Saturday, October 31, 2015

வேலன்:-குறிப்பட்ட நபரை மட்டும் ஹைலைட் செய்து காண்பிக்க

புகைப்படங்களிலோ,வீடியோக்களிலோ ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் நாம் தனித்து காட்டவிரும்பினால் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 400 கே.பி. அளவிலுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://zorro.en.softonic.com/செய்யவும். இதனை இன்ஸ்'டால் ;செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நீங்கள் தனித்து காண்பிக்க விரும்பும் நபரை மட்டும் ப்ரேம் செய்துகொள்ளவும். வேண்டிய அளவிலும்நாம் ப்ரேம் தனியே அமைத்துக்கொள்ளலாம். பின்னர் இதில் உள்ள ஆக்டிவேட்  கிளிக் செய்திட நாம் ப்ரேம் செய்த பகுதி மட்டும் நமக்கு டிஸ்பிளே ஆகும். பிற பகுதிகள் கருப்பு நிறத்தினுள் மறைந்துவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலே உள்ள வீடியோவில குழந்தையை மட்டும் நான் ப்ரேம் செய்து உள்ளேன். பிற நபர்கள் நமக்கு தெரியாமல் கருப்பு நிறத்தில் மறைந்துவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, October 21, 2015

வேலன்:-அவசியமான ஆறு இலவச சாப்ட்வேர்கள்.

வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்




நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை .jpg.png.bmp.tiff.gif.eps.html.wmf.tex.doc என விருப்பிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.மற்ற பார்மெட்டுக்களில் உள்ள பைல்களை பிடிஎப் பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு:கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் எந்த பார்மெட்டுக்கு பிடிஎப்பைலினை மாற்ற வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
கன்வர்ட் கொடுக்கவும். சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் பைலானது மாறியிருப்பதை காணலாம். 
அதுபோல உங்களிடம் உள்ள .jpg.png.bmp.tiff.gif.eps.html.wmf.tex.doc பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிட இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம். கீழெ உள் ளவிண்டோவில் பாருங்கள்.
இப்போது நீங்கள் தேர்வு செய்த பைலானது பிடிஎப் பைலாக மாறியிருப்பதை காணலாம்.
இதுபோல உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை வேண்டிய பார்மெடடுக்கு மாற்றிடவும் வேவ்வொறு பார்மெடடில் உள்ள பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிடவும் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.
                                                -----------------------------
வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்

சில டிவிடிக்களில் வீடியோ பதிவிட்டிருப்பார்கள். அதனை நாம் பார்க்க மட்டுமே முடியும் அதனை டிவிடியிலிருந்து டிவிடியாகவோ காப்பி செய்யவோ முடியாது அவ்வாறான வீடியோக்களையும் நமக்கு பிடித்த படங்களில் இருந்து பிடித்த காட்சியையும்.நகைச்சுவை காட்சியையும்.பாடல்களையும் காப்பி செய்திட இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் நமக்கு பயன்படுகின்றது. இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இப்போது நமக்கு தேவையான வீடியோவினை ஸ்கிரீனில் ஓடவிடவும. இதில் உள்ள ஸ்டார் ரிகார்டிங் கிளிக் செய்யவும்.தேவைப்படும் இடம் வந்ததும் ஸ்டாப் ;ரிகார்டிங் கிளிக் செய்யவும்.
நீங்கள் விரும்பி தேர்வு செய்த வீடியோவானது நீங்கள் சேமித்த .இடத்தில் வீடியோ பைலாக அமரந்திருப்பதை காணலாம். இதனை தனியே ப்ளே செய்து பார்க்கலாம்.
அதுபோல விரும்பிய புகைப்படத்தினையும் வீடியோவிலிருந்த நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத:து புகைப்படங்களாக சேமிக்கும் வசதியையும் இதில் கொடுத:துள்ளார்கள். 
                                                      --------------------------
வேலன்:-இபுக் ரீடர் E BOOK READER

இபுக் ரீடர் என்கின்ற இந்த சாப்ட்:வேர் ஆனது PDF.EBOP.MOBI.FB2.CSR.CB2 ஆகிய பைல்களை ஒப்பன் செய்து படித்திட உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள் திறக்க விரும்பும் பைலினை தேர்வு செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுடைய லைப்ரவரியில் புத்தகங்களை சேர்க்வும். புக் மார்க் செய்திடவும் செய்யலாம். மேலும் ஓவ்வொரு பக்கமாகவும் ஒரே பக்கத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்கும் வசதி உள்ளது. 
மேலும் இதில் செட்டிங் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இரவு.பகல்.சோபியா என செட்டிங்ஸ் செய்திடலாம். மேலும் பாண்ட்களின் அளவினை வேண்டிய அளவிற்கு ஏற்றியும் இறக்கியும் வைத்தக்கொள்ளலாம். மேலும் எழுத்துக்களின் நிறத்தினையும் பின்புற நிறத்தினையும் வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.
                                                     ------------------------------
வேலன்:-பிடிஎப் பைல்களை பிரிக்க மற்றும் சேர்க்க

