Tuesday, August 29, 2017

வேலன்:-சிடி மற்றும் டிவிடியை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்திட

சில டாக்குமெண்ட்கள்.சில புகைப்படங்கள்.சில வீடியோக்கள் என முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் இருக்கும். அதனை மற்றவர்கள் பார்க்காமல் இருக்க சிடி -டிவிடியில் பாஸ்வேர்ட கொடுத்து பாதுகாக்கலாம். டிவிடி மற்றும் சிடிக்களில் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்திடவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் மேலே உள்ள Create Disc என்பதனை கிளிக் செய்யவும். இப்போது உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் காப்பி செய்யபோவது சிடியா அல்லது டிவிடியா என முடிவு செய்யவும்.அதற்கு ஏற்ப டிஸ்க் அளவினை தேர்வு செய்யவும். இறுதியாக ஓ.கே. தரவும்.

 

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பின்னர் இதில் கொடுத்துள்ள கடவுச்சொல்லினை இரண்டு முறை தட்டச்சு செய்யவும்.இறுதியாக Create Disc என்பதனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கான டிரைவ் ஆனது மை கம்யூட்டரில் தெரியும். அதில் நீங்கள் சேமிக்க விரும்பிய புகைப்படங்கள். வீடியோக்கள். டாக்குமெண்ட்கள் என எது விருப்பமோ அதை காப்பி செய்து டிரைவில் சேமியுங்கள்.நீங்கள் டிரைவில் சேமித்த பைல்களானது சி டிரைவில் c:\\user\user\rdisc.rdi என் கின்ற இடத்தில் சேமிப்பாகும். பின்னர் மீண்டும் நீங்கள் ;முதலில் திறந்த விண்:டாவினை திறந்து அதில் Delete disc என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான டிரைவானது மை கம்யூட்டரில் இருந்து மறைந்துவிடும். இப்போது உங்களுக்கான நீரோ அல்லது அஷாம்பூ அல்லது வேறு எதாவது அல்லது உங்களிடம் இருக்கின்ற சிடி காப்பி செய்கின்ற சாப்ட்:வேரினை பயன்படுத்தி சி டிரைவில் யூசரில் உள்ள பைலினை காப்பி செய்யவும். சிடியானது சில நிமிடங்களில் காப்பி ஆகிவிடும். இப்போது சிடியை வௌியில் எடுத்து மீண்டும் டிரைவில் போடவும். பின்னர் முதலில் திறந்த விண்டோவினை திறந்து அதில் உள்ள open exciting disk என்பதனை கிளிக்செய்து உங்கள் சிடி டிரைவினை தேர் வுசெய்யவும். இப்போது விண்டோ திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி வரும். அதில் நீங்கள் ஏற்கனவே உள்ளீடுசெய்த கடவுச்சொல்லை தட்டச்சு செய்யவும்.

பின்னர் ;ஒ.கே. தர நீங்கள் சிடியில் காப்பி செய்த டாக்குமெண்ட்கள். புகைப்படங்கள. வீடியோ என நீங்கள் எதனை மற்றவர்கள் பார்வையிலிருந்து பாதுகாப்பாக வைக்கவேண்டும் என விரும்பினீர்களோ அந்த பைலினை பார்வையிடலாம். நீங்கள் ஒவ்வொரு முறையும் சிடியை ஒப்பன் செய்து பார்த்திட இந்த வழி முறையையே பயன்படுத்திட வேண்டும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன்:-யூடியூப் வீடியோக்களை .இலவசமாக பதிவிறக்கம் செய்திட

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திடவும் அதனை வேண்டிய அளவில் பார்வையிடவும் வேண்டிய பார்மெட்டில் மாற்றிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 25 எம்.பி கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது யூடியூப் வீடியோவின் யூஆர்எல முகவரியை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.
 வீடியோவின் அளவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு எந்த அளவு வேண்டுமோ அந்த அளவினையும் தேர்வு செய்யலாம்.
 இதில் இடதுபுறம் டவுன்லோடிங்.டவுன்லோடு மற்றும் கன்வர்டட் என்கின்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். பதிவிறக்கம் ஆகி கொண்டிருப்பதையும் பதிவிறக்கம் முடிந்துவிட்டதையும் காணலாம். கன்வர்ட் செய்யப்பட்ட வீடியோவினையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
டவுண்லோடிங் ஆப்ஷன் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நமக்கான வீடியோ எந்தஅளவிற்கு டவுண்லோடுஆகிக்கொண்டு இருப்பதனை காணலாம்.



சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் நமக்கான வீடியோ டவுண்லோடு ஆகிவிட்டிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, August 16, 2017

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட-Media Human youtube downloader

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கும் பதிவிறக்கம் செய்கையில் எம்பி4 பார்மெட்டுக்கும் எம்பி3 பார்மெட்டுக்கும் மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 28 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் https://www.mediahuman.com/youtube-video-downloader/32/செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 யூடியூப் யூஅர்எல் முகவரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். வரும் வீடியோவில் நீங்கள் தரவிறக்கம்செய்ய விரும்பும் வீடியோ அல்லது ஆடியொ என்பதனை முடிவு செய்து அதற்கேற்ப செட்டிங்ஸ் செய்திடவும்.
 நீங்கள்  காப்பிசெய்த அனைத்து வீடியோக்களும் பதிவிறங்கும். 
ஒவ்வொரு வீடியோவினையும் நாம் தனிதனியே ப்ரிவியூ பார்க்கலாம். அனைத்து வீடியோக்களும் பதிவிறக்கம் ஆனதும் நமது ஹார்ட்டிரைவினில் அதனை சேமித்து பயன்படுத்தலாம் 
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, August 9, 2017

வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாம் நம்முடைய மொபைல்போன்களை மாற்றிக்கொண்டே வருகின்றோம். அவ்வாறு மாற்றும் சமயம் நம்மிடம் பழைய போனில் உள்ள தொடர்புகள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.தகவல்கள் போன்றவற்றை ஒரு போனிலிருந்து மற்ற போனுக்கு மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இந்த தளம் :-https://drfone.wondershare.com/phone-transfer.html செல்லுங்கள். சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நான்கு வித டேப்புகள் அடங்கிய விண்டோ கொடுத்துள்ளார்கள்.

இதில் செல்பேசியிலிருந்து செல்பேசி,கணிணியிலிருந்து செல்பேசி.சேல்பேசியிலிருந்து கணிணி.செல்பேசி தகவல்களை அழித்தல் என கொடுத்துள்ளார்கள்.
 செல்பேசியிலிருந்து மற்றும் ஒரு செல்பேசிக்கு தகவல்களை அனுப்ப முதலில் அனுப்பவேண்டிய செல்பேசியை கணிணியில் இணைக்கவும். அடுத்து புதிய செல்பேசியை இணைக்கவும். விண்:டாவில் வரும் அறிவுரைக்கு ஏற்பவாறு மாற்றங்களை  செல்பேசியில் செய்திடவும்.


 உங்கள் தகவல்கள் ஒரு போனியலிருந்து மற்றும் ;ஒரு போனுக்கு மாறுவதை கவனிக்கலாம்.
உங்கள் பழைய செல்பேசியிலிருந்து தகவல்களை கணிணிக்கு மாற்றிட செல்பேசியை கணிணியில் இணைக்கவும். எந்த எந்த தகவல்களை கணிணியில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த தகவல்களை தேர்வு செய்யவும். கணிணியில் சேமிக்க விரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும்.பின்னர் ஒகே தர உங்கள் செல்பேசி தகவல்கள் கணிணியில் சேமிப்பாகும்.
 அதுபோல தகவல்களை கணிணியிலிருந்து  செல்போனுக்கு மாற்றிட செல்பேசியை இணைக்கவும். வரும் விண்டோவில் நீங்கள் எந்த எந்த தகவல்களை கணிணியிலிருந்து செல்பேசிக்கு மாற்றிட விரும்புகின்றீர்களோ அந்த தகவல்களை தேர்வு செய்யவும்.

உங்கள் செல்பேசியை மற்றவர்களுக்கு விற்க விரும்பினால் அதிலுள்ளதகவல்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவ்வாறு தகவல்களை அழித்துவிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.

செல்பேசியை கணிணியில் இணைத்து பின்னர ;இதில் உள்ள எரேஸ் கிளிக் செய்திடவும்.உங்கள் செல்பேசி தகவல்களை அழித்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.