Tuesday, April 30, 2013

வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பிரிண்ட்செய்திட


புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு மாற்றி தேவையான அளவிற்கும் தேவையான எண்ணிக்கைக்கும் பிரிண்ட் செய்திட நாம் போட்டோஷாப்பினை பயன்படுத்துவோம். ஆனால் போட்டோஷாப் துணையில்லாமல் இந்த பணிகளை செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.3 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://download.cnet.com/primg/3000-18488_4-75836592.htmlசெய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள புகைப்படங்களின் போல்டரை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.உங்களுடைய புகைப்படங்கள் தம்ப்நெயில் வியூவில் நமக்கு தெரியவரும்.

 வருகின்ற விண்டோவில் நமக்கு தேவையான புகைப்படத்தினை தனிதனி புகைப்படமாக பார்வையிட புகைப்படத்தினை கிளிக் செய்திடவும். இப்போது புகைப்படம் நமக்கு சிங்கில் புகைப்படமாக தெரியவரும்.
 இப்போது இதில் உள்ள மூன்றாவது டேபான Multiple Fixed Form கிளிக் செய்து நமக்கு தேவையான புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு மாற்றிக்கொள்ளவும் மேலும் புகைப்படங்கள் எத்தனை ரோ வரவேண்டும் -எத்தனை காலங்கள் வரவேண்டும் என்பதனையும் முடிவு செய்துகொள்ளவும்.


இதில் உள்ள பேஜ் செட்டப் கிளிக்  செய்து பின்னர் பிரிண்ட ஆப்ஷன் கிளிக் செய்து உங்களுக்கு தேவையான புகைப்படங்களை பிரிண்ட செய்துகொள்ளவும்.போட்டோஷாப் துணையில்லாமல் இந்த சாப்ட்வேர் பயன்படுவதால் அவசரத்திற்கு இது அவசியமானதாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.


Tuesday, April 23, 2013

வேலன்:-ஸ்கிரின்ஷாட் புகைப்படத்தில் வேண்டிய எபெக்ட் கொண்டுவர

 ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் புகைப்படங்களை வேண்டிய அளவிற்கு எடுக்கவும்.வேண்டிய எபெக்ட் கொண்டுவரவும் இந்த சாபட்வேர் உதவுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமக்கு வேண்டிய புகைப்படத்தின் நீள அகல அளவினை தேர்வு செய்து இதில் உள்ள Start கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில்  புகைப்படத்தின் வேண்டிய பாகத்தினையோ முழுவதுமாகவோ தேர்வு செய்யவும். பிறகு நாம் நமது புகைப்படத்தினை எந்த எபெக்ட்டுக்கு தேவையோ அந்த எபெக்ட் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
 தேர்வு செய்த புகைப்படத்தின் எபெக்ட்டில் வேண்டிய அளவினை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் இந்த புகைப்படத்தினை தேர்வு செய்துள்ளேன். 
இந்த புகைப்படத்தினை Sepia எபெக்ட்டுக்கு மாற்றிய பின் வந்துள்ள படம் கீழே.
இவ்வாறு நாம் நமது புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதனை வேண்டிய எபெக்ட் கொடுத்து வேண்டி இடத்தில் சேமித்துவைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.             வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.

Thursday, April 11, 2013

வேலன்:-புகைப்படங்களை கார்டூன் படமாக மாற்ற

நம்மிடம் உள்ள புகைப்படங்களை விதவிதமான கார்ட்டுன் படங்களாக மாற்ற நாம் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்களிடம் உள்ள நீங்கள் மாற்றவிரும்பும் புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
இதில் நீங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கு Crop and Edit,File Name.Size.Status என 4 விதமான டேப்புகள் கிடைக்கும். இதில் உள்ள Crop and Edit கிளிக் செய்திட வரும் விண்டோவில் நீங்கள் புகைப்படத்தினை தேவையான அளவு கட் செய்திடலாம். மேலும் புகைப்படத்தில் கலர் மற்றும் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்திடலாம்.இறுதியாக இதில் உள்ள ஓ.கே.பட்டனை கிளிக் செய்திடவும். மேலும் இதில் உள்ள Output Path விண்டோவில் நீங்கள் படத்தினை சேமிக்கவிரும்பும் இடத்தை தேர்வு செய்யவும். இதில் உள்ள Choose the Cartoon Effect கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் 60 விதவிதமான கார்டுன் மாடல்கள் இருக்கும் தேவையானதை கிளிக் செய்யவும்.
கீழே உள்ள புகைப்படத்தினை நான் தேர்வு செய்துள்ளேன்.


கார்ட்டூன் மாற்றத்திற்கு பின்னர் வந்துள்ள படம் கீழே:-



பாண்டிச்சேரி கடற்கரையில் எடுக்கப்பட்ட படம் கீழே:-
மாற்றத்திற்கு பின் வந்துள்ள படம் கீழே:-


படங்களை நீங்கள் தேர்வு செய்து மாற்றங்கள் நிகழ சில நிமிடங்கள் ஆகின்றது. அதற்கான தகவல்நமக்கு கிடைக்கின்றது. இறுதியாக ஓ.கே.என வந்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, April 5, 2013

வேலன்:-கார்ட்ரேக்கவரி.Card Recovery

தவறுதலாக அழிந்துவிட்ட பைல்களை மீட்டுஎடுக்க் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்  https://www.cardrecovery.com/செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

இதில் உள்ள Next கிளிக் செய்திட உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எதிலிருந்து தகவல்கள் எடுக்க விரும்புகின்றோமோ அதனை தேர்வு செய்யவும். உதாரணத்திற்கு பென்டிரைவ்,ஹார்ட்டிரைவ்.மெமரி கார்ட் என எதுதேவையோ அதனுடைய டிரைவ் லெட்டரை  தேர்ந்தெடுக்கவும். இதில் போட்டோ -வீடியோ -ஆடியோ எதுவேண்டுமோ அதனை கிளிக் செய்திடவும்.

 எங்கு சேமிக்கவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்திடுங்கள்.நீங்கள் சேமிக்கவிரும்பும் இடம் அதிககொள்ளளவு காலி இடமாக இருத்தல்வேண்டும்.அடுத்து இதில் உள்ள Next கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இறுதியாக நீங்கள் டெலிட்செய்திட்ட அனைத்துபைல்களும் உங்களுக்கு ப்ரிவியுவில் தெரியவரும்.
தேவையானதை தேர்வு செய்து ஓ.கே.தரவும். உங்களுக்கான இடத்தில் பைல்கள் சேமிக்கும்.பின்னர் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஞர்பகமறதிகாரணமாக அடிக்கடி பைல்களை டெலிட்செய்பவர்கள் இந்த சாப்ட்வேரினைபயன்படுத்திக்கொள்ளலாம்.பயனப்டுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Monday, April 1, 2013

வேலன்:-பாண்ட்களை பார்க்க-FONTLIST-பாகம்-3


FONTLIST:-
நம்மிடம் உள்ள பாண்டகளை காண ஒவ்வொரு கம்பெனிகாரரும் ஒவ்வொருவிதமான சாப்ட்வேர்க்ளை வைத்துள்ளார்கள். இந்த Fontlist சாப்ட்வேரில நமது பாண்ட்களை எப்படி காண்பிக்கின்றார்கள் என பார்க்கலாம்.70 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Sample Text விண்டோவில் நமக்கு தேவையான வார்த்தையை தட்டச்சு செய்யவும. நான் Velang.blogspot.com என்கின்ற வார்த்தையை தட்டச்சு செய்துள்ளேன்.மேலும் இவர்களை நம்மிடம் உள்ள பாண்ட்களை எச்டிஎம்எல் பைலாக எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தினை குறிப்பிடவும.

 ஓ.கே.கொடுத்து வெளியேறி குறிபிட்ட இடத்தில் எச்டிஎம்எல் பைலை திறக்கவும.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும.
இதில் ஒவ்வொரு பாண்டின் பெயரும் அந்த பாண்டில் வரும் வார்தையின் வடிவமைப்பும் நமக்கு தெரியவரும்.மேலும் இதன் வலதுமுலையில் பாண்ட் அளவினை பெரியதாக மாற்றி பாரப்பதற்கும் அதன் செரக்டர் அளவினை அறிந்துகொள்ளவும் முடியும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                                                                                                                     வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.