Wednesday, January 30, 2013

வேலன்:-பாஸ்போர்ட் புகைப்படம் தயார் செய்ய

புகைப்படத்திலிருந்து உடனடியாக பாஸ்போர்ட் புகைப்படம் தயார் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.United States,.United Kingdom என இரண்டுவிதமான பாஸ்போர்ட்கள் நாம் தயார் செய்யலாம்.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://passport-photo-software.com/ செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமக்கு தேவையான நாட்டினை தேர்வு செய்யவும்.  

இதில் உள்ள Select Photo File கிளிக் செய்து உங்களிடம் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள அம்புகுறியை நகர்த்தி போட்டோவின் தேவையான அளவினை சேட் செய்யுங்கள். மேலும் இதில் Contrast.மற்றும் Brightness அட்ஜஸ்ட் செய்யலாம்.இறுதியாக இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 தேவையான புகைப்படம் தேர்வு செய்து பிரிண்ட் கொடுக்கவும்.உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படம் கிடைக்கும். 


இது டிரையல் விஷன்தான் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துகளை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 27, 2013

வேலன்:-திருமண ஆல்பம் சுலபமாக தயாரிக்க - Wedding Album Maker.

திருமணம் என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீக செய்யவும. இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள + பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.


இதில் Add.,Add All.Delete.90+ Text.Auto Adjust.Background Music.More Options என நிறைய டேப்புகள் இருக்கும். இதில் சில புகைப்படங்கள் vertical மற்றும்  Horizontal போஷிஷனில் ;இருக்கும். இவ்வாறு Vertical போஷிஷனில் இருக்கும் புகைப்டத்தினை நாம் Horizontala மாற்ற இதில் உள்ள 90+ கிளிக் செய்து அட்ஜஸ்ட் செய்யலாம்.மேலும் இதில் உள்ள Test கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் Transition.Pans& Zoon.Text.Artclips.subtilte process என ஆறுவிதமான டேப்புகள் இருக்கும். இதில் உள்ள Transtion கிளிக் செய்ய உங்களுக்கு வரும் விண்டோவில் புகைப்படங்களுக்கு இடையில் வரும் Transtion Effect தேர்வு செய்யலாம். இதில் உள்ள Transtion Effect களை கீழேகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள...
 இதில் உள்ள Text கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வேண்டிய பாண்ட்அளவினையும் எபெக்ட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
 இதில் அடுத்துள்ள Art Clips கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 வித நிகழ்ச்சிகளுக்கான விதவிதமான ஆர்ட் கிளிப்புகள் இருக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
அடுத்துள்ள டேப்பில் சப் டைட்டில் இருக்கும் நாம் நமக் குதேவையான சப் டைடிலை தேர் வு செய்துகொள்லாம்.


சில புகைப்படங்கள் வெளிச்சம் அதிகமாகவும் சில புகைப்படங்கள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும. அவ்வாறான புகைப்படங்களுக்கு இதில ;உள்ள பிரைட்,கான்ட்ராஸ்ட் கிளிக் செய்வது மூலம நாம புகைப்படத்தின்  தரத்தினை மேம்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய வசதியாக இதில வலது புறம் நாம் தேர் வுசெய்த புகைப்படங்கள் வரிசையாக இருக்கும் தேவையானதை கிளிக் செய்து மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.


இந்த அனைத்து பணிகளும் முடிந்தபின் இதில் உள்ள Done அழுத்தவும். பின்னர மெயின் விண்டோவிற்கு வரவும். இதில் Album Photo.Transition & Music.Album Theme என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Album Photo வில் தான் நாம் இவ்வளவு வேலைகளையும் செய்தோம். இனி இரண்டாவதாக உள்ள Transition &Music கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் கம்யூட்டரில் இருந்து தேவையான பாடல்களை தேர்வு செய்யவும். திருமணத்திற்கு ஏற்ற பாடலை தேர்வு செய்யவும்.சோக பாடல்களை தவிர்த்துவிடவும்.பாடலை கட் செய்யும் வசதி உள்ளதால் தேவையான வரிகளை மட்டும் சேர்க்கலாம். 


