Wednesday, August 26, 2015

வேலன்:-புகைப்படங்களில உள்ள பழுதுகளைசரிசெய்ய

புகைப்படங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யவும்.புகைப்படங்களில் வேண்டிய நிறங்களை கூட்டவும்.குறைக்கவும்.வெளிச்சத்தினை கூட்டவும்.குறைக்கவும்.வேண்டிய மாற்றங்களை செய்யவும.புகைப்படத்தினை சரியான அளவிற்கு கொண்டுவரவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.20 எம்.பி .கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.


 இதனை ஓப்பன் செய்து உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கீழ்புறம் உங்களுக்கு 7 விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.
 வேண்டிய நிறங்களை படங்களில் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 படங்களை வேண்டிய அளவிற்கு திருப்பவும் இதில் வழிவகை செய்துகொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்
புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு வெட்டி எடுத்து தேவையான பகுதியை வைத்துக்கொள்ளவும் இதில் வசதியை கொடுத்துள்ளார்கள். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள். 
நீங்கள் செய்திடும் மாற்றங்கள் அனைத்தும் பக்கத்தில் உள்ள விண்டோவில் உடனடியாக நாம் பிரிவியூ பார்க்கலாம். எனவே ப்ரிவியூ பார்த்து மாற்றங்கள் தேவையா வேண்டாமா என்பதனை முடிவு செய்துகொள்ளலாம். இறுதியாக இதனை வேண்டிய டிரைவில் சேவ் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

7 comments:

  1. பயனுள்ள தகவல்.

    விரிவான விளக்கங்கள்...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் பகிர்வு...
    நன்றி வேலன் சார்.

    ReplyDelete
  3. திரு வேலன் சார்,
    நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷாப் பற்றிய பதிவு
    நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்.

    ReplyDelete
  4. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
    பயனுள்ள தகவல்.

    விரிவான விளக்கங்கள்..

    நன்றி சார்..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. Blogger Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    தகவலுக்கு நன்றி நண்பரே...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. Blogger பரிவை சே.குமார் said...
    பயனுள்ள தகவல் பகிர்வு...
    நன்றி வேலன் சார்.

    நன்றி குமார் சார்...வருகைக்கும்;கருத்துக்கும் நன்றி..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. Blogger mdniyaz said...
    திரு வேலன் சார்,
    நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷாப் பற்றிய பதிவு
    நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்.

    நன்றி முஹம்மது நியாஜ் சார்..விரைவில் போட்டோஷாப் பற்றிய பதிவுகளை தொடர்ந்து பதிவிடுகின்றேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete