Monday, April 22, 2019

வேலன்:-யூடியூப் பாடல்கள் பதிவிறக்கம் செய்திட -Youtube Song Downloader.

  யூடியூப் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இந்த இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.abelssoft.de/en/windows/Multimedia/YouTube-Song-Downloader செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் விணடோ ஓப்பன ஆகும்.
இதில் ஏற்கனவே நிறைய பாடல்கள் கொடுக்கப்பட:டுள்ளது. அதை விரும்பினால் நாம் பதிவிறக்கம் செய்யலாம்.
 🔻
புதியதாக பாடல்கள் நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் இதில் உள்ள தேடுதல் பொறியில் உங்கள விருப்பமான பாடல் பெயரையோ -இசை அமைப்பாளர் பெயரையோ -படத்தின்பெயரையோ தட்டச்சு செய்த பின்னர் தேடவும். இதிலேயே ப்ளேயர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது;.





விருப்பமான பாடலை கேட்டு மகிழலாம்.மேலும் இதனை தனியே நமது போல்டரில் போட்டு வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Saturday, April 6, 2019

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்.

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை நம்மிடம் உள்ள டிவைஸ்களுக்கு ஏற்ப வேண்டிய பார்மெட்டுக்கு உடனடியாக மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இது Audio Video Interleaved (AVI), Digital Video, DVD Video, Flash Video (FLV), H.264/MPEG 4, iTunes Video, Matroska Video (MKV), MPEG, QuickTime போன்ற பைல்களை ஆதரிப்பதுடன் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் உதவுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் டிராக் அன்ட் டிராப் முறையில் பைல்களை இழுந்து வந்து பொடவும். அல்லது இதில் உள்ள பைல் ஆட் பட்டன் மூலம் தேர்வு செய்யவும்.
நமக்கு வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இதில் உள்ள பார்மெட் டேபினை கிளிக் செய்யவும்
 
இதில் அனைத்துவிதமான பார்மெட்களும் கிடைக்கும். மேலும் ஒவ்வொரு பார்மெட்டிலும் வீடியோவின் குறைந்த .நடுத்தரமான.அதிகமான தரத்தினை நாம் தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வேண்டிய பார்மெட் தேர்வு செய்தபின்னர் உங்களுக்கு உங்களுடைய வீடியோ பைலானது கன்வர்ட் ஆகும்.

நீங்கள் சேமித்த இடத்தில் சென்று மாற்றப்பட்ட வீடியோவினை கண்டு பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.