இப்போது இதில் உள்ள Transition பற்றி பார்க்கலாம் நாம் விரும்பமான எபெக்ட் கொண்டுவந்து அது எவ்வளவு நேரத்தில் மாற வேண்டும் என செகண்ட் களும ;இதில செட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக இதில விதவிதமான தீம் கள் உள்ளது. அதில் வரும் கூடுதல் எபெக்ட்களும் நாம் செட் செய்து அதனையும் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது. 
இதில் இரண்டாவது டேப்பில் உள்ள Choose Menu கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பபன் ஆகும். இதில் திருமணம் ம்ட்டும் அல்லாமல் பிறந்தநாள் காதுகுத்தல் வேறு விஷேஷங்களுக்கும் நாம் இதில செட் செய்துகொள்ளலாம். இதில் திருமணத்திற்கு என்று 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள்.
 வலதுபுற விண்டோவில் விதவிதமான டிசைன்களை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் ;தேவையானதை கிளிக் செய்தால் போதும் உங்கள் புகைப்படத்தின் முகப்பில வந்து அந்த டிசைன் அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள.


அனைத்துபணிகளும் முடிந்ததும் நாம் இதில் உள்ள ப்ரிவியூவிண்டோவில் நாம் செட் செய்த ஆல்பத்தினை ப்ரிவியூ ஓடவிடலாம். தவறுகள் மாறுதல்கள்இருந்தால் நாம் திருத்திக்கொள்ளலாம்.ஒரு படம் ஓடும் சமயம்தான் அதில் உள்ள நிறை குறைகள் நமக்கு தெரியவரும். நண்பர் அல்லது உறவினர் வைத்துகொண்டு இதில் உள்ள குறை நிறைகளை நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள் ளவிண்டோவில் பாருங்கள்.


இறுதியாக இதில் உள்ள Burn Disc கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் இதில் நாம் நமது வீடியோவினை நமது கம்யூட்டரில் சேமித்துவைக்கலாம். அல்லது டிவிடியாக கூட இதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.


வீடியோ பார்மெட் வகைகளை கீழே உள்ள விண்டோவில் காணலாம் நாம் வீடியோவினை எங்கு பார்க்கபோகின்றோமோ அதற்கு ஏற்ப வீடியோ பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் இதில் செல்போன்;,யூ டியூப்,ஆன்ட்ராயிட்,வெப் ஆல்பம்,புளு ரே டிஸ்க்.எப்எல்வி மூவி,டிவிக்ஸ் என நமக்கு தேவையான பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கீழே அவர்கள் கொடுத்துள்ள பார்மெட்டுக்களை பாருங்கள்.
இறுதியாக இதில் உள்ள Create Now பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள் ஆல்பமாக மாற ஆரம்பிக்கும்.. எவ்வளவு நேரம் ஆகும் என்பதனை இதில் உள்ள ஸ்லைடர் மூலம் நாம் எளிதில அறிந்துகொள்ளலாம்.

இரண்டு மூன்று முறை முயற்சி செய்துபாருங்கள் இறுதியில் அட்டகாசமான வீடியோ உங்களுக்கு கிடைக்கும்.. இதனை நண்பர்கள்.உறவினர்களுக்கும்  பகுதிநேர வேலையாக செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, January 24, 2013

