை.மிக அருமையாக சிந்தித்து பயனுள்ள பதிவுகளை தருகிறீர்கள்.வாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteChitra கூறியது...
ReplyDeleteசும்மா சொல்லக்கூடாது. சும்மாவே கலர்புல்லாக இருக்குதுங்க. அதுலே, சும்மா கலக்கலா ஒரு கமென்ட் வேற...... சும்மா, அசத்திட்டீங்க!//
சும்மா இருக்கும்போது சும்மா உங்கபதிவை பார்த்து சும்மா கத்துக்கிடடது சகோதரி..சும்மாவந்து வாழ்த்தியதற்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
S Maharajan கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு சார்//
நன்றி மகாராஜன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
சசிகுமார் கூறியது...
ReplyDeleteஅட சூப்பரா இருக்கே, கலக்கல் பதிவு வேலன் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசிகுமார் சார்...வருகைக்கும கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
LK கூறியது...
ReplyDeletenalla visyamthan, ennai pondra kobakkaara pasangaluku ithu avasiam//
கருத்துக்கு முதன் முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன் நண்பரே...தங்கள் போட்டோபிளாக்கில் சுவாமிபடங்கள் நன்றாக உள்ளது.தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
SUFFIX கூறியது...
ReplyDeleteஉபயோகமான தகவல் நண்பரே, டெக்னிக்கல் தகவலுடன் அறிவுரையும் சொன்னது அருமை, நன்றி.//
நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
ReplyDeleteஇந்த வேலையே வேணாம்
சொன்னது சொன்னதுதான் ..கதம் கதம் !!//
சொல்லிய வார்த்தை் - எய்த அம்பு -கடந்து போன நேரம்- எல்லாம் போனது போனதுதான்.எதற்கும் யோசித்து சொல்லவும்.வாழ்க வளமுடன்,வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteநானும் மாப்ள யூர்கனும் ஒரேமாதிரிதான். சொன்னா சொன்னதுதான்.
விட்ட விட்டதுதான்.
நல்ல பதிவு மாப்ஸ் . வழக்கம் போல.//
நன்றி மாம்ஸ் வாழ்க வளமுடன்,வேலன்.
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
ReplyDeletevelan sir,
very useful information..
super posting
thanks sir....//
நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
sumathi கூறியது...
ReplyDeleteஹாய் நண்பா,
அட.., பரவாயில்லையே இது கூட நல்லாயிருக்கே...ம்ம்ம்ம்..சிலசமயம் இப்படி ஒன்னு தேவையாத் தான் இருக்கு.நன்றி நண்பா..//
நன்றி நண்பா...வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
DEVARAJAN கூறியது...
ReplyDeleteஇத்தனை எளிமையான பதிவுகளை வேறு எங்கும் பார்க்கவில்லை.மிக அருமையாக சிந்தித்து பயனுள்ள பதிவுகளை தருகிறீர்கள்.வாழ்த்துக்கள் நண்பரே!//
உங்களைபோன்ற நண்பர்கள் தரும் உற்சாக கருத்துக்கள்தான் என்னைபோன்றவர்களை மேலும் எழுத ஊக்குவிக்கின்றது..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்வேலன்.
ஜாலி போட்டோ காக்காக்கு கலர் அடிச்சதா இல்லை , உண்மையான பறவையா. கலர் ஃபுல்லா இருக்கு.
ReplyDeleteபதிவு சூப்பர்
//Setting - Labs -தேர்வு செய்து அதில் உள்ள Mail Googles -எதிரில் உள்ள Enables ரேடியோ பட்டனை கிளிக் செய்து பின்னர் Save Changes கிளிக் செய்து வெளியேறவும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.//
ReplyDeleteநான் இன்று இதை முயற்சி செய்து பார்த்தேன்....
என்கிட்டே எதுவும் கணக்கு கேகவேயில்லை..