Saturday, September 26, 2020

வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN

சிலர் பழைய வாகனங்களை வாங்க விரும்புவார். ஆனால் அதன் தயாரிப்பு விவரம்.உரிமையாளர் விவரம். இன்சூரன்ஸ் விவரம்,எப்சி விவரம் தெரியாது.மத்திய அரசின் இந்த இணையதளம் வண்டியின்  வாகனத்தின் அனைத்து விவரங்களையும்நமக்கு தருகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். அங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் முதலில் உள்ள கட்டத்தில் உங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய வண்டியின் வாகனத்தின்  எண்ணினை தட்டச்சு செய்திடவும். கீழே உள்ள கேப்சா கோடினை தட்டச்சு செய்திடவும்.
 சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு வண்டியின் -வாகனத்தின் முழுவிவரம் தெரியவரும்.
வண்டி-வாகனம்  எங்கு பதிவு செய்யப்பட்டது,வண்டியின் -வாகனத்தின் பதிவு எண்,பதிவு செய்த தேதி,செஸ் எண்.இஞ்சின ;எண்,உரிமையாளர் பெயர்,வண்டியின் வாகனத்தின்  மாடல்,தயாரிப்பு நிறுவன பெயர்.இன்சூரன்ஸ் விவரம்,பாலிஸி விவரம் வண்டிக்கு-வாகனத்திற்கு  பைனாஸ் போட்டிருந்தால் அதன் விவரம் என அனைத்து விவரங்களும் நமக்கு தெரிந்துவிடும். பழைய வண்டி வாகனம் வாங்குதாக இருந்தால் இந்த விவரங்களுடன் வண்டி வாகன செஸ் மற்றும் இஞ்சின் எண் சரியாக இருந்தால் வண்டியை வாகனத்தினை நீங்கள் தைரியமாக வாங்கிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்
வாழ்கவளமுடன்
வேலன். 

Wednesday, September 23, 2020

வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.

புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்கவும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 மாற்றவேண்டிய புகைப்படங்களையோ -போல்டர்களையோ தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அடுத்து கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 தேவையான பார்மெட்டினை தேர் வு செய்திடவும்.
நீங்கள் புகைப்படத்தினை எந்த அளவில் சதவீதத்தில் குறைக்கவேண்டுமோ அந்த சதவீதத்தினை தேர்வு செய்திடவும். பின்னர் இதில் உள்ள ரீசைஸ் கிளிக் செய்திடவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் ;உங்கள் புகைப்படங்கள் அ;னைத்தும் தரம் குறையாமல் அளவு குறைந்து காணப்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, September 14, 2020

வேலன்:-இணையதள விளம்பரபக்கங்களை தவிர்த்திட-Adw Cleaner

கணிணியில் இணைய இணைப்பு பெற நாம் விதவிதமான ப்ரவ்சர்களை பயன்படுத்திவருகின்றோம். அவ்வாறு பயன்படுத்துகையில் சில அப்ளிகேஷ்களையோ,சில இணையதளங்களையோ பயன்படுத்துகையில் நமது முதன்மைபக்கமானது மறைந்து விளம்பரதாரர்களின் பக்கம் திறக்கும். நாம் எந்த தேடல்களை தட்டச்சு செய்தாலும் அந்த விளம்பரதாரர்களின் பக்கம் மூலமே செல்லவேண்டும்.அதனை தவிர்க்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பயன்படுத்த இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்கேன் கிளிக் செய்யவும். சில நிமிடங்கள் காத்திருப்புக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த எந்த எந்த விளம்பரங்கள் உங்கள் ப்ரவ்சரில் உள்ளதோ அவை அனைத்தும் உங்களுக்கு காண்பிக்கும். இதில் உள்ள கிளியர் கிளிக் செய்திட சில நிமிடங்களில் அனைஅனைத்தும் அழிந்துவிடும். ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து உங்கள் ப்ரவ்சரை ஒப்பன் செய்கையில உங்களுடைய விருப்பமான தேடல்தளமே ஒப்பன் ;ஆகும். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Saturday, September 12, 2020

வேலன்:-வானிலை நிலவரம் அறிந்துகொள்ள -Havvas

மழைக்காலங்களில் மழை எப்போது வரும் என அறிய வானிலை நிலவரம் பார்ப்போம். அந்த வானிலை நிலவரம் உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்'டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில நீங்கள் விரும்பும் நகரத்தினை தட்டச்சு செய்திடவும். பின்னர் இதன் அடுத:துள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். 
வரும் விண்டோவில் சென்டிகிரேட் அல்லது பாரண்ஹீட் தேர்வு செய்திடவும்.குறிப்பிட்ட நேரத்தில் வானிலை அறிந்துகொள்ள ரீமைண்டர் நாம் செட் செய்திடலாம். இதில் தேதி மற்றும் நேரத்தினை செட் செய்து கீழே உள்ள ஆட் பட்டனை கிளிக் செய்யவும். 
 உங்களுக்கான வானிலை நிலவரம் உங்கள் டெக்ஸ்டாப்பில் டிஸ்பிளே ஆகும். 
இதன் மூலம் உங்கள் நகரத்தின் வானிலைஅறிக்கையை நாம் உடனுக்குடன் அறிந்துகொள்லாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்