Thursday, May 31, 2012

வேலன்:-சமையல் விளையாட்டு


ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் பெண்குழந்தைகள் சமையல் விளையாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். சின்ன சின்ன சமையல் பாத்திரங்கள் வாங்கி சமைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களுக்கான இந்த சின்ன விளையாட்டு இது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

ப்ரிட்ஜில் தேவையான பொருட்கள் இருக்கும். நமக்கு லிஸ்ட் இருக்கும. தேவையானதை எடுத்து விரைவாக சமைக்கவேண்டும். 



நேர நிர்ணயம் உள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சமைத்து முடிக்கவேண்டும்.குழந்தைகளுக்கு உண்மையில் சமைக்கும்போது வேகம் இயல்பாகவே வந்துவிடும். சமைத்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, May 27, 2012

வேலன்:-எந்த அப்ளிகேஷன்களிலும் ரெடிமேட் வார்த்தைகளை சேர்க்க.


அடிக்கடி பயன்படுத்தும் முகவரிகள்.சொற்கள்.என அனைத்தையும் ரெடிமேடாக வைத்துக்கொண்டு தேவைப்படும் இடத்தில் அதைபயன்படுத்தினால் எவ்வளவு வசதியாக இருக்கும். அந்த வசதியை இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு தருகின்றது.24 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் டெக்ஸ்ட் என்னும் இடத்தில் உங்களுககு தேவையான டெக்ஸ்ட்டை தட்டச்சு செய்துகொள்ளவும். பிறகு இதில் உள்ள ஷார்ட்கட் கீகளை தேர்வு செய்து இறுதியாக Add கிளிக் செய்யவும். நீங்கள் :தேர்வு செய்த வார்த்தை மேலே உள்ள பெட்டிக்கு சென்று விடும். இதுபோல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்-முகவரிகள் அனைத்தையும் தட்டச்சு செய்து அதற்கான ஷார்ட்கட் வார்த்தைளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போழுது நீங்கள் உபயோகிக்க விரும்பும் எந்த அப்ளிகேஷன்கள் -இணையதளங்கள் -இ-மெயில் என எதைவேண்டுமானாலும் திறந்துகொள்ளுங்கள். தேவைப்படும் இடத்தில் இந்த ஷார்ட்கட் கீயை பயன்படுத்துங்கள். நேரம் -வேலை மிச்சமாவதை கண்கூடாக குறைவதை உணர்வீர்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, May 20, 2012

வேலன்:-கம்யூட்டர் இன்ஜினியர்.

வீட்டினை பார்த்துக்கொள்ள ஒரு மகாலட்சுமி வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல நமது கம்யூட்டரை நன்கு பார்த்துக்கொள்ள ஒரு சாப்ட்வேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கம்யூட்டர் மெயின்டனஸ்க்காக நாம் செய்யும் அனைத்துப்பணிகளையும் இந்த சின்ன சாப்ட்வேர் நமது ஒரு கிளிக் மூலம் செய்து முடிக்கின்றது.Wise PC Engineer என பெயருடன் 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் Registry Utility,Disk Utility,Other Utility  என மூன்றுவிதமான Utility கள் கிடைக்கும். Registry Utility யில் Registry Backup.Registry Clean.Registy Defrog மற்றும் Startup Programme Manager என யுடிலிட்டிகள் உள்ளன. தேவையானதை நாம் தேர்வு செய்துபயன்படுத்தலாம். மேலும் Disk Utility யில Disk Cleaner.Disk Defregment.File recovery File Scrap என பல உபயோகமான யுடிலிட்டிகள் உள்ளது.
இதில் உள்ள Disk Defragment கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. இதில் வண்ணவண்ண சதுரமான சின்ன கட்டங்கள் நமது பார்வைக்கு தெரிந்து ஒழுங்கான வடிவில் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.'
கடைசியாக Other Utility  memory optimizer.Auto shotdown.,File Hidern.File Encrypter  என பல யுடிலிட்டிகள் இருக்கும்.Memory Optimizer கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
மற்ற சாப்ட்வேர்களில் இல்லாத சிறப்பு அம்சமாக பைல் ரெகவரி இதில் உள்ளது.இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நல்ல நிலையில் உள்ள பைல்களை நாம் தேர்வு செய்து நமது டிரைவில் சேமித்து பின்னர் பயன்படுத்தலாம்.இந்த் சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, May 17, 2012

வேலன்:-விலங்குகளின் அழகிய வால்பேப்பர்கள்.

