Sunday, July 31, 2011

வேலன்-ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும்


புது புது நோய்கள்-புது புது வைத்தியங்கள். இன்று இருக்கும் உடல்நிலை நாளை இருப்பதில்லை..நேற்றுவரை நன்றாக இருந்தார்ப்பா...இன்று இப்படி ஆகிவிட்டது என்று புலம்புவார்கள். நோய்வாய்பட்டவர்கள் இறைவனிடம் வரம்கேட்டால் எனது முன்பிருந்த நல்ல உடல்நிலையை கொடு என்பார்கள்.ஆனால் இறைவனும் வருவதில்லை..வரமும் தருவதில்லை....சரி...நாம் கம்யூட்டருக்கு வருவோம். இதே சூழ்நிலை நமது கம்யூட்டருக்கு வரலாம். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும். தீடிரென்று வேலைகளில் முரண்டுபிடிக்கும். இவ்வாறான சமயங்களில் நாம் நமது பழைய நிலைக்கு நமது கம்யூட்டரை கொண்டு செல்லலாம். புதிய ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதையும் செயல்ப்டுத்துவதையும் இன்று பார்க்கலாம்.நமது கம்யூட்டர் நல்ல நிலையில் உள்ளபோதே நாம் ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்கி வைத்துக்கொள்வது நல்லது..முதலில் Start-Help and Support கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வலதுபக்கம் Performance and Maintenance கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் System Restore to undo change கிளிக் செய்யவும். இப்போழுது இடதுபக்கம் Run the system restore wizard கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Create a Restore Point என்பதில் எதிரே உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். 
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரையோ அல்லது அன்றைய தேதியையோ தட்டச்சு செய்யுங்கள்.
கீழே உள்ள Create என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சில நொடிகளில் புதிய ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குளோஸ் செய்து வெளியேறிவிடுங்கள். சில நாட்கள் கழித்து உங்களுக்கு மீண்டும் பழைய நிலைக்கு கம்யூட்டரை உபயோகிக்கும் நிலை வந்தால் மீண்டும் பழையபடி Start-Help and Support center கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்  வலதுபக்கம் Performance and Maintenance கிளிக் செய்யவும். திறக்கின்ற விண்டோவில் System Restore to undo change கிளிக் செய்யவும். இப்போழுது இடதுபக்கம் Run the system restore wizard கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Restore my computer to an earlier time என்பதில் எதிரே உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் நீங்கள் நல்ல நிலையில் கம்யூட்டர் உள்ளபோது குறித்துவைத்த தேதி - அல்லது பெயரை கிளிக் செய்யவும்.
next கொடுக்கவும். சில நொடிகள் காத்திருங்கள். உங்களுக்கு பழைய நிலைக்கு கம்யூட்டர் மாறிவிடும்.புதியதாக ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதையும் அதனை பயன்படுத்துவதையும் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? நீங்களும் புதிய பாயிண்ட் உருவாக்கிபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Friday, July 22, 2011

வேலன்-கடித முகவரிகளை சுலபமாக பிரிண்ட் செய்ய

பக்கம் பக்கமாக கடிதம் தட்டச்சு செய்து எழுதுவோம்...ஆனால் முகவரி மட்டும் கையில் எழுதுவோம். வேர்டில் அதற்கான செட்டிங்ஸ் இருந்தாலும் நமக்கு பொறுமை இருப்பதில்லை. அந்த குறையை போக்க இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 1 எம்.பி.க்கும் குறைவான அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் From அட்ரஸ்பாரில் நமது பெயரும் To வில் அனுப்புவரது பெயர்களும் தட்டச்சு செய்துவிடவும். முழு முகவரி தட்டச்சு செய்து முடித்ததும் சேவ் கொடுக்கவும்.உங்களுக்கு To என்பதின் கீழே உள்ள Name பாக்ஸின் கடைசியில் உள்ள சின்ன கட்டத்தை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள்கொடுத்த பொறுநரது முகவரி இருக்கும்.தேவையான முகவரியை செலக்ட் செய்தால் முதல் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளும்.
 From  கடட்தத்தில உங்களது முகவரியும் To கட்டத்தில் பெறுநருடைய முகவரியையும் தட்டச்சு செய்து சேவ் கொடுங்கள். இதனைப்போல நீங்கள் எவ்வளவு முகவரி தட்டச்சு செய்கின்றீர்களோ அனைத்தையும் தட்டச்சு செய்து சேவ் செய்துகொள்ளுங்கள். 
யாருக்கு கடிதம் அனுப்ப போகின்றீர்களோ அப்போது இந்த அப்ளிகேஷனை திறந்துகொண்டு பெறுநருடைய கட்டத்தில் உள்ள சிறிய கட்டத்தினை கிளிக் செய்கையில் நீங்கள் உள்ளீடு செய்த அனைத்து முகவரிகளும் தெரியும். தேவையானதை செலக்ட் செய்து பின்னர் நேரடியாக பிரிண்ட் கொடுத்துக்கொள்ளலாம்.பிரிண்டரின் அளவினையும் செட் செய்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



Thursday, July 21, 2011

வேலன்-சிலிம் ப்ரவுஸர்.


