Monday, April 16, 2018

வேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend

நம்மிடம் உள்ள பெரிய அளவு கொண்ட  பைல்களை பிரிக்கவும்.பிரிந்துள்ள பைல்களை சேர்க்கவும்.பைல்களுக்கு பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும்.பைல்களை மறைக்கவும். புகைப்படங்களில் முக்கியமான தகவல்களை டெக்ஸ்ட் வடிவில் ரகசியமாக சேமிக்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுககு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள டேபினை கிளிக் செய்யவும்.பிரிக்கவேண்டிய பெரிய பைலினை தேர்வு செய்யவும். எம்பி கணக்கில் அலலது எண்ணிக்கை கணக்கில் தேர்வு செய்யவும்.ஸ்லிப்ட் என்பதனை தேர்வு செய்யவும். சில நிமிடங்களில் உங்களுடைய பைலானது துண்டுதுண்டாக மாறிவிடும். மற்றவர்களுக்கு அதனை எளிதாக அனுப்பிவிடலாம்.
அதுபோல து ண்டுதுண்டாக உள்ள பைல்களை ஒரே பைலாக மாறறிட துண்டுகளாக உள்ள பைலினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ஜாயின் என்பதனை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய பைலானது ஒரே பைலாக கிடைக்கும். இதுபோல புகைப்படங்களையும் மாறறலாம். அடுததுள்ள என்கிரிப்பட் எனபதனை தேர்வு செய்திடவும். பைலினை தேர்வு செய்திடவும். பின்னர் பாஸ்வேர்ட இரண்டுமுறை உள்ளீடு  செய்யவும். கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்;.
உங்கள் கணிணியில் உள்ள பைலானது மறைந்திருக்கும். அதனை பாஸ்வேர்ட் கொடுத்துதான மீண்டும் திறக்க முடியும். அதுபோல நாம் புகைப்படத்தினையும் பாஸ்வேர்ட் கொடுத்து மறைக்கலாம். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.


சில டாக்குமெண்ட்டுகள் முக்கியமானதாக இருக்கும். சில வங்கி பா ஸ்வேர்ட்க்ள். கணக்கு விவரங்கள் முக்கிய தகவல்கள் மறறவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் நீங்கள்சேமிக்கவிரும்பும் தகவல்களை உள்ளீடு செய்யவும். பின்னர் சேமிக்கவும்.
இப்போது புகைபபடத்தினை நிங்கள் திறந்துபார்த்தால் புகைப்படம் மட்டும் உங்களுக்கு தெரியுமு; அதில் உள்ள டெக்ஸ்ட் தெரியாது. உங்களுககு டெக்ஸ்ட் தெரியவேண்டும் என்றால் மீண்டும் இந்த சாப்ட்வேரினை திறந்து தேவையான புகைப்படத்தினை திறந்தவுடன உங்களுக் குபாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேர் கொடுத்ததும் உங்களுக்கான டெக்ஸ்ட் தெரியவரும். நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, April 6, 2018

வேலன்:-புளுரே வீடியோ பிளேயர் -8K Player

வீடியோக்களில் புளு ரே பைல்கள்.வீடியோ பைல்கள் டிவிடி பைல்களை ஓப்பன் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8K Player என பெயரிட்டுள்ள இந்த சாப்ட்வேர் 32 எம்.பி. கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இந்த இணைதளம் செல்ல இங்கு கிளிக் செய்திடவும்.
இதனை பதிவிறக்கம் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதிலுள்ள டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட பாப்அப் மேனு தோன்றும். அதில் Record Screen.Book mark.History. போன்ற மேனுக்கள் தோன்றும்.
வீடியோவினை ரெக்கார்ட் செய்யும் வசதியும் குறிப்பிட்ட பகுதியை அசைவு படமாக(GIF)மாற்றும் வசதியும் உள்ளது. 
வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை புகைப்படமாக எடுத:து சேமித்துவைக்கும் வசதியும் இதில் உள்ளது. புதிய மற்றும் பழைய ஆப்ரட்டிங் சிஸ்டம் இது ஆதரிப்பதால் எந்த கணினி பயன்படுத்துபவர்களும் இதனை பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.