பிடிஎப் பைல்களை உபயோகிக்காதவர்களே இருக்க முடியாது. சில பிடிஎப் பைல்களில் உள்ள சில பக்கங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். அதுபோல சில பக்கங்களை நீக்க வேண்டி இருக்கும். சில பிடிஎப் பைல்களை ஒன்றுசேர்த்து ஒரே பிடிஎப் பைல்களாக மாற்றவேண்டி இருக்கும்.சில விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள். தலைவலி.சுளுக்கு.முக்கடைப்பு,என அனைத்துவித வலிகளுக்கும் உள்ள ஒரே வலி நிவாரணி என்று விளம்பரப்படுத்துவார்கள். அதுபோல் இந்த சாப்ட்வேர் அனைத்து வித பிடிஎப் பைல்களின் வேலைகளை எளிதில் செய்துமுடிக்கின்றது.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ADD பட்டனை கிளிக்செய்தோ-டிராப் செய்தோ பிடிஎப் பைல்களை கொண்டுவரலாம்.இப்போழுது கீழே உள்ள டேப்புகளை பாருங்கள். இதில் குறிப்பிட்ட பக்கத்தை நீக்க சேர்க்க.பிரிக்க என வசதிகள் உள்ளது. நீங்கள் பக்க எண் மட்டும்கொடுத்தால் போதுமானது.ஒற்றை பக்க எண்களிலோ- இரட்டை பக்க எண்களிலோ எதை வேண்டுமானாலும் நீக்க -சேர்க்க - பிரிக்க செய்யலாம்.
இரண்டு தனிதனி பிடிஎப் பைல்களை ஒரே பைலாக மாற்றிவிடலாம்.ஒரே பைலை பக்க வரிசைப்படி பிரித்துவிடலாம்.நீங்கள் எப்படி விரும்புகின்றீர்களோ அவ்வாறு செய்து பின்னர் கீழே உள்ள டேக் ஆக்ஷன் கிளிக் செய்தால் போதுமானது.நீங்கள் கட்டளை இட்ட பணி முடிந்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமிக்க விரும்பிய இடத்தில அதனை சென்று பார்க்கலாம். இது டெமோ வெர்ஷனாக உள்ளதால் நன்றாக இருப்பின் வாங்கிகொள்ளுங்கள்.அதுவரை பயன்படுத்திப்பாருங்கள்கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பயனுள்ள பதிவு. நன்றி.
ReplyDeletepayanulla... avasiyamana... arumaiyana... pakirvu.
ReplyDeletevazhththukkal.
காந்தி பனங்கூர் said...
ReplyDeleteபயனுள்ள பதிவு. நன்றி.
ஃஃ
நன்றி காந்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
சே.குமார் said...
ReplyDeletepayanulla... avasiyamana... arumaiyana... pakirvu.
vazhththukkal.ஃஃ
நன்றி குமார் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Your softwares and others are working in old version of windows os only. Is it working in windows 7? M.ARUL, akasharul@yahoo.com
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதிரு.வேலன் அவர்களுக்கு மிக்க நன்றி.
தமிழில் இதுபோன்ற விளக்கங்களுடன் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் மென்பொருட்களைப் பற்றிய விவரம் இதுவரை வரவில்லை என்று நினைக்கிறேன்.
தங்களது பணி மேலும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
மீண்டும் ஒருமுறை நன்றி.
மு.வேணுகோபால்