விதவிதமான ப்ரவ்சர்கள் இருந்தாலும் நிறைந்த வசதி-குறைந்த அளவில் இந்த சிலிம் ப்ரவ்சர் உள்ளது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


இதில் முதலில் உள்ள பைல் டேபினை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் நாம் பார்க்கும் இணைய பக்கத்தின் சேவ் செய்வதுடன் -புகைப்படம் இல்லாமலும் - பக்கம் மட்டுமோ சேமிக்கலாம்.இணைய பக்கத்தினை இ-மெயி்ல் அனுப்பலாம்.
இதில் உள்ள பெவரைட் கிளிக் செய்வது மூலம் வேண்டிய இன்னபிற வசதிகளையும்பெறலாம். 
ஜிமெயில் -மேப் -முதலிய பிற வசதிகளையும் எளிதில் பெறலாம்.

 மொழிபெயர்ப்பையும் எளிதில் செய்யலாம்.

சின்ன சாப்ட்வேரில் பலபல வசதிகள் உள்ள இதனை பயன்படுத்த பயன்படுத்த ஆச்சரியங்கள் நமக்கு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
இந்த ஸ்லிம் ப்ரவ்சரில் உள்ள வசதிகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள 
இங் குகிளிக் செய்யவும்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

Wednesday, July 20, 2011

வேலன்-போட்டோஷாப்-விதவிதமான ஸ்டைல் எழுத்துக்கள்.

 விதவிதமான டிசைன்களில் நாம் எழுத்துக்கள் கொண்டுவந்தாலும் ரெடிமேடாக கிடைக்கும் ஸ்டைல்களே அழகு அதிகம். போட்டோஷாப்பில் பயன்படும் விதவிதமான ஸ்டைல்களில் சுமார் 15 ஸ்டைல்கள் இங்கே இணைத்துள்ளேன்.1 எம்.பிக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். வேண்டிய அளவினில் புதிய விண்டோவினை திறந்துகொள்ளவும்.தேவையான வார்த்தையை தட்டச்சு செய்துகொள்ளவும். இப்போது கீபோர்டில் F9 அழுத்தவும் வரும் விண்டோவில் ஸ்டைல் என்பதனை தேர்வு செய்யவும். உங்களுக்கு ஸ்டைல்கள் நிறைய தோன்றும். இப்போது வலதுபக்க மூலையில் உள்ள சிறிய அம்புகுறியை கிளிக் செய்யவும்.தோன்றும் பாப்அப்மெனுவில் Load Style கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் கணிணியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ஸ்டைல்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்யுங்கள்.இப்போது மீண்டும் வார்த்தையை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான ஸ்டைலை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான ....நொடியில் ஸ்டைலுக்கு ஏற்ப உங்கள் எழுத்துக்ள் மாறிவிடும்.சில ஸ்டைல்லான பெயர்கள் கீழே-







நீங்களும் பெயர்களை தட்டச்சு செய்து விதவிதமாக ஸ்லைடல் செய்துகொள்ளுங்கள. திருமண டிசைன் செய்யும் ஸ்டுடியோ நண்பர்களுக்கு இது பெருமளவில் உதவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, July 19, 2011

வேலன்-படைப்புகள் தானே சேமிக்க

சம்சாரம் வெளியே போனால் தோராயமாக எப்போது வருவார்கள் என சொல்லலாம். ஆனால் மின்சாரம் போனால் எப்போது வரும் என்றே சொல்ல் முடியாது. இன்றைய கால கட்டத்தில் எப்போதுவேண்டுமானாலும் செல்லலாம்.முக்கியமான கடிதம் -போட்டோ-கணக்கு என்று பிஸியாக கம்யூட்டரில் வேலை செய்துகொண்டு இருப்போம். கடைசி நேரத்தில் கரக்டாக கரண்ட் கட்டாகும். அதே நேரத்தில் நம்மிடம் உள்ள யுபிஎஸ்-ஸீம் சார்ஜ் நிக்காமல் ரீ-ஸ்டார்ட ஆகும். எல்லா நேரமும் நாம் அப்ளிகேஷன்களில் ஆட்டோ சேவ் செட் செய்திட மறந்துவிடுவோம்.இனி கவலைகள் வேண்டாம். இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்துவிட்டால் போதும். தானே சேமிக்கும் வேலையை 70 கே.பி. அள்வுள்ள இந்த சாப்ட்வேர் செய்துவிடும்.இதனை பதிவிறக்க் செய்ய இங்கு கிளிக் https://www.door2windows.com/autosaver-save-the-file-you-are-working-on-automatically/  செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 15 செகண்ட்டிலிருந்து 10 நிமிடம் வரை உள்ள எந்த கால கட்டத்தில் நீங்கள் படைப்புகளை சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த கட்டத்தை கிளிக் செய்து Hide கிளிக் செய்துவிடுங்கள். 

