Sunday, May 19, 2019

வேலன்:-பழுதான விண்ரேர் பைல்களை ஒப்பன் செய்திட -WIN RAR REPAIR TOOLAI

நாம் பயன்படுத்தும் வின்ரேர் பைல்கள் சிலசமயம் ஓப்பன் ஆகாமல் போகலாம். நமககு  கீழே உள்ள விண்டோவில் உள்ளவாறு எரர் மெசெஜ் வரும்.
 அவ்வாறு தகவல் வந்தால் அந்த வின்ரேர் பைல்களை நாம் திறந்து படிக்க முடியாது. அவாவறான வின்ரேர் பைல்களை படிக்க திறக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இநத இணையதளம் செலல இங்கு கிளிக் https://winrarrepair.recoverytoolbox.com/ செய்யவும். இங்குள்ள மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்ககொள்ளவும். உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.

 எரர் ஆன வின்ரேர் பைலினை தேர்வு செய்து ஓ.கே.தரவும்.
உங்கள் வின்ரேர் பைலில் உள்ள ஒவ்வொரு தகவல்களாக பிரித்து உங்களுக்கு எரர் இல்லாத பைலாக கிடைக்கும் பைல்களை பிரிப்பதற்கு உங்கள் பைல அளவினை பொறுத்து காலதாமதமாகலாம்.

எரர் பைல்களை நிவர்த்தி செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.

நீங்கள் விரும்பும் இடத்தில் அதனை சேவ் செய்திடவும். இப்போது நீங்கள் சேமித்த் இடத்தில் செனறு பார்த்தால் உங்களுக்கான வின்ரேர் பைலானது எரர் மெசெஜ் இல்லாமல் ஓப்பன் ஆகும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.