Sunday, July 30, 2017

வேலன்:-கணிணியில் கால்குலெட்டர் பயன்படுத்த

நமது கணிணியிலேயே கால்குலேட்டர் இருந்தாலும் தனியே நோட் போடும் கால்குலேட்டரும் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் தேவையான கண்க்கீடினை செய்யவும். விவரங்கள் தேவையேன்றாலும் நாம் அதற்கான விவரங்களை வார்த்தைகளாக தட்டச்சு செய்யலாம்.
வரிகளை கூட்டும் வசதியையும் வரிகளை கழிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.இதிலிருந்து நாம் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.விவரங்களை தனியே நாம் பேஸ்ட் செய்யும் வசதியும் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Saturday, July 29, 2017

வேலன்:-புகைப்பட வியூவர்.

நம் கணிணியில் உள்ள புகைப்படங்களை பார்வையிடவும்.பெயர்மாற்றம் செய்திடவும்.அளவுகளை வேண்டியபடி மாற்றிடவும். முகநூல்.இமெயில்.பிளிக்கர் போன்ற இணையதளங்களில் பதிவேற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 புகைப்படங்களை தம்ப்நெயில் வியூவிலும்.லிஸ்ட் படியும்.தேதி வாரியாகவும். போல்ட் படியும் நாம் பார்வையிடலாம். மேலும் புகைப்படங்களை பெரியதாக பார்க்ககும் வசதியும் உள்ளது.


புகைப்படங்களை நாம் வேண்டிய அளவிற்கு மாற்றிட இதில் வசதிகொடுத்துள்ளார்கள். நீளம் அகலம் நாம் விரும்பிய பிக்ஸல் அளவில் மாற்றிக்கொள்ளலாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நாம் தேர்வு செய்த புகைப்படங்களை நாம் இணையத்தில்பேஸ்புக்.பிளிக்கர்.ஜிமெயில்.டுவிட்டர் பிகாஸா என எதில் வேண்டுமானாலும் இதன் மூலம் விரைவாக பதிவேற்றம் செய்திடலாம்.
புகைப்படங்களை நாம் டெலிட் செய்யவும் காப்பி செய்து வேறு இடத்தில் பேஸ்ட் செய்யவும் பயன்படுகின்றது. மேலும் பல வசதிகள் இதில்இணைக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, July 25, 2017

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட

இணைய பக்கங்களையும் -பைல்களையும் பிடிஎப் ஆக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில் யூஆர்எல் சேர்க்கை மற்றும் பைல்கள் சேர்க்கை என இரண்டு ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். இதில் தேவையானதை தேர்வு செய்யவும்.
யூஆர்எல் டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு விண்டொ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்திட்டு பின்னர் ஓ.கே. தரவும். கீழே நீங்கள் சேமிக்க விரும்பும் டிரைவினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள கன்வர்ட் என்பதனை கிளிக் செய்திடவும்.சில நொடிகளில் உங்களுக்கான இணையபக்கம் -பைல்கள் பிடிஎப் பைல்களாக மாறியிருப்பதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, July 18, 2017

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட

இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் முறை இப்போது வந்துள்ளது. அதன் மூலம் நாம் எளிமையாக பதிவு செய்வதுடன் ஆன்லைனிலும் பணத்தினை செலுத்திவிடலாம். ஆன்லைனில் செலுத்துவதால் சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு அதிக பணம் கொடுக்கவேண்டியதில்லை. மேலும் நாம் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் வரும் கட்டணத்தில் நமக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.இனி ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதனையும் -ஆன்லைனில் பணம் கட்டுவதனையும் இப்போது காணலாம். முதலில் நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர் வாங்குகின்றீர்களோ அந்த நிறுவன இணையதளத்தினை திறந்துகொள்ளவும். நான் HP GAS இணையதளத்தின் இணையதளத்தின் பக்கத்தினை திறந்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும்.
இதில் நியூ யூஸர் என்பதனை கிளிக்செய்யவும். உங்களுடைய கேஸ் புக் எண்ணினை தட்டச்சு செய்திடவும். பின்னர் உங்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும்-நீங்கள் வாங்கும்  கேஸ் எஸென்சியின் பெயரை சர்ச் பாக்ஸில் தேடவும். உங்கள் எஸென்சியின் பெயர் வந்ததும் ;;ஒ.கே.தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் கேஸ் பதிவு எண்ணை தட்டச்சு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்கள் இமெயில முகவரி கொடுத்து பின்னர் உங்கள் விருப்பமான பாஸ்வேர்ட் தரவும். இறுதியாக ஒ.கே. தரவும்.


