Monday, October 31, 2016

வேலன்:-டெக்ஸ்ட்பைலினை 70 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட-Everylang limited edition

நமக்கு தேவையான டெக்ஸ்ட் பைல்களை வேண்டிய மொழிக்கு மொழிமாற்றம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதில் 70 வகையான மொழிகளில் மொழிமாற்றம் செய்திடலாம்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Tamil Computer என தட்டச்சு செய்து மொழியில் ;தமிழ் என தேர்வு செய்ததும் தமிழ்கணிணி என வந்தது.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து 70 வகையான மொழிகளில் எது தேவையோ அதனை தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஆங்கிலத்தில் Accident என தட்டச்சு செய்தபின் தமிழில நீண்ட விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதுபோல நாம் தட்டச்சு செய்யும் வார்த்தைகளின் ஸ்பெல்லிங் செக் செய்யும் வசதியையும் இதில்கொடுத்துள்ளார்கள். நீண்ட உரையில் தேவையான வார்த்தையை தேர்வு செய்து மாற்றும் வசதியும் (Text auto replace)கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Saturday, October 15, 2016

வேலன்:- வால்பேப்பர் கேலரி-My Wallpaper Gallery

டெக்ஸ்டாப்பில் விதவிதமான வால்பேப்பர்கள் செட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம.பி. கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் வலதுபுறம் 16 கேரக்டரில் விதவிதமான புகைப்படங்கள் என மொத்தம் 2100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைத்துள்ளார்கள்..ஒவ்வொரு கேரக்டரினையும் தேர்வு செய்திட பக்கத்தில் உங்களுக்கு அந்த கேரக்டரில் உள்ள படங்களின் லிஸ்ட்  தெரியவரும். ஏதாவது ஒரு பெயரினை தேர்வு செய்த தேர்வு செய்த படத்தின் ப்ரிவியூ பக்கத்தில் உள்ள விண்டோவில் தெரியும்.
 இதில் உள்ள வால்பேப்பர் பெஸிஷன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புகைப்படத்தின் வகைக்கு ஏற்ப பெஸிஷனை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.