Tuesday, December 31, 2019

வேலன்:-டெக்ஸ்ட் பேட்.-RW Collection Small Text Pad

நோட் பேட் கணிணியில் உபயோகிப்பதுபோல இந்த சிறிய டெக்ஸ்ட் பேட் நமக்கு நிறையவழிகளில் உபயோகப்படுகின்றது. 400 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

புதியதாக பைல்களை உருவாக்கவும். டெக்ஸ்ட் பைல்களை ப்ரிவியூ பார்க்கவும் இதனை பயன்படுத்தலாம்.
டாக்குமெண்ட்களில் திருத்தங்கள் செய்திடவும் கட் செய்து காப்பி செய்யவும் காப்பி செய்ததை வேண்டிய இடத்தில் பேஸ்ட ;செய்திடவும் இது பயன்படுகின்றது.
இதில் உள்ள ப்ரிண்ட ஆப்ஷனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் General.Page setup.Apperance என மூன்று டேப்புகள்கொடுத்துள்ளார்கள்.
இதில் டாக்குமெண்ட்டை வேண்டியவாறு பிரிண்ட் செய்திட நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். இதன் மூலம் எளிதாக ப்ரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். பயன்படுத்த சுலபமாக உள்ளதால் ;நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, December 30, 2019

வேலன்:-போட்டோ ஸ்டாம்ப் ரீமூவர்.-Photo Stamp Remover

புகைப்படத்தில் தேவையில்லாத பகுதியை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளள வு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு குீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நாம் டெலிட் செய்யவிரும்பும் புகைப்படததின தேர்வு செய்யவும். பின்னர் இதில் வலதுபுறம் உள்ள டூல்களில் எந்த டூல் தேவையோ புகைப்படத்தில் நீக்க வேண்டிய அளவிற்கு ஏற்றார்போல் தேர்வு செய்யவும். பின்னர் அதனை புகைப்படத்தில் அப்ளை செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 இதில் உள்ள ரீமூவ் கிளிக செய்து சில நிமிடங்கள் காத்திருக்கவும். உங்களுக்கான புகைப்படம் பழுது நீக்கி தெளிவாக உங்களுக்கு கிடைக்கும்.

நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Sunday, December 29, 2019

வேலன்:- புகைப்படங்களை பென்சில் புகைப்படமாக மாற்ற

புகைப்படங்களை பென்சில் புகைப்படங்களாக மாற்ற இந்த சாப்ட்வேர பயன்படுகின்றது. 13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Add Files மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யவும். இதன்  வலதுபுறம் கீழ்கண்ட விண்டோ உள்ளது.
இதில் உள்ள Texture கிளிக் செய்திட கீழ்கண்ட பாப்அப் மெனு கிடைக்கும். இதில் ஸ்கெட்ச் எந்த அளவு வேண்டுமொ அதனை தேர்வு செய்யவும். 
வேண்டிய மாற்றங்கள் செய்தபின்னர் இதில் உள்ள ரன் கிளிக் செய்திட சில நொடிகளில் நமது புகைப்படம் நாம் விரும்பியவாறு பென்சில் புகைப்படமமாக மாறி உள்ளதை காணலாம். கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் மூலம் குறைந்த நேரத்த்தில் அதிகப்படியான புகைப்படங்களை பென்சில் புகைப்படமாக மாற்றிக்கொள்ளளலாம். பயன்படுத்துிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, December 24, 2019

வேலன்:-பிபிசி தலைப்புசெய்திகளை படிக்க -BBC Headlines

செய்திகளுக்கு நிறைய சேனல்கள் இருந்தாலும் பிபிசி என்றால் அதன் செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அவ்வாறான முக்கிய செய்திகளை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக ;செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில கீழேஉள்ள டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட பாப்அப் மெனு விரியும் அதில் Top Stories.World;Uk.Business.Politics.Health.Education & Family.Science & Environment.Technology.Entertainment & Arts,Asia.Europe.Neetherland.Us.America.Wales,Scotland போன்று எந்த தலைப்பில்வேண்டுமானாலும் நாம் தேர்வு செய்து இதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.
 இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் அன்றைய முக்கிய நிகழ்வுகளின் தலைப்புகளை காணலாம். தேவையானதை கிளிக்செய்ய உங்களுக்கு அந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வீடியோ பைல்களையும் கொடுத்துள்ளார்கள். வீடியோவினையும் நாம் கண்டு களிக்கலாம். இதன் மூலம் முக்கிய நிகழ்வுகளை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, December 22, 2019

