Tuesday, May 31, 2016

வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Macgo Free Media Player

நம்மிடம் உள்ள வீடியோ ஆடியோ பைல்களை கேட்டு பார்த்து மகிழவும்.டிரைவில் உள்ள பார்த்து மகிழவும் இணையதள யூஆர்எல் மூலம் வீடியோ பார்த்து மகிழவும் இந்த சின்ன பிளேயர் உதவுகின்றது. 34 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஓப்பன் பைல் கிளிக்செய்து நமது கணிணியில் உள்ள வீடியோ ஆடியோ பைல்களை தேர்வு செய்யலாம். ஓப்பன் டிஸ்க் கிளிக்செய்து டிரைவில் உள்ள வீடியோ ஆடியோவினை கேட்டு மகிழலாம்.
 இதில் உள்ள அட்ஜஸ்ட்மென்ட் கிளிக் செய்வதன் மூலம் நமது வீடியோவின் 
Brightness.Saturation.Contrast.Gamma.Hue போன்றவற்றை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.கீழேஉள்ளவிண்டோவில் பாருங்கள்.
வீடியோவினை வேண்டிய அளவிற்கு கிராப் ;செய்யவும். வேண்டிய அளவிற்கு பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றிப்பார்க்கவும்.வேண்டிய படத்தினை சினாப்ஷாட் எடுக்கவும் இது பயன்படுகின்றது. சிறிய அளவிளான இந்த சாப்ட்வேர் என்னற்ற வசதிகளை கொண்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.