இப்போது உங்களுக்கு உங்கள் விவரம்அடங்கிய விண்டோ கிடைக்கும்.இதில் உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் அதில் நிறைய விவரங்கள் கொடுத்திருப்பார்கள். நீங்கள் சிலிண்டர் பதிவு செய்யவிரும்பினால் அதற்கான விண்டொவினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எரிவாயு உருளையை ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கப்போகின்;றீர்களா -அல்லது எரிவாயு உருளை சப்ளை செய்யும்போது பணம் செலுத்தி வாங்கப்போகின்றீர்களா என முடிவு செய்து தேவையான ஆப்ஷனை கிளிக் செய்திடவும். 


இப்போது வரும் விண்டோ வில் ஆப்ஷனை ஓ.கே. செய்து கிளிக் செய்யவும்.


இப்போது வங்கிகள் விவரம் அடங்கிய பக்கம் ஓப்பன் ஆகும். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியினை தேர்வு செய்யவும்.

 உங்கள் வங்கியின் ஏடிஎம் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் விவரம் தேர்வு செய்து ஒகே தரவும்.பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வரவு வைக்கப்பட்டதும் உங்களுக்கு பணம் செலுத்தியதற்கான விவரம் கிடைக்கும்.
சிலிண்டர் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விடும். வினியோகத்தில் ஏதாவது குறை இருப்பின் நீங்கள் தொலைபேசி மூலமாகவோ - மெயில் மூலமோ தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


Tuesday, July 11, 2017

வேலன்:- இலவச வீடியோ ஆடியோ டிவிடி போட்டோ கன்வர்ட்டர்.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்கள்.ஆடியோ பைல்கள்.போட்டோக்கள்.டிவிடி மற்றும் இணைய பதிவுகளை வேண்டிய பார்மெட்டுக்கு கன்வர்ட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட  இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ.ஆடியோ.டிவிடி.போட்டோ மற்றும் இணைய யூஆர்எல் என எந்த பைலினை நீங்கள் கன்வர்ட் செய்ய விரும்புகின்றீர்களோ அதனை தேர்வு செய்யவும்.
 
அதுபோல நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதுபோல போட்டோக்களையும் நீங்கள் ஸ்லைட்ஷோவாகவும்.பனோரமாகவும் மாற்றலாம். அதற்கென அவர்கள் வசதி செய்துகொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 
வீடியோ பைலினை நீங்கள் கன்வர்ட் செய்திட கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வீடியோ மற்றும் ஆடியோ பைலினை நாம் வேண்டிய அளவினை செட்டிங்ஸ் செய்துகொள்ளலாம்.
 எல்லா செட்டிங்ஸ் கிளிக் செய்ததும் உங்களுக்கு பைலானது கன்வர்ட் ஆகும். அப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களது அனைத்து பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.



Wednesday, July 5, 2017

வேலன்:-எம்பி3 பாடல்களை வெட்ட.ஒட்ட.மிக்ஸ் செய்ய

எம்.பி.3 பாடல்களை வேண்டிய அளவு வெட்டவும்.வேண்டிய பாடல்களை ஒன்றாக சேர்க்கவும்.பாடல்களை மிக்ஸ் செய்யவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் தேவையான பாடலை தேர்வு செய்யவும். பாடலை ஓட விடவும். இப்போது உங்களுக்கு தேவையான இடம் வந்ததும் இதில உள்ள மார்க் ஸ்டார்ட் கிளிக் செய்யவும். பாடலினை ஓடவிடவும். பின்னர் உங்களுக்கு தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள மார்க் என்ட் கிளிக் செய்யவும்.பின்னர் இதில் உள்ள ஸ்டார் கட் செய்திடவும். சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.
 உங்களுக்கான பாடல் கிடைக்கும். அதுபோல பாடல்களை ஒன்றாக சேர்க்கவும் அதுபோல பாடல்களை மிக்ஸ் செய்யவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. தேவையானதை கிளிக் செய்து ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.
சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்து பின்னர் பார்த்தால் உங்களுக்கான பாடல்கள் கிடைக்கும். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவ ளமுடன்
வேலன்.

Saturday, July 1, 2017

வேலன்:-ரேர் பைலினை விரிவுபடுத்த

சில பைல்கள் சுருங்கிய வடிவில் ஸிப் வகையில் கிடைக்கும் அதனை ஓப்பன் செய்ய சாப்ட்வேர்கள் தேவைப்படும். அதுபோல ரேர் பைல்களை ஒப்பன் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
உங்களுக்கான ரேர் பைலினை தேர்வு செய்யவும். தேவைப்பட்டால் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
 
பைலினை எக்ஸ்டார்ட் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நீங்கள் சேமித்த இடத்தினை சென்று பார்த்தால் உங்களுக்கான பைலானது விரிவாக்கப்பட்டு இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.