Monday, June 22, 2015

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள். அந்த ரகசிய குறியீடான QR CODE ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்க்கலாம் இதற்கென தனியாக சாப்ட்வேரும் உள்ளது.அதனை உருவாக்கிதரும் நிறுவனங்களும் உள்ளன.அவ்வாறு உள்ள ஒரு நிறுவன முகவரிதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட முகவரிதளம் ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் டேடா டைப் என கொடுத்துள்ளார்கள். இணையதள முகவரி.யூடியூப் வீடியோ.புகைப்படம்.போன் நம்பர்.இமெயில் முகவரி.பேஸ்புக். டிவிட்டர்.நமது வீட்டு முகவரி என மொத்தம் 23 வகையான டேடாகளை இதில் நாம் QR கோடிங்காக மாற்றலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் இரண்டாவதாக உள்ளதில நமக்கான யூஆர்எல் முகவரியை இணைக்கவும். நீங்கள் யூடியூப் வீடியோவினை இணைப்பதாக இருந்தால் யூடியூப் முகவரியை இணைக்கவும்.டெக்ஸ் இணைப்பதாக இருந்தால் அதற்காக உள்ள கட்டத்தில் நீங்கள் டெக்ஸ்ட் ஐ தட்டச்சு செய்யவும். இதுபோல் உங்களுக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.
QR CODE நிறததினை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். உங்களுக்கான நிற விண்டோ கொடுத்துள்ளார்கள்.
இறுதியாக இதில் உள்ள டவுண்லோடு QR CODE கிளிக் செய்யவும்.சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும;.

உங்களுக்கான QR CODE பதிவிறக்கம் ஆகிவிட்டிருக்கும். இப்போது உங்கள் மொபைல் மூலம் இநத கோடினை ஸ்கேன் செய்து படிக்கலாம். நண்பர்களுக்கு உறவினர்கள் என அனைவரிடம் பகிர்ந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.