இனி நீங்கள் வழக்கப்படி படைப்புகள் உருவாக்கலாம். கரண்ட் போனாலும் கவலையில்லை. நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தில் தானாகவே சேமித்து வைத்துவிடும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழக் வளமுடன்.
வேலன்.

Friday, July 15, 2011

வேலன்-ஒரே சாப்ட்வேரில் 12 வகையான சாலிடர் சீட்டு விளையாட்டு

எல்லா விளையாட்டுக்களும் குழந்தைகளுக்கு தானா? பெரியவர்களுக்கு என்று  விளையாட விளையாட்டுகள் இல்லையா என்று வயதில் மூத்த நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக இந்த சாலிடர் விளையாட்டு..6 எம்.பி. கொள்ளளவு சொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
இதில் விதவிதமான 12 வகையான சாலிடர் விளையாட்டுக்கள் உள்ளது.
தேவையான விளையாட்டினை கிளிக் செய்யவும்.பக்கத்தில் உள்ள விண்டோவில் பிரிவியு தெரியும்.
விளையாட்டு மைதானத்தின் பின்புற நிறத்தையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதைப்போலவே விளையாடும் கார்டின் பின்புற் உருவத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
அதில் காணப்பட்ட ஒரு விளையாடடு கீழே. இதில் கூட்டுத்தொகை 18வருவதுபோல கார்டுக்ள சேர்க்கவேண்டும். 18 எண்ணிக்கை வந்ததும் கார்ட் மறைந்துவிடும்.
இது வழக்கமாக ரெம்மி சேர்க்கும் விளையாட்டு-ஒரே குறியில் உள்ள கார்ட்டுகளை சேர்க்கவேண்டும்.
அனைத்துவிதமான விளையாட்டுக்களுக்கும் உதவி குறிப்பு உள்ளதால் விளையாட்டில் ஏதும் சந்தேகம் இருந்தாலும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


Thursday, July 14, 2011

வேலன்- மவுஸில் ஸ்கேட்டிங் செய்ய


சாப்ட்வேர்களை பற்றியே பதிவிட்டிருந்தால் புதியவர்களுக்கு கணிணியில் உள்ள சின்ன சின்ன வசதிகள் பற்றி தெரியாமல் போய்விடும்.இன்றைய பதிவில் புதியவர்களுக்காக அதனை காணலாம்.ஸ்கேட்டிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.நமது மவுஸையும் ஸ்கேட்டிங் செய்யவைக்கலாம்.நீங்கள் ஸ்கோரல் வீல் உள்ள மவுஸ் உபயோகிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு அவசியம் பயன்படும்.பொதுவாக நாம் ஒரு நீண்ட பக்கத்தினை பார்க்கையில் -படிக்கும் சமயத்தில் சைட் பாரில் உள்ள கட்டத்தினை அழுத்திஇழுக்க பக்கங்கள் நாம் பார்கவிரும்பும் பக்கத்திற்கு  முன்போ-பின்போ சென்றுவிடும்.இப்போதுதான் இந்த ஸ்கோரல் வீல் உள்ள மவுஸ் நமக்கு உதவ வருகின்றது.எதாவது ஒரு இடத்தில் வைத்து மவுஸில் உள்ள ஸ்கோரல் வீலை அழுத்திப்பிடிக்கவும்.இப்போழுது நமது கர்சரானது இரு அம்புகுறிகொண்டதாக மாறிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இப்போழுது விஐல அழுத்தியவாறு மவுஸை முன்புறம் லேசாக தள்ளினால் அந்த திசையில் நமது டெக்ஸ் நகரத்துவங்கும்.தேவையான இடம் வந்ததும் கர்சரை எதிர் திசையில் நகர்த்த டெக்ஸ்ட் நகர்வது நின்றுவிடும்.இந்த வசதி அனைத்து புரோகிராம்களிலும் வேலை செய்யாது என்றாலும் இமெயில் புரோகிராம்களிலும் வேர்ட்களிலும் மற்றும் சில இணைய தளங்களிலும் வேலை செய்கின்றது. ஒரு முறை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, July 12, 2011

வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்போட்டோ எடுக்க

பாஸ்போர்ட் போட்டோ முதற்கொண்டு மேக்ஸி சைஸ் வரை புகைப்படங்கள் அளவிறகு கொண்டுவர போட்டோஷாப் அப்ளிகேஷன்கள் அவசியம்.ஆனால் போட்டோஷாப் இல்லாமலேயே நாம் பாஸ்போர்ட் புகைப்படங்கள் கொண்டுவரலாம். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Step:-1 ல் உள்ள Add a Passport Photo கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள போட்டேவினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு ஒரு நீள் வட்டமும் அதை சுற்றி செவ்வகமும் கிடைக்கும் நீள்வட்டத்தினை நீங்கள் முகத்துக்கு ஏற்றார்போல சரியாக பொருத்தவும்.
இப்போது வலது பக்கம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் வேண்டுமோ அந்த நாட்டினுடையதை தேர்வு செய்யுங்கள்.அதன் கீழேயே போட்டோ அளவுகளை மாற்றுதலுக்காக நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். மேலும் போடோவில் நாம் நமது விருப்பமான வார்த்தைகளையும் கொண்டுவரலாம்.
ஒ.கே.கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எவ்வளவு புகைப்படம் தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
போட்டோ பிரிண்ட் சைஸையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
கடைசியாக ஓ,கே.கொடுங்கள். உங்களுக்கு போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட் போட்டோ ரெடி.குறிப்பாக இது டிரையல் விஷன் பதிப்பு. நன்றாக இருந்தால் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



Sunday, July 3, 2011

வேலன்-பைல் பிளண்டர்(File Blender)

வேண்டிய பொருளை கொண்டுவாருங்கள்.அருமையான சமையல் ரெடி அதுபோல நீங்கள் எந்த அப்ளிகேஷனையும் கொண்டுவாருங்கள்.வேண்டியவாறு மாற்றி கொடுத்துவிடும்.புகைப்படங்கள்.வீடியோ,பாடல்கள்.பிடிஎப் பைல்கள் என ஒவ்வொன்றையும் வேண்டியவாறு மாற்ற ஒவ்வொரு சாப்ட்வேராக நாம் தேடி ஓட வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில நீங்கள் எதை வேண்டுமானாலும் கொடுங்கள் நிமிடத்தில் வேண்டியவாறு மாற்றிக்கொடுத்துவிடும்.11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நடுவில் கிளிக் செய்தோ-பைலை டிராப் செய்தோ இந்த விண்டோவில் கொண்டுவந்து போடவும்.நான் பிடிஎப் பைலை இதன்மூலம் தேர்வு செய்துள்ளேன்.இதில் பிடிஎப் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவோ - அல்லது பிரிக்கவோ செய்யலாம்.
 பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க இதில் உள்ள Encrypt/Decrypt கிளிக் செய்யவும்.அப்போழுது கீழ்கண்ட விண்டோ ஒப்ப்ன ஆகும். அதில தேவையான பாஸ்வேர்ட் தட்டச்சு செய்து ஓ,கே.கொடுக்கவும். 
மீண்டும் நீங்கள் பைலை திறக்க விரும்பினால் இந்த சாப்ட்வேரில் அதை போட்டு மீண்டும் பாஸ்வேரட் தட்டச்சு செய்தால் தான் பைலை திறக்க முடியும்.
அதைப்போலவே வீடியோ பைலை இதில் உள்ளீடு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் எது தேவையோ அதை தேர்வு செய்யவும்.
 புகைப்படத்தை தேர்வு செய்து இதில் உள்ளீடு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்தை Convert-Invert-Resize-Rotate Left-Rotate Right-Set as Wallpaper- Encrypt/Decrypt என அதுவேண்டுமானாலும் செய்யலாம்.

நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Friday, July 1, 2011

வேலன்-பயிர்கள் vs பூச்சியினங்கள்.

பயிர்களை பூச்சிஇனங்கள் அழித்துவிடும். பூச்சிகளிடம் இருந்து நாம் பயிர்களை காப்பாற்றவேண்டும். ஒவ்வொரு லெவல் செல்ல செல்ல நமக்கு விதவிதமான அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே செல்லும். 45 எம்.பி.கொள்ளளவு கொண்டஇதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வரும் விண்டோவில் உங்களது பெயரை தட்டச்சு செய்யுங்கள்.
நடந்துவரும் பூச்சி வகைகளை அழித்துக்கொண்டே இருங்கள்.

இறுதியில் வெற்றி பெறுங்கள். ஒவ்வொரு படிநிலை செல்ல செல்ல வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும் விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.