வேலன்:-புகைப்படங்களை இணையதளம் மூலம் பகிர்ந்துகொள்ள

நம்மிடம் உள்ள புகைப்படங்களை இணையம் மூலம் சுலபமாக பகிர்ந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்யவும்.

இந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நியூ ஆல்பம் என்பதனை தேர்வு செய்யவும். உங்கள் ஆல்பத்திற்கான பெயரையும் ஆல்பத்திற்கான இதர குறிப்புகளையும் குறிப்பிடவும். 


 உங்களிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும்.
இதில் Album,Frame.Navigation என மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் ப்ரேம் அளவினையும் நிறத்தினையும் நாம் வேண்டிய அளவில் அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் விதவிதமான டேம்ளேட்டுகளையும் இணைத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாம் தேர்வு செய்து முடித்ததும் நம்மிடம் உள்ள பைல்லினை அவர்களுடைய இணையதளத்தில் லாகான் செய்து பதிவேற்றம் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இணைய பதிவேற்றம் வேண்டாம் என்றால் நமது ஹார்டிஸ்கிலேயே சேமித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பர்ருங்கள்.
இறுதியாக ஓ.கே.கொடுத்ததும் உங்களுடைய புகைப்படங்கள் சேமிப்பதை காணலாம்.


இறுதியாக உங்களுக்கான புகைபடங்களை பார்வையிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


புகைப்படங்கள் ப்ரேம் அமைப்புடன் அழகுபடுத்தவும் மற்றவர்களுடன் சுலபமாக பகிர்ந்துகொள்ளவும் இந்த இணையதளம் பயன்படுகின்றது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-சிலிண்டர் மானியத்தில் உங்களுடைய பதிவின் நிலை அறிந்துகொள்ள

மத்திய அரசாங்கம் வழங்கும் சிலிண்டர் மானியம் நாம் பெற சில விண்ணப்பங்களை வங்கியிலும்,சிலிண்டர் முகவரிடமும் அளிக்க செர்ல்லியிருந்தார்கள். அவ்வாறு நாம் அளித்த விண்ணபங்களின் நிலவரம் அறிந்துகொள்ள இந்த இணையதள பக்கம் நமக்கு உதவுகின்றது. 
 நீங்கள் அநத இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு இந்த இணையதள பக்கம் திறக்கும். இதில் நீங்கள் உபயோகிக்கும் சிலிண்டரின் நிறுவனத்தை தேர்வு செய்யவும். அந்த சிலிண்டர் மீது வைத்து கிளிக் செய்யவும்.
 நான் எச்.பி. Hindustan Petroleum நிறுவத்தின் சிலிண்டர் மீது கிளிக் செய்தேன். அதில் நமது DBTL Status கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோ திறக்கும்.;
 உங்கள் சிலிண்டர் முகவர் பெயர் மற்றும் நமது சிலிண்டர் கஸ்டமர் எண்ணிணை தட்டச்சு செய்யவும்.உங்களிடம் ஆதார் எண் தெரிந்தால் அந்த எண்ணினையும் தட்டச்சு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 விவரங்கள் தட்டச்சு செய்து என்டர் தட்டியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் மானியத்ததிற்கான விவரம் அறிந்துகொள்ளலாம். சிகப்பு மார்க் இருந்தால் பதிவாகவில்லையென்றும் பச்சைநிறம் வந்தால் பதிவாகிவிட்டது என்றும் அறியலாம்.
பதிவானபின்னர் வந்துள்ள விண்டோவினை பாருங்கள்.

வங்கியிலும் முகவரிடமும் உங்கள் விண்ணப்பங்கள் பதிவாகியபின்னர் பதிவான நாட்களிலிருந்து 15 நாட்களுக்குபின்னர் உங்களுக்கான முதல் மானிய அட்வான்ஸ் தொகை ரூபாய் 568 உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். நீங்கள் பின்னர் சிலிண்டரை முழுதொகையையும் செலுத்திவாங்கியபின்னர் உங்கள் வங்கிகண்க்கிற்கு மானியதொகை வந்து சேரும். ஆனால் அதற்கும் உங்களுக்கு 15 நாள் காலஅவகாசம் ஆகும். 
பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...