வேலன்.:-புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர


புகைப்படங்களில் அனிமேஷன் கொண்டுவர வழக்கமாக நாம் அடோப் கம்பனியின் அடோப்  இமேஜ் ரெடி சாப்ட்வேரினை பயன்படுத்துவோம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் அடோப் இமேஜ் ரெடி சாப்ட்வேர் செய்யும் வேலையை சுலபமாக செய்து முடிக்கின்றது.  1 எம்.பி.க்கும் குறைந்த கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். டவுண்லோடு செய்து கிளிக் செய்ததம்  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உங்களிடம் உள்ள புகைப்படங்களை டிராக் அன்ட் டிராப் முறையில்இழுத்துவந்து போடவும். பின்னர் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் இடையில் எவ்வளவு செகண்ட் இடைவெளி வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து நீங்கள் அதன் தரத்தின் அளவினை இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள அனிமேட் கிளிக்செய்யவும்.உங்களுடையய அனிமேஷன் செய்யப்பட்ட பைல் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்யுங்கள். இப்போது சிறிது நேரம் காத்திருங்கள்.உங்களது இமேஜ் ப்ராசசிங் ஆவதினை இதில் உள்ள லைடர் நகர்வது மூலம் நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்…கீழே உள்ளவிண்டோவினை பாருங்கள்.
பணி செய்து அனிமேஷன் ரெடியானதும் நீங்கள் சேமித்துவைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தால் உங்கள் அனிமேஷன் படம் கிடைத்திருக்கும்.. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, January 21, 2013

வேலன்:-புகைப்படங்களை டிவிடியாக மாற்ற


நம்மிடம் உள்ள புகைப்படங்களை டிவிடியாக மாற்ற நிறைய சாப்ட்வேர் இருந்தாலும் புதியதாக இந்த சாப்ட்வேரினையும் நாம் பார்க்கலாம். 13 எம்.பி.கொள்ளள்வு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்..இதில் உள்ள ஸ்டேப் ஒன் கிளிக் செய்து உங்களுடைய புகைப்படங்களை தேர்வு செய்யவும்.இதில் புகைப்படங்கள் இடதுபுறம் வந்துவிடும். இந்த புகைப்படங்களின் கீழே உள்ள சிலைடரை நகர்ற புகைப்படங்களின் அளவினை பெரியதாக்கி பார்க்கலாம்.
வலதுபுறம் நமக்கு Edit Preview என்கின்ற ஆப்ஷன் கிடைக்கும. இதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வேண்டிய ஆப்ஷனை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
இப்போழுது நெக்ஸ்ட் கிளிக்செய்து  அடுத்த ஸ்டெப் செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்திற்கு தேவையான பாடல்களை நாம் தேர்வு செய்யலாம் பாடலை அப்போழுதே கேட்கும்வசதியும் உள்ளது. 
நெக்ஸ் கிளிக் செய்ய அடுத்த ஸ்டேப் கிடைக்கும். அதில் நமக்கு வேண்டிய அளவினை தேர்வு செய்துகொள்ளலாம்.
ஸ்டெப் 4 ல் உங்களுக்கு உங்களுடைய புகைப்படங்கள் டிவிடியாக மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக உங்களுடைய டிவிடி எப்படி வேண்டும் என்பதனை தேர்வு செய்துகொள்ளுங்கள.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் கம்யூட்டரிலேயே இதனை டிவிடியாக சேமிததுவைக்கும் வசதி உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, January 18, 2013

வேலன்:-நேரத்தின் அருமை அறிந்துகொள்ள

சிலருக்கு வேலை செய்யும் சமயம் அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.. வீடு,மனைவி.குழந்தைகள்.உணவு என எதுவும் அவர்களுக்கு நினைவுக்கு வராது.அதே சமயம் குறிப்பிட்ட நேரத்தில் பைலை பார்ப்பதாகட்டும் இணைய தளம் பார்ப்பதாகட்டும் நமக்கு இந்த சின்ன சாப்ட்வேர் அலாரம் அடித்து நமக்கு உதவுகின்றது.4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் Task Name  என்பதில் கிளிக் செய்ய நமக்கு Reminder.Open File.Open Web.Run Program.Play Music.Standby.Shutdown.Restart.Log off.Lock என 10 விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.Open File என்பதில் நமக்கு தேவையான பைலை தேர்வு செய்து நேரத்தை செட் செய்துவிட்டால் அந்த நேரத்தில அந்த பைலானது ஓப்பன் ஆகிவிடும்.
 குறிப்பிட்ட நேரத்தில் நாம் இணைய தளம் ஓப்பன்  செய்ய வேண்டும் என்றால் நேரத்தை செட்செய்து பின்னர் அதில் உள்ள Website பாக்ஸில் நமக்கு தேவைப்படும் யூஆர்எல் முகவரியை தட்டச்சு செய்து பின்னர் Create கிளிக் செய்யவும்.குறிப்பிட்ட நேரத்தில் நாம் எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் இணைய தளம் தானே ஓப்பன் ஆகிவிடும்.
 அதனைப்போலவே குறிப்பிடட நேரத்தில் நாம் பாடலை கேட்கவேண்டும் என்றால் நமது கம்யூட்டரில் உள்ள பாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.பாடலை அப்போழுதே கேட்கும் வசதியும் உள்ளது:.
குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து வீடியோவினை பதிவிறக்கம் செய்கின்றோம். வீடியோ பதிவிறக்கம் ஆகும் வரை நாம் காத்திருக்கதேவையில்லை.இதில் உள்ள நேரத்தை செட் செய்து நமது கம்யூட்டரை ShutDown செய்துவிடலாம்.ரீ ஸ்டார்ட்.லாக் ஆப்.லாக் என செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 13, 2013