வேலன்:-புகைப்படங்களில் அதன்நிகழ்வு பற்றிய குறிப்புகளை எழுத-Mwisoft

புகைப்படங்களை நாம் வெவ்வேறு காலங்களில் எடுத்திருப்போம்.அந்த பசுமையான நினைவுகளை நாம் அதில் குறித்துவைத்தால் சிலகாலம் கழித்து பார்க்கும் சமயம் பசுமையான நிகழ்வுகள் நினைவுக்கு வரும். 3 எம்.பி. கொள்ளளவுகொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
 இதில் நம்மிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்யவும். உங்களுடைய புகைப்படம் மேல் விண்டோவில் தெரியும். கீழே உள்ள விண்:டோவில் உங்களுக்கான போட்டோ பற்றிய குறிப்பை கீழே உள்ள விண்டோவில் தட்டச்சு செய்திடவும்.
இதுபோல ஒவ்வொரு புகைப்படத்தினையும் அதனை பற்றிய குறிப்பிட்ட தகவல்களையும் நாம் தட்டச்சு செய்திடலாம்.ஒவ்வொரு புகைப்படத்தினையும் அதனைபற்றிய தகவல்களையும் குறிப்பிட்டவுடன் சேவ் கமெண்ட் என்பதனை கிளிக் செய்து சேவ் செய்திடவும்.இப்போது புகைப்படம் பற்றிய தகவல்கள் சேமிப்பாகும் தேவைப்படும் சமயம் எடுத்து பார்த்து பழைய நினைவுகளில் முழ்கிவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, December 20, 2019

வேலன்:-டெம்ப்ரவரி பைல்களை டெலிட் செய்திட-Mwisoft

கணிணியை பயன்படுத்தும் சமயம் டெம்ரவரி பைல்கள் உருவாகும். அது நமது கணிணியில் ஹார்டிஸ்கில் இடம் பிடித்துகொள்ளும். அவ்வாறான டெம்பரவரி எம்டி பைல்களை டெலிட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது கணிணியில் உள்ள டிரைவ்களை தேர்வு செய்யவும். இப்போது டிரைவ்வில் உள்ள எம்டி போல்டர்கள் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது இதில் உள்ள டெலிட் கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


ஓ.கே.தாருங்கள். இப்போது உங்கள் டிரைவில் உள்ள எம்டி பைல்கள் டெலிட் ஆகி உங்களுக்கு டிரைவில் கூடுதல் இடம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

Saturday, December 14, 2019

வேலன்:-போல்டர்களை மற்றவர்கள் காப்பி செய்வது மற்றும் டெலிட் செய்வதை தவிர்க்க-Prevent exe

கணிணியில்நாம்வைத்துள்ளபர்சனல்டாக்குமெண்ட்கள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.போன்ற தகவல்களை மற்றவர்கள் cut.copy.,send to செய்யாமலிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 400 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்  ஹோட் கீ என நமக்கு எது தேவையோ அந்த கீ யை தட்டச்சு செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இப்போது நீங்கள் டிரைவில் உள்ள எந்த போல்டரையும் கட்.காப்பி.சென்ட் டூ செய்ய இயலாது. நீங்கள் போல்டரை ரைட் கிளிக் செய்து திறந்ததும் வரும் பாப்அப் மெனுவினை பாருங்கள். அதில் கட்.காப்பி.சென்ட்டூ மறைந்துள்ளதை காணலாம்.

 இப்போது நீங்கள் உங்கள் ஹாட் கீ யை ரிலிஸ் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இப்போது நீங்கள் உங்கள்போல்டர்களை விருப்பபடி கட்.காப்பி.சென்ட் டூ எளிதாக செய்யலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, December 11, 2019

வேலன்:-ஜிமெயிலினை பாஸ்வேர்ட்பாதுகாப்பு கொடுத்து அனுப்பிட

இணையத்தில் ஜிமெயில் மூலமாக நாம் தகவல்களை அனுப்புகினறோம். அவ்வாறு அனுப்பும் தகவல்களை மற்றவர்கள் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அப்படி அனுப்பிடும் ஜிமெயிலினையும் பாஸ்வேர்ட் ;கொடுத்து பாதுகாப்பாக அனுப்பிட இந்த இணையதளம் உதவிசெய்கின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் இமெயில் முகவரி நீங்கள் அனுப்பவிருப்புவரின் இமெயில் முகவரி.பாஸ்வேர் முதலியவற்றை தட்டச்சு செய்யவும். பின்னர் அனுப்பவேண்டிய தகவலை தட்டச்சுசெய்து ஒகே தாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 நீங்கள் அனுப்பியநபருக்கு மெயில் கீழ்கண்டவாறு வந்திருக்கும். அவர் அதனை திறக்கும் சமயம் அவரிடம் பாஸ்வேர்ட் கேட்கும்.
பாஸ்வேர்டினை தட்டச்சு செய்தர்ல அவருக்கான தகவல் தெரியும்.

