Wednesday, February 14, 2018

வேலன்:-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரிக்க -Happy Card.

பரிசு அட்டை.வாழ்த்து அட்டை மற்றும் அழைப்பிதழ் நாமே தயாரிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 வாழ்த்து அட்டையை தேர்வு செய்தபின் வலதுபக்கம் நிறைய டெம்ப்ளேட்டுக்கள் கொடுத்துள்ளார்கள்.
 நமக்கு விருப்பமான டிசைனை தேர்வு செய்திடவும்.இதன் இடதுபுறம் சிறு சிறு படங்கள்.எழுத்துருக்கள்.புகைப்படம் தேர்வு செய்யும் வசதி கொடுத்துள்ளார்கள்.
 எழுத்துரு மாடல்கள்கொடுத்துள்ளார்கள். நமக:கு விருப்பமான எழுத்துருவினை தேர்வு செய்தால் அந்த மாடலில் நமக்கு எழுத்துரு கிடைக்கும்.
 சிறிதளவு கற்பனைதிறன் இருந்தால் போதும் நமக்கு விருப்பமான டிசைன்களை கொண்டுவரலாம்.

ஒவ்வொரு அட்டையிலும் நாம் விரும்பிய டிசைன்கள் 50 க்கும் மேல் கொண்டுவரலாம். டிசைன்செய்த அட்டைகளை நாம் சேமித்துவைக்கலாம் பரிசு அட்டை.வாழ்த்து அட்டை.அழைப்பிதழ் போன்றவற்றை நாமே நமக்கு தேவையானதை உருவாக்கலாம்.இதன் மூலம் விருப்பப்பட்டால் பிரிண்ட் செய்து மற்றவர்களுக்கு கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.