வேலன்:-உங்கள் ஆங்கில இலக்கணம் திறமை அறிந்தகொள்ள


7 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான ஆங்கில இலக்கணத்தை சோதனை செய்ய இந்த சின்ன பிளாஷ் பயன்படுகினறது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கான ஆங்கில இலக்கண கேள்விகள் கேட்கப்படும்.இதற்கான சரியான விடையையும் கீழே கொடுத்திருப்பார்கள்.எது சரியான விடையோ அதனை கிளிக் செய்து கீழே உள்ள சப்மிட் கிளிக் செய்யவும்.
உங்களது சரியான விடையாக இருந்தால் பக்கத்தில் உள்ள கட்டத்தில் பச்சை நிறமும் விடை தவறாக இருந்தால் ஆரஞ் நிறமும் கிடைக்கும். கீழே கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கும். 
ஒரு கேள்வி முடிந்து அடுத்த கேள்வி வரும் சமயம் முந்தைய கேள்விக்கான சரியான விடை கீழே டிஸ்பிளே ஆகும். 50 கேள்விகள் முடிவில் நீங்கள் எடுத்த ஸ்கோர் விவரம் தெரியவரும். சின்ன பசங்களுக்கான கேள்விகள் என்றாலும் உங்களது ஆங்கில இலக்கணத்திறனை நீங்களும் சோதித்துப்பாருங்களேன்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, January 10, 2013

வேலன்:-புகைப்படங்களை பிடிஎப் ஆக மாற்ற -win scan 2 pdf

சில அலுவலகங்களுக்கு புகைப்படங்கள் பார்க்க அனுமதி இல்லை. ஆனால் பிடிஎப் பைல்களாக புகைப்படங்களை பார்க்கலாம். நாம் மெயில் அனுப்பினாலும் புகைப்படங்களை பார்க்க முடியாது. பிடிஎப் ஆகதான் அனுப்ப முடியும். அவ்வாறு நம்மிடம் உள்ள புகைப்படங்களை பிடிஎப் பைல்களாக நொடியில் மாற்றுவதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் புகைப்படங்களை தேர்வு செய்தோ - டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தோ இதில் உள்ள விண்டோவில் விடவும்.
இதில ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் நாம் பார்ககவிரும்பும் பைலை தேர்வு செய்து இதில் உள்ள Show Picture ஐ கிளிக் செய் யநமது புகைப்படத்தினை பார்க்கலம்.புகைப்படங்களை பார்த்துவிட்டீர்களா..சரி ..இப்போது நாம் இதில உள்ள toPDF கிளிக் செய்ய நமது புகைப்படங்கள் பிடிஎப் பைல்களாக மாறி இருக்கும. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, January 6, 2013

வேலன்:-இயர் பிளானர் -Year Planner.

புத்தாண்டில் டைரிகளை விரும்பி வாங்கி வைப்போம். வாங்குவதோடு சரி..சிலர் தான் அதனை பயன்படுத்துவார்கள்.கம்யூட்டரில் அதிகம் பயன்பபடுத்துபவர்கள் தனியே டைரிகளை குறித்துவைப்பது இல்லை. அவர்களுக்காகவே இந்த கம்யூட்டர் டைரி பயன்படுகின்றது. இதில் வருடத்தின் 365 நாட்களும் நமக்கு தெரியவரும். 609 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை டவுண்லோடு செய்தது அதன் ஐ-கானை கிளிக் செய்ய  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் தற்போதைய வருடம் நமக்கு தெரியவரும் மேலும் 2009 முதல் 2036 வரையிலான காலண்டர் நமக்கு கிடைக்கும். இருபத்துஐந்து வருடம் கழித்து வருகின்ற தேதியையும் கிழமையும் நாம் அறிந்துகொள்ளலாம்.இதில் உள்ள New கிளிக் செய்ய உங்களுக்கு New Legent என்கின்ற விண்டோ ஓப்பன் ஆகும. இதில் ஆரம்ப மற்றும் முடிவு தேதியினை நாம் நிர்ணயம் செய்துகொள்ளலாம். தகவல் குறிப்பதற்கும் தனியே காலம் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இது தவிர குறிப்பிட்ட தேதிகளில் வரும் திருமணம்,பிறந்தநாள் மற்றும் சுபநிகழ்ச்சிகளையும் இதில் குறித்துவைக்கலாம். இதில் உள்ள காலண்டரில் நீங்கள் எந்த தேதியை குறிக்க விரும்புகின்றீர்களோ அந்த தேதியில் வைத்து கர்சரை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள New கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் உங்களுக்கான குறிப்புகளை குறித்துவைக்கவும்.நேரம்,அப்பாயிண்ட்மெண்ட் ப்ரியாரிட்டி.அப்பாயிண்ட்மெண்ட டிஸ்கிரீப்ஷன் மற்றும் அப்பாயிண்ட்மெண்ட பற்றிய குறிப்புகளை விரிவாக எழுதிவைக்கலாம்.இறுதியாக இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போழுது நீங்கள் காலண்டரில் சென்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட தேதியானது போல்ட் லெட்டரில் காட்சியளிக்கும். அதனை கிளிக் செய்தால் நாம் குறிப்பிட்ட அப்பாயிண்ட்மேண்ட விவரம் தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, January 3, 2013