பிடிஎப் பைல்களை பிரிக்க மற்றும் சேர்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் இரண்டுவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். முதலில் பிரிக்க மற்றும் இரண்டாவதாக சேர்க்க கொடுத்துள்ளார்கள். முதலில் பிரிக்க என்னும் பிரிவை தேர்ந்தெடுக்கவும். இதனை கிளிக்செய்ததும் வரும் விண்டோவில் பிடிஎப் பைலானது நமக்கு எவ்வாறு வரவேண்டும் என்பதனை தேர்வு செய்யவும்.பக்கங்களின் படியாகவா,தலைப்புகளின் படியாகவா,பிரிக்கலாம்.மேலும் தேவையில்லாத பக்கங்களையும் இதில் நீக்கிவிடலாம். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.
 பிடிஎப் பைல்களை சுலபமாக பிரிக்க முடிந்தது போல அதனை சுலபமாக சேர்கவும் செய்யலாம். இதில் உள்ள மேர்ஜ் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add File கிளிக் செய்து உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை தேர்வு செய்யவும்.
 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பிடிஎப் பைல்க்ளை சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்துபின்னர் இதில் உள்ள Merge பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பிடிஎப் பைல்கள் ஓரெ பைலாக இருப்பதனை காணலாம். 
                                            -------------------------
வேலன்:- புகைப்படங்கள் மூலம் ஸ்லைட்ஷோ மற்றும் வீடியோ உருவாக்க

நம்மிடம் உள்ள புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்றவும்.ஸ்லைட் ஷோவாக கண்டுகளிக்கவும். இந்த சாப்ட்வெர் பயன்படுகின்றது. 
இந்த சாப்ட்வேரினை ஒப்பன் செய்து நம்மிடம் உள்ள புகைப்படங்களையோ புகைப்டங்கள் உள்ள போல்டரையோ தேர்வு செய்யவும்.
ஒவ்வொரு புகைப்படங்கள் மாறும் சமயம் நமக்கு தேவையான எபக்டினை கீழெ உள்ள விண்டோமூலம் தேர்வு செய்யலாம் இதன் மூலம் புகைப்படங்கள் மாறும் சமயம் அந்த எப்பட்கள் பயனளிப்பதை காணலாம்.
அதுபோல பாடலையும் நாம் இதில் சேர்க்கலாம் இதில் உள்ள Add Audio கிளிக் செய்வதன் மூலம் தேவையான பாடலை தேர்வு செய்யலாம்.
ஒவ்வொரு புகைப்படங்களும் எவ்வளவு நேரம் நமக்கு ப்ரிவியு காட்டவேண்டுமோ அந்த நேரத்தினையும் சேட் செய்யலாம். 
நமக்குகான புகைப்படங்கள் ஆடியோ எபெக்ட்டுக்ள் சேரத்த பின்னர் இதில் உள்ள ப்ரிவியு பாரத்தக்கொள்ளலாம். சரியான இருப்பின் பின்னர் இதில் உள்ள கிரியேட் கிளிக் செய்யவும். உங்களுடைய பைலினை நீங்கள் யூடியூப் வீடியோவாக மாற்ற விரும்பினால் உங்கள் கூகுள் அக்கவுண்ட ஓப்பன் செய்து லாகின் ஆகியபின்னர் யூடியூபில் பதிவேற்றம் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
யூடியூப் மூலம் பதிவேற்றப்பட்டதால் உங்களுடைய வீடியோவினை இணையத்தில் உள்ள அனைவரும் காணும் படி செய்யலாம். மற்றவர்களுக்கு சுலபமாக அனுப்பிவைக்கலாம். 
                                              ---------------------------
வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க

இப்போது மொபைல்போனிலே 16 மெகா பிக்கஸல் வரை கேமரா வந்துவிட்டது. நல்ல விலை உயர்ந்த கேமராவில் 50 மேகா பிக்ஸல் வரை புகைப்படங்கள் எடுக்கலாம். நமது மனிதனுடைய கண்கள் 650 மெகாபிக்ஸல் திறன்கொண்டது. அதிக மான பிக்ஸல் உடன் புகைப்படம் எடுக்கும் சமயம் புகைப்படங்களின் கொள்ளளவு அளவு அதிகமாக இருக்கும் அவ்வாறான புகைப்படங்களை மற்றவர்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்வத சிரமம். அவ்வாறான புகைப்படங்களை தரம் குறையாமல் வேண்டிய அளவிற்கு மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள புகைப்படத்தினையோ புகைப்படங்கள் உள்ள போல்டரையோ தேரவு செய்யவும்.

புகைப்படத்தின் அளவினை தேர்வு செய்யவும் நீங்கள் எதற்காக பயன்படுத்த விரும்புகின்றீர்களோ அந்த தேவையை யும் நீங்கள் தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்;டாவில் பாருங்கள்.

நீங்கள் ;மாற்றம் செய்ய வேண்டியதை தேர்வு செய்வதற்கு ஏற்ப உங்களுடைய புகைப்படங்களின் அ;ளவுகள் மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மாற்றம் செய்த புகைப்படங்களை அதே போல்டரிலோ தனியாகவோ சேமிக்கலாம். 

மேற்கண்ட ஆறு சாப்ட்வேர்களையும ;இலவசமாக பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்..
அனைத்தையும பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்
வேலன்.