Sunday, June 30, 2013

வேலன்:-வீடியோக்களை முழுநீள படமாக மாற்ற

நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியொக்களை இணைத்த முழு நிள வீடியோ படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் உதவு கின்றது.23 எம்.பி. கொள்ளளவு  கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் உள்ள ADD Fils மற்றும் Add Folder மூலம் நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீயோக்களை தேர்வு  செய்யுவம்.இதன் வலதுபக்கம் வீடியொக்களுக்கான டிரான்ஸ்சாக்சன்கள் கொடுத்துள்ளார்கள் தேவையானதை டபுள் கிளிக் செய்திட இரண்டு வீடியோக்களுக்கு நடுவில் வந்து அமர்நதுகொள்ளும்.
 இதில்  நமது வீடியோவினை கிராப் செய்வதற்கும் பாடல்கள் சேர்ப்பதற்கும் வசதிகள் கொடுததுள்ளார்கள். 
அனைத்து பணிகளும் முடிந்தபின் இறதியாக இதில் உள்ள Create Movie கிளிக் செய்திட உங்களுக்கான வீடியோக்களானது படமாக மாறும்.நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியொ படங்களை முழுநீள படமாக மாற்றி மற்றவர்களுக்கு கொடுத்து மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, June 26, 2013

வேலன்:-ePub பைல்களை PDF-ஆக கன்வர்ட் செய்ய

e-Pub வகை பைல்களை நாம் அதற்காக உள்ள e-Pub ரீடரில்தான் படிக்க முடியும். ஆனால் எல்லோரிடமும் அந்த ரீடர் இருக்காது அல்லவா..அதனால் நம்மிடம் உள்ள e-Pub புத்தககங்களை பிடிஎப் ஆக மாற்றிக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக் குகீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும. 
இதில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களிடம் உள்ள e-Pub பைல்களை பிடிஎப்பாக மாற்றுவதற்கும் உங்கள் எச்டிஎம.எல் பைல்களை பிடிஎப்பாக மாற்றுவதற்கும் இரண்டு டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.நாம் முதலில் e-Pub பைலினை பிடிஎப்பாக மாற்றுவதை காணலாம்.இதில் உள்ள ஆட் பைலில் உங்களிடம் உள்ள e-Pub தேர்வு செய்யவும்.
இதில் உள்ள நெக்ஸ் அழுத்தவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.உங்களது பைல் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். அடுத்து இதில் பேஜ் அளவு - பாண்ட்களின்அளவு -பேஜ் உயரம்,செட் செய்துகொள்ளவும்.
உங்கள் ரீடரின் அளவினை இதில் உள்ள ஸ்கோரலை கிளிக் செய்து தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.



இறுதியாக மீண்டும் நெக்ஸ் கிளிக் செய்யவும.உங்களுக்கான e-Pub பைலானது பிடிஎப் பைலாக மாறிவிட்டிருக்கும.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதனைப்போலவே எச்டிஎம்எல் பைலினையும் நாம் பிடிஎப் பைலாக மாற்றிவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                   வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.

Thursday, June 13, 2013

வேலன்:-மொழியை எளிதில் அறிந்துகொள்ள

தமிழ்.ஆங்கிலம்,உருது.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.இந்தி ஆகிய மொழிகளை நாம் ஒரளவு தெரிந்துவைத்திருப்போம். எழுத்துருக்களை பார்க்கும் சமயம் நாம் இந்த மொழி என எளிதில் அறிந்துகொள்ள முடியும். ஆனால் சில மொழிகளை பார்க்கும் சமயம் நமக்கு அது எந்த மொழி என்றே தெரியாது.இவ்வாறு மொழிகளை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 470 மொழிகளை இனம் கண்டுகொள்ள இந்த சாப்ட்வேர் வழிவகை செய்கின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மொழியை தேர்வு செய்தோ - அல்லது -பேஸ்ட் செய்தோகொள்ளவும்.இதில் உள்ள Recognize Language அல்லது கீ-போர்ட்டில் F9 அழுத்தவும். சில வினாடிகளில் நாம் தேர்வு செய்த எழுத்து எந்த மொழி என நமக்கு கீழ்உள்ள விண்டோவில்  தெரியவரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நான் நமது தமிழ்மொழியை தேர்வு செய்துகொடுத்துள்ளேன்.கீழே உள்ள  விண்டோவில் பாருங்கள்.
இதில் நமது எழுத்துருவின் அளவினை நாம் விரும்பும் அளவிற்கு எளிதில் மாற்றிக்கொள்ளளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Sunday, June 9, 2013

வேலன்:-விதவிதமான அப்ளிகேஷன்கள் -ஒரே சாப்ட்வேரில்.

XTREME CALCULATOR என பெயரிட்டுள்ள இந்த சாப்ட்வேரில் நோட்ஸ்.ஜியோமென்ட்ரி.தேதி வித்தியாசம் காண.விதவிதமான கால்குலேசன் மற்றும் கூடுதல் கணக்கீடுகளை உள்ளக்கி உள்ளது. 14 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செயதிடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் இடதுபுறம் Notes.Geomentry.Date Differnece.Main Calculating and Equations என 5 விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். வலதுபுறம் தேதியின் காலண்டரும் கெடிகாரமும் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள நோட்ஸில் நமது குறிப்புகளை இதில் குறித்துவைத்து சேமித்துவைத்துக்கொள்ளலாம். அடுத்துள்ள Geometry கிளிக செய்ய வரும் விண்டோவில் உள்ள Measurement கிளிக் செய்திட உங்களுக்கு மூன்றுவிதமான டேபுகள் கிடைக்கும். இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட துரத்தினை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
இரண்டு புள்ளிகளுக்கு இடைப்படட தூரத்தின் அளவுகளை எக்ஸ் ஆக்ஸிஸ் மற்றும் ஓய் ஆக்ஸிஸ் விவரங்களை குறிப்பிட்டு இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்திட உங்களுக்கான விடை கிடைக்கும். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலும் ஜிமேண்டரில் உள்ள பார்முலாக்களையும் கொடுத்துள்ளார்கள். எளிதில் படித்து அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்துள்ள விண்டோ -Dates Difference முதலில் உள்ள விண்டோவில் தேதியினையும் அடுது்துள்ள பாக்ஸில் தேவைப்படும் தேதியையும் குறிப்பிட்டு இதில் உள்ள கால்குலெட் கிளிக் செய்திட இரண்டு தேதிகளுக்கு இடையில் உள்ள நாட்கள் நமக்கு தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்துள்ளது Main Calculation:- இதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்திட உங்களுக்கு மூன்றுவித டேப்புகளுடன் கூடிய விண்டோ கிடைக்கும். இதில் கால்குலேட்டர்,பைனரிமோட்,பையோ மேக்ஸ் என மூன:றுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


முதலில் உள்ள கால்குலெட்டர் கிளிக் செய்திட நாம் வழக்கமாக பயன்படுத்தும் கால்குலேட்டரும் சயின்டிபிக் கால்குலேட்டரும் கொடுத்துள்ளார்கள்.

அடுத்துள்ள டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதிலும் ஐந்துவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
லைனர் ஈக்குவேஷன் கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


இறுதியாக இதில் உள்ள நீலகலர் ரேடியோ பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு அனைத்துவிதமான அப்ளிகேஷன்களும் கிடைக்கும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் உள்ள Extras கிளிக் செய்திட உங்களுக்கு கீழே கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Body Mass Index -Body Surface Area.Value for Money.Phase of Moon மற்றும் Download ETA என ஐந்துவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
இதில் உள்ள நிலவின் நிலையை அறிந்துகொள்ள இதில் உள்ள பாஸ் ஆப் மூன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள காலண்டரை பயன்படுத்தி நாம் எந்த தேதிக்கு நிலவின் நிலவரத்தினை அறிய வேண்டுமோ அதனை சுலபமாக அறிந்துகொள்ளலாம். குறிப்பிட்ட தேதியில் அமாவசை மற்றும் பெளர்ணமியை அறிந்துகொள்ளலாம்.
இதில் உள்ள எக்ஸ்டரா கிளிக் செய்திட அதில் ஆறுவிதமான டேப்புகள்கொடுத்துள்்ளார்கள். இதில் உள்ள பிக்ஸர் வியூ கிளிக செய்து நமது கணிணியில் உள்ள புகைப்படங்களை நாம் பார்க்கலாம். அடுத்துள்ள Matching Game கிளிக் செய்திட ஜோடிப்பொருத்தம் காணும் விளையாட்டு நமக:கு கிடைக்கும். மேலும் இதில் உள்ள Send E-Mail மூலம் நாம் நேரடியாக மெயில ்அனுப்பிவிட முடியும். மேலும் இதில் Media Player  மூலம் நம்மிடம் உள்ள பாடல்களை கேட்டு மகிழலாம்.இதல் உள்ள TIc Tac Toc எனப்படும் விளையாட்டினை நாம் சிறுவியதில் விளையாடி இருப்போம். இதில் அந்த விளைாயட்டினையும் கொடுத்துள்ளார்கள். மேலும் இதில் உள்ள Solar System கிளிக் செய்திட நமக்கு சோலர் விவரங்கள் நமது டெக்ஸ்டாப்பில தெரியவரும். கழே உள்ள விணடோவல பாருங்கள்.
ஒரு சின்ன சாப்ட்வேரில் இததனை வசதிகளா - பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

Thursday, June 6, 2013

வேலன்:-புகைப்படங்களில் தேவையில்லாததை நீ்க்க

போட்டோக்களில் சிலசமயம் தேவையற்றவைகளும் இடம்பெறும. அழகான இயற்கை கர்ட்சியை படம் பிடிப்போம். இடையில் தேவையற்ற கல் -காய்ந்த மரம்- அதன் அழகை கெடுக்கும். முக்கிய உறவினரை படம்பிடிப்போம். தேவையில்லாத நபர் உடன் வந்து நிற்பார்.நமக்கு தேவையில்லாதவற்ற எளிதில் நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு  கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்யவும். இப்போது நான் பாண்டிச்சேரியில் எடுத்த புகைப்படத்தினை இங்கு பதிவிட்டுள்ளேன். இதில் உள்ள சிலையை எப்படி எடுக்கலாம் என காணலாம்.

இப்போது இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்தததும் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களது புகைப்படத்தினை தேர்வு  செய்யவும். அடுத்து இதில் எந்த பகுதியை நீங்க விரும்புகின்றீர்களோ அதனை முடிவு செய்துகொள்ளுங்கள். நான் சிலையை எடுக்க முடிவு செய்துள்ளேன். இப்பேர்து இதன் வலதுபக்கத்தில் உள்ள போனா போன்ற ஐகானை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கான டூல் கிடைக்கும். இதன் மேலே உங்கள் டூலுக்கான அளவினை இதில் உள்ள ஸ்லைடர் கொண்டு முடிவுசெய்துகொள்ளவும்.
 இப்போது தேவையில்லா இடத்தினை இந்த டூல்கொண்டு மறைக்கவும்.நீங்கள் மறைக்க விரும்பும் உருவம் ரோஸ் நிறத்தினை கொண்டு நிரப்பவும். 
 இப்போது இதன் கீழே உள்ள டூலினை கிளிக் செய்யவும். நீங்கள் வரைந்த ரோஸ் நிறத்தின் மீது குறிக்கால் கோடுபொடவும். மேலே உள்ள படத்தினை பார்க்கவும்.
இறுதியாக மூன்றாவதாக உள்ள பக்கெட் போன்ற ஐ கானை கிளிக் செய்யவும.உங்களுக்கான பணி நடைபெறுகையில் கீழே உள்ள ஸ்லைடரில் பச்சை நிறங்கள் சிறுசிறு கட்டங்களாக நகர்வதை காணலாம்.இறுதியாக நீக்கப்பட்ட படத்துடன் உங்கள் படம் கிடைக்கும். மேலே உள்ள விண்டோவில் பாருங்கள். சிலை காணாமல் போய்இருக்கும். போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Sunday, June 2, 2013

வேலன்:-சமீபத்தில் பார்வையிட்ட பைல்களை அறிந்துகொள்ள

நாம் இல்லாத நேரம் குழந்தைகளோ -அலுவலகத்தில் மற்றவர்களோ நமது கணிணியில் உள்ள பைல்களை பார்வையிட்டாலோ - மாற்றங்கள் செய்தாலோ -பைலினை டெலிட் செய்தாலோ நமக்கு தகவல் தெரிவிக்க இந்த சி0ன்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 38 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்தபின் கிளிக செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும்.
இதில் பைலின் பெயர்.கடைசியாக பார்வையிட்டது:.உருவாக்கிய நேரம்.இறுதியாக பார்த்தது.மிஸ்ஸிங் பைல்கள்.ஸ்டோர் செய்துள்ள இடம் மற்றும் அதனுடைய வகை ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம்.இதன் மூலம் நமது பைல்கள் மாற்றங்கள் உருவாக்கிஉள்ளார்களா என எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.