நாம் தகவலை அனுப்பிய பிறகு அவருக்கு நாம் பாஸ்வேர்டினை நேரிலோ.தொலைபேசியிலோ குறுந்தகவலாகவோ அனுப்பிவிடலாம். பாஸ்வேர்டினை அவர்பார்த்து அவருக்கான மெயிலினை திறந்து பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் அனுப்பும் ஜிமெயிலானது இரண்டுமடங்கு பாதுகாப்பாக மாறிவிடுகின்றது. நீங்களும் பய்ன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். 

Friday, December 6, 2019

வேலன்:-போல்டர்களை விருப்பப்படி மாற்றிட-Folder Options

கணிணியில் உள்ள டிரைவ்களில் உள்ள போல்டர்களை நாம் விருப்பபடி அமைத்துக்கொள்ளலாம். போல்டர்கள் Thumbnail.Tiles.Icons.List.Details என எது விருப்பமோ அதன்படி கணிணியில் உள்ள அனைத்து போல்டர்களையும் நாம் மாற்றிக்கொள்ளலாம்.முதலில் ஏதாவது ஒரு டிரைவிளை திறந்துகொள்ளவும். பின்னர் உங்களுக்கு விருப்பமான வியூவினை தேர்வு செய்ய வியூவினை திறந்து அதில் ஏதாவது ஓன்றை தேர்வு செய்யுங்கள். பின்னர் போல்டர் ஆப்ஷன் தேர்வு செய்யுங்கள். உஙகளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் உள்ள Apply for all Folders கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
யெஸ் கொடுத்து பின்னர் ஒகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போத உங்கள் கணிணியில் உளள அனைத்து போல்டர்களும் ஓரே வியு+வில் தோற்றமளிப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, December 3, 2019

வேலன்:-டாக்குமெண்ட் மேனேஜர்;Wonderfox Doument Manager.

நமது கணினியில் உள்ள வேர்ட்.எக்ஸெல்,பவர்பாயிண்ட்,பிடிஎப் போன்ற பைல்களை பார்வையிட.படிக்க.கடவுச்சொல் கொடுத்து பா துகாக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதன் வலதுபுறம் வேர்ட்.எக்ஸெல்.பவர்பாயிண்ட்,பிடிஎப் போன்ற அப்ளிகேஷன்களின் ஐகான்கள் இருக்கும். இதில் எது தேவையோ அதனை ;கிளிக் செய்யவும்.
 வேர்ட் ஐகானை கிளிக் செய்தால் அதற்கான பைல்கள் மொத்தம் திறக்கும்.

இந்த விண்டோவில் கீழே உள்ள ஆல் என்கின்ற ஐகானை கிளிக் செய்தால் நமது கணினியில் உள்ள வேர்ட்,எக்ஸெல்,பவர்பாயிண்ட்,பிடிஎப் என அனைத்து பைல்களும் டிரைவ் வாரியாக திறக்கும். தேவையானதை நாம் பார்வையிடலாம்.
இதன் மேல்புறத்தில் நிறைய டேப்புகள்கொடுத்துள்ளார்கள். அதில் ஹாட்டிஸ்க் டிரைவில் உள்ள பைல்களுக்கு மறுபெயர் வைத்தல்,இடம் மாற்றுதல்,டிரைவிலிருந்து வேறு டிரைவிற்கு மாற்றுதல்,போல்டரை இணைத்தல்,பைலினை மறைத்துவைத்தல்,பைலினை கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்த்ல் போன்ற பணிகளை செய்திடலாம்.
மேலும் நமது பைல்களை பேக் அப் எடுத்தும் தேவையான இடத்தில் சேமிக்கு வைக்கும் வச்தியையும் இதில் கொடுத்துள்ளார்கள். கீழெ உள்ள விண்டேவில் பாருங்கள்.
குறைந்த நேரத்தில் அனைத்துவிதமான பணிகளையும் நாம் செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.