காட்டுவிலங்குளானாலும் சரி - வீட்டு விலங்குகளானாலும் சரி..அழகிய கேமராவில் படம் பிடித்து அதை பார்ப்பதிலே அலாதி இன்பம். இங்கு 40 வகையான விலங்குகளின் புகைப்படத்தின் வால்பேப்பர்கள் இணைத்துள்ளேன். 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.. தேவையான விலங்கினை நீங்கள் உங்கள் டெக்ஸ்டாப்பின் வால்பேப்பர்களாக வைத்துக்கொள்ளலாம்.










பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, May 13, 2012

வேலன்:- விண்வெளியில் ஆங்கிரி பார்ட்ஸ்-Angry Birds Space

ஆங்கிரி பர்ட்ஸ் விளையாடதவர்கள் இருக்கமுடியாது.அதுவே இப்போது விண்வெளியில் விளையாடும் விளையாட்டுபோல் வந்துள்ளது.40 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.





















இதில் நீங்கள் எந்த இடத்தை தாக்கப்போகின்றீர்களோ அந்த இடத்தை குறிப்பிட்டு கர்சரை விடுவித்தால் குறிப்பிட்ட இடம்சென்று தாக்கும்...உங்களுகக்கு ஒவ்வொரு பாயிண்டாக ஏறிக்கொண்டே இருக்கும்.விறுவிறுப்புக்கு குறை இருக்காது.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, May 8, 2012

வேலன்:-வியாபாரிகளுக்கான கால்குலேட்டர்

விதவிதமான கால்குலேட்டர்கள் இருப்பினும் புதியதாக இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
இதில் வலதுபுறம் கீபோரட் இருக்கும் அதில் கணக்கினை நீங்கள் போட பக்கத்தில் உள்ள நோட்பேடில் விவரம் உங்களுக்கு கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் டெஸிமல் 0 விலிருந்து 9வரை கொண்டுவரலாம்.
மேலும வணிக நிறுவணங்கள் வரிபோடும் வசதிஉள்ளதால் இதில் உள்ள + டேக்ஸ் மற்றும் வரியை குறைக்க -டேக்ஸ் வசதியும் உள்ளது. எந்த அளவு டேக்ஸ் வேண்டுமோ அதனை நாம்நிர்ணயித்துக்கொள்ளலாம்.
இதில் நேரடியாக பிரிண்ட்எடுக்கும் வசதிஉள்ளதால் நாம் தேவையான விவரம் தட்டச்சு செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.வியாபாரிகளுக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, May 6, 2012

வேலன்:-ஆவிகளுடன் விளையாடும் விளையாட்டு

ஆவிகளுடன் உங்களுக்கு விளையாட விருப்பமா? இந்த விளையாட்டு உங்கள் குறையை நிவர்த்தி செய்யும். சற்று பெரிய விளையாட்டான 520 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.







மேலே உள்ள படத்தில ;உள்ள பொருட்களை நீங்கள் கண்டுபிடிக்கவேண்டும. இருட்டாக உள்ள இடங்களுக்கு உதவ உங்களுக்கு டார்ச்லைட்டும் கிடைக்கும். மேலும் கேமராவும்உங்களுக்கு கைவசம் கிடைக்கும.

சவகாசமாக ஆவி நடமாடுவதை மேலே உள்ள படத்தில் கவனியுங்கள.குழந்தைகளை தனியே விளையாட விடவேண்டாம். இதில் ஆஸ்பத்திரியில் உள்ள பிணகுடோனிலிருந்து பிரேதம் எழுந்துவரும். மேலும் பிரேதத்திலிருந்து ரத்தம் எடுதது நாம் சோதனை செய்ய வேண்டிவரலாம்.நீங்களும் சற்று துணிச்சலுடன் விளையாடிப்பாருங்கள்.கருத்துதுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.