Monday, August 30, 2010

வேலன்-பிடிஎப்-பைலில் புகைப்படங்களை தனியே பிரிக்க


பிடிஎப் உபயோகிக்காதவர்களே இருக்கமாட்டோம். சில பிடிஎப் பைல்களி்ல் படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். பொதுவாக பிடிஎப்பிலிருந்து படங்களை எடுக்க அந்த குறிப்பிட்ட பக்கத்தை திறந்து அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பின்னர் கட்செய்து உபயோகிப்போம்.சில படங்கள் மட்டு்ம் அவ்வாறு எடுப்பதானால் பரவாயில்லை. இதுவே அதிகமான படங்கள் எடுப்பதென்றால் அவ்வளவுதான். நாம் சோர்ந்துவிடுவோம். இந்த குறையை போக்கவே இந்த சாப்ட்வேர் நமக்கு பயன்படும். 1 எம்.பி்.கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  https://pdf-image-extraction-wizard.en.softonic.com/?ex=RAMP-3582.1&rex=true செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் புகைப்படங்களை பிரிக்க விரும்பும் பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை தேர்வு செய்யவும். அடுத்து Next கொடுக்கவும். இந்த சாப்ட்வேரில் என்ன ஒரு விஷேஷம்  என்றால் ஒரு பிடிஎப் பைலில் எந்த பக்கத்திலிருந்து எந்த பக்கம் வரை நீங்கள் புகைப்படங்களை பிரிக்க விரு்ம்புகின்றீர்களோ அந்த பக்கத்தை இதில் தேர்வு செய்துகொள்ளலாம்.நான் 11 பக்கத்திருந்து 25 ஆம் பக்கம் வரை தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படங்களை வேண்டுமானால் திருப்பியும் கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். உங்களுக்கு உங்களுடைய புகைப்படமானது தனியே சேமிக்க ஆரம்பிக்கும். சிறிது நேர காத்திருங்கள்.
நீங்கள் குறிப்பிட்ட போல்டரில் நீங்கள் விரு்ம்பிய உங்களது புகைப்படங்கள் மட்டும் இருப்பதை காணலாம்.படிக்கும் மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் நன்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். 

12 comments:

  1. மிகவும் பயனுள்ள நல்லதொரு பதிவு மென்பொருள் அனைவருக்கும் பயன்படும்....

    பகிர்ந்தமைக்கு நன்றி சார்....

    ReplyDelete
  2. நன்றி! நன்றி!! மிகவும் பயனுள்ள மென்பொருள்.
    மா.மணி

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள மென்பொருள்.

    ReplyDelete
  4. மாணவன் கூறியது...
    மிகவும் பயனுள்ள நல்லதொரு பதிவு மென்பொருள் அனைவருக்கும் பயன்படும்....

    பகிர்ந்தமைக்கு நன்றி சார்.ஃ

    நன்றி சிம்பு சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. Manickam கூறியது...
    நன்றி! நன்றி!! மிகவும் பயனுள்ள மென்பொருள்.
    மா.மணிஃ

    நன்றி மாணிக்கம் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. அப்பாதுரை கூறியது...
    நன்றிஃ

    நன்றி அப்பாதுரை சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. வெறும்பய கூறியது...
    மிகவும் பயனுள்ள மென்பொருள்ஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. Chitra கூறியது...
    :-)ஃ


    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. சசிகுமார் கூறியது...
    அருமை சார்


    நன்றி சசிகுமார்..தங்களது வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete