குழந்தைகள் எளிய முறையில் தமிழ்.தெலுங்கு.இந்தி ஆஙகிலம் அறிந்துகொள்ள இந்த இணையதளம் பெரிதும் உதவுகின்றது. உயிர் எழுத்துக்கள்.மெய் எழுதத்துக்கள்.இலக்கணங்கள் என முப்பதுக்கும்மேற்பட்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.இந்த இணையதளம் காண இங்கு கிளிக் ;செய்யவும்.உயிரேழுத்துக்கள் பற்றிய விளக்கம் கீழே காணவும்.
ஒவ்வொரு டேபிலும் நிறைய உதாரணங்கள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதன் வலதுபுறம் வேண்டிய தலைப்புகள் கொடுத்துள்ளார்கள். இது எதுதேவையோ அதனை மட்டும் கிளிக்செய்து பார்க்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகள் விளையாட இதில் மூன்று விதமான விளையாட்டும் இணைத்துள்ளார்கள் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உயிர் எழுத்தும் மெய்எழுத்தும் நாம் பிரிண்ட் எடுத்து எழுதி பழகலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மனித உடல்கள் பாகங்களாக குறித்துள்ளார்கள். நீங்கள் கர்சரை உடலில் எந்த
இடத்தில் கர்சரை வைக்கின்றீர்களோ அந்த இடத்திற்கான பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும். எழுத்துருவிலும் வரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு எழுத்து பெயர்கள் இரண்டு எழுத்து பெயர்கள் என படங்களுடன் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம குழந்தைகள் எளியமையாக அறிந்துகொள்ளலாம்.
இதனைப்போலவே தெலுங்கிலும் எளிய முறையில் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
எளிமையாக இந்தி கற்றுக்கொள்ள எழுத்துக்களும் அதற்கான இந்தி மற்றும் ஆங்கிலப்பெயர்களும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகள் விரும்பும் குழந்தைகள் வால்பேப்பர்களும் ;இதில் கொடுத்துள்ளார்கள்.கற்றல்.பாடல்கள். கதைகள்.விளையாட்டுகள். லெவல்கள்.மாதிரி தாள்கள்.வால்பேப்பர்கள் என கொடுத்துள்ளார்கள். ஆரம்ப கல்வி கற்க விரும்பும் குழந்தைகளுக்கு எளிய முறையில் தமிழ்.ஆங்கிலம்.இந்தி தெலுங்கு என சுலபமாக கற்றுக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.