வேலன்:-வெவ்வேறு நாட்டினுடைய அலாரம் கடிகாரம் பயன்படுத்த

வெளி நாடுகளில் வேலை செய்வது இப்போது அதிகமாகிவிட்டது. நமது உறவினர்களோ நண்பர்களோ வேறு நாட்டில் வேலை செய்துவருகின்றார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் நேரங்கள் வேறுபடும். நமது நாட்டிற்கும் அவர்கள் நாட்டிற்கும் நேரங்கள் முன்னே பின்னே வரலாம் அவ்வாறான குறைகளை தீர்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 440 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் நீங்கள் கணிணியில் வைத்துள்ள நேரத்திற்கு டிஸ்பிளே ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் General.Appreance.Add clock.Alarm என நான்கு டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
 இதில் உள்ள அப்பியரன்ஸ் கிளிக்செய்து உங்கள் கடிகாரத்தின் நிறத்தினை வேண்டியவாறு கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் உள்ள ஆட்கிளாக் கிளிக் செய்தால் வரும் விண்டோவில் எல்லா நாட்டினுடைய நேரங்கள் கொடுத்துள்ளார்கள்.உங்களுக்கு எந்த நாட்டினுடைய நேரம் தேவையோ அதனை தேர்வு செய்யலாம்.கடிகாரத்தின் நிறத்தினையும் நீங்கள் தேர்வு செய்தவுடன் உங்களுக்கான கடிகாரம் டெக்ஸ்டாப்பில் டிஸ்பிளே ஆகும்.கடைசியாக உள்ள அலாரம் டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வெளிநாட்டில் வசிக்கும் நபருடன் நீங்கள் எந்த நேரத்திற்கு பேச வேண்டுமோ அந்த நேரத்தினை தேர்வு செய்து அவர்களுடன் பேசலாம்.
 மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் கம்ப்யூட்டர் நின்றுவிடவும். ரீஸ்டார்ட் செய்திடவும்.பூட்டி விடவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்கள் விருப்பத்திற்கு  ஏற்ப நீங்கள் கடிகார நிறத்தினையும் நேரத்தினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...