வேலன்:-டிரைன் செல்லும் பாதையை உடனுக்குடன்அறிந்துகொள்ள

உறவினர்கள்-  விருந்தினர்களை டிரைன் ஏற்றிவிட்டாலும் சரி அவர்கள் ஊரிலிருந்து வந்தாலும் சரி...அவர்கள் டிரைனில் எந்த ஊரில் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வரும் ஊருக்கு அருகாமையில் உள்ள ஸ்டேஷன் பெயர் என்ன? குறிப்பிட்ட ஸ்டேஷனுக்கு டிரைன் வரும் நேரம் என்ன,? டிரைன் எவ்வளவு நேரம் காலதாமதமாக வருகின்றது என அனைத்து விவரங்களையும் நாம் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம். பொதுமக்கம் வசதிக்காக இந்திய ரயில்களின் இயக்கத்தினை ஆன்லைன் மூலம் மேப் (வரைபடம்)பில் அறிந்து கொள்ள ரயில்வே துறை இந்த இணையதளத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதள் முகவரி காண இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் டிரைன் மற்றும் ஸ்டேஷன் என இரண்டு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். 
உங்களுக்கு டிரைன் பெயர் மற்றும் டிரைன் எண் தெரிந்தால் அதில் உள்ள விண்டோவில் தட்டச்சு செய்து கோ கொடுங்கள். உங்களுக்கான அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் குறிப்பிட்ட ஸ்டேஷனில் இருந்தால் அந்த ஸடேஷனில் அடுத்து வரும் டிரைன் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.நான் இப்போது கீழே உள்ள விண்டோவில் டிரைன் எண் கொடுத்துள்ளேன். 
இதில் முதல் ஸ்டேப் வரும் ...பின்னர் உங்களுக்கான டிரைனை கிளிக் செய்து இதில் உள்ள  நெக்ஸ்ட் பட்டனை அழுத்தவும். இப்போது உங்களுக்கு அடுத்த ஸ்டேப் வரும். இதில் டிரைன் புறப்பட்ட நேரம்,சேரும் நேரம் அறிந்துதுகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
முன்றாவது ஸ்டெப்பில் நாம் டிரைனின் அப்போதைய நிலவரம் அறிந்துகொள்லாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். டிரைன் எந்த லோகேஷனில் உள்ளது என்பதனையும் எந்த ஸ்டேஷனை கடந்துள்ளது அடுத்து வரவிருக்கும் ஸ்டேஷன் விவரத்தினையும் எளிதில அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள ஸ்டேப் 4 அழுத்த உங்களுக்கு கூகுளின் மேப் ஓப்பன் ஆகும். இதில் உங்களுக்கான டிரைன் எந்த இடத்தில் வந்துகொண்டு இருக்கின்றது என்கின்ற விவரமும் டிரைன் பாதை மஞ்சள் நிறத்திலும் தெரியவரும். மேலும் இதில் பாப்அப்பாக வரும் விண்டோவில் அன்றைய தேதி,உங்கள் டிரைன் விவரம்,கடந்து சென்ற ஸ்டேஷன்;,தாமதமாக வந்தால் தாமதமான நேரம:.டிரைன் நிற்கும் அடுத்த ஸ்டேஷன் போன்ற விவரங்கள்தெரியவரும். 
இந்த மேப்பில் நீங்கள் இந்தியாவின் எந்த இடத்தினையும் கிளிக்செய்து அந்த இடத்தில் அந்த நேரத்தில் எந்த டிரைன் போகின்றது என்கின்ற விவரங்களை அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். நீலம் மற்றும் சிகப்பு நிற அம்புகுறிகள். இருக்கும்.
கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்க்ள. அதில் இந்திய  அளவில் மொத்தமாக அப்போது எத்தனை டிரைன்கள் ஓடுகின்றது..அதில் எவ்வளவு டிரைன்கள் சரியான நேரம் எவ்வளவு டிரைன்கள் காலதாமதமாக வந்து கொண்டு இருக்கின்றது என்கின்ற புள்ளிவிரங்களை மேலே தோன்றும் விண்டோ மூலம ;அறிந்துகொள்ளலாம்.
இதில் கூடுதல் வசதி என்ன என்றால் லைவ் ஆக ஒரு டிரைன் எந்த இரயில் நிலையங்களுக்கு இடையில் சென்று கொண்டு இருக்கின்றது.எவ்வளவு நேரம் தாமதமாக வருகின்றது.அடுத்த நிறுத்தம் எந்த ஸ்டேஷன். மேலும் எந்த எந்த ஸடேஷன்களில் இது நின்று செல்லும் என்ற விவரங்களை ஆன்லைன் மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். மேலும் டிரைன்களின் இயக்கத்தினை ஆன்லைனில் இந்திய வரைபடத்தில் கூகுள் வரைபடம் மூலம் அறிந்துகொள்ளலாம்.டிரைன் புறப்படும் இடத்திலிருந்து சேரும் வரை உள்ள இடங்கள்,ரயில் நிலையங்கள்.அம்புக்குறியுடன் நாம் காணலாம்.
இனி யாரை வேண்டுமானாலும் டிரைனில் ஏற்றிவிட்டு அவர்கள் ;டிரைன் இப்போது எந்த ஸ்டேஷன் போய்கொண்டு இருக்கின்றது. அடுத்து எந்த ஸ்டேஷன் வரும் என்கின்ற விவரங்களை கொடுத்துக்கொண்டே இருக்கலாம். செல்போன் மூலமும் நாம் தகவல்களை அறிந்துகொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். மற்றவர்களுக்கும் இந்த தளத்தினை பற்றி சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.