Thursday, October 29, 2020

வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter


நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களை .jpg.png.bmp.tiff.gif.eps.html.wmf.tex.doc என விருப்பிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.மற்ற பார்மெட்டுக்களில் உள்ள பைல்களை பிடிஎப் பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றதுஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு:கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் எந்த பார்மெட்டுக்கு பிடிஎப்பைலினை மாற்ற வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
கன்வர்ட் கொடுக்கவும். சில நொடிகள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் பைலானது மாறியிருப்பதை காணலாம். 
அதுபோல உங்களிடம் உள்ள .jpg.png.bmp.tiff.gif.eps.html.wmf.tex.doc பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிட இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம். கீழெ உள் ளவிண்டோவில் பாருங்கள்.
இப்போது நீங்கள் தேர்வு செய்த பைலானது பிடிஎப் பைலாக மாறியிருப்பதை காணலாம்.
இதுபோல உங்களிடம் உள்ள பிடிஎப் பைல்களை வேண்டிய பார்மெடடுக்கு மாற்றிடவும் வேவ்வொறு பார்மெடடில் உள்ள பைல்களை பிடிஎப் பைலாக மாற்றிடவும் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, October 28, 2020

வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.

சில வீடியோக்களில் நாம் தனிப்பட்ட படங்கள் ;வைத்திருப்போம். அவ்வாறான வீடியோக்களை நாம் கடவுச்சொல் கொடுத்து பாதுகாத்து வைக்கலாம். நாம் தேவைப்படும் சமயம் இந்த மென்பொருள் மூலம் வீடியோவினை கடவுச்சொல் நீக்கி பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்திட இஙகு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளை முதன் முதலில் நீங்கள் பயன்படுத்துகையில்  நீங்கள் கடவுச்சொல்லினை உள்ளீட வேண்டும்.  

 ஒ,கே.சொல்லி வெளியேறுங்கள். அடுத்து மீண்டும் நீங்கள் இந்த மென்பொருளை திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். பின்னர் கடவுச்சொல்  உள்ளிட சொல்லி அதற்கான விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் கொடுத்து கடவுச்சொல்லினை கொடுக்கவும்.
இப்பொது மீண்டும் உங்களுக்கு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய வீடியோ பைலினை திறக்கவும்.
 இதன் வலதுபுறம் லாக்கார்.அன்;லாக்கர்.டெலிட்டர்.செட்டிங்ஸ் பிளேயர் என ஐகான்கள் கொடுத்துள்ளார்கள்


பூட்டு ஐகானினை கிளிக் செய்து தேவையான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள். இப்:போது அந்த வீடீயோ உள்ள இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது கீழ்கண்டவாறு தெரியவரும்.
உங்களின் உண்மையான வீடியோவானது மறைந்து இந்த வீடியோ தெரியவரும். இதில் நீங்கள் ப்ளே செய்யும் சமயம் வீடியோ தெரியாது.இப்போது மீண்டும்  உங்கள் மென்பொருளை திறங்கள்.உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்திடுங்கள். பின்னர் அன்லாக் பட்டனை கிளிக் செய்திடுங்கள். உங்கள் வீடியொவானது இப்போது ப்ளே ஆகும். வீடியோவினை பார்த்து மகிழலாம். இவ்வாறாக உங்கள் வசம் வீடியோ பைல்களை மற்றவர்கள்  பார்வையிலிருந்து மறைத்து நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, October 27, 2020

வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View

நமது ஹார்டிஸ்கில் உள்ள ஒவ்வொரு டிரைவ் மற்றும் அதனுள் உள்ள டிஸ்க் கவுண்டர்ஸ் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 40 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில ;நாம் கணணியில் இணைத்துள்ள ஒவ்வொரு டிரைவினையும் மற்றும அதில் எழுதப்பட்டுள்ள பைல்களின் அளவு.ரீட் கவுண்ட்.ரைட் கவுண்ட்.ரீட் பைட்ஸ்.ரைட் பைட்ஸ் மற்றும் ரீடிங் ;டைம் சிலிண்டர்கள் எண்ணிக்கை.போன்று  19 க்கும் மேற்பட்ட விவரங்கள். நமக்கு கிடைக்கும. பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, October 26, 2020

வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer

புதியதாக ஒ.எஸ் அடிக்கும் சமயம் நாம் கணிணி வல்லுனர்கள் மூலம் ஒ.எஸ் மாற்றுவோம். அவர்கள் கொடுக்கும் சிடியின் மூலம் ஆபரேடிங் சிஸ்டம்;இன்ஸ்டால் செய்வார்கள். பின்னர் சிடியை நம்மிடம்கொடுததுவிட்டு சென்றுவிடுவார்கள். அதன் கீ நம்மிடம்இருக்காது. சிடியிருந்தாலும் கீ இல்லையென்றால் பயன்படுத்துவது கடினம். அவ்வாறு நம்முடைய சிடியின் கீயை கண்டுபிடிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கான விண்டோ ஆக்டிவேசன் கீ ஆனது கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, October 25, 2020

வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer

புகைப்படங்கள் எந்த வகை பார்மெட்டில் இருந்தாலும் அதனை பார்வையிட மாற்றங்கள் செய்திட பிரிண்ட் செய்திட.வால்பேப்பராக வைத்திட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும ;விண்டோவில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தினையோ புகைப்படங்கள் உள்ள போல்டரினையோ தேர்வு செய்திடவும். 


நீங்கள் தேர்வு செய்த புகைப்படம் எந்த பார்மெட்டில் உள்ள தோ அந்த பார்மெட்டானது வாட்டர்மார்க்கில் புகைப்படத்தின வலதுபுறம் தோன்றும். அதுபோல  புகைப்படத்தின் ப்ரிவியூவும் சிறிய விண்டொவாக தோன்றும்.தேவையில்லையென்றால் ;அதனை நிங்கள் நீக்கி கொள்ள்லாம்.


 இதில் உள்ள பைல் கிளிக் செய்திட வரும் விண்டோவில் வால்பேப்பர் என கிளிக் செய்திட வரும் விண்டோவில் நீங்கள் புகைப்படத்தினை வால்பேப்பராக வைக்கும் ஆப்ஷனை தேர்வு செய்திடலாம்.
 ஓன்றுக்கும் :மேற்பட்ட புகைப்படங்களை தேரவு செய்கையில் நீங்கள் இதன் கீழே உள்ள அம்புகுறியை கிளிக் செய்வதன் மூலம் புகைப்படங்களை மாற்றி மாற்றி பார்வையிடலாம். 

இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்திட படமானது உங்கள் முழுஸ்கிரீனிலும் தெரியவரும். மேலும் இதில் உள்ள ஸ்லைடரினை நகர்ததுவது மூலம் புகைப்படத்தினை பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றி பார்வையிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Saturday, October 24, 2020

வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள

கணக்கு பாடத்தில் முக்கியமான பாடமான பரப்பளவு,சுற்றளவு.கொள்ளளவு கண்டுபிடிக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 2D Shapes என்பதில் Square.Rectangle.Circle.Triangle.Parallelogram.Tripezoid.Ellipse போன்றவற்றின் அளவுகளை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
 வரும் டேபில் உங்களுக்கு தேவையான வடிவத்தினை தேர்வு செய்யவும். நான் முக்கோணம் தேர்வு செய்துள்ளேன்.இதில் மூன்று பக்கங்களின் அளவினையும் உயரத்தினையும் குறிப்பிடவும். பின்னர் இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்யவும். உங்களுக்கு சில வினாடிகளில் அதன் சுற்றளவு மற்றும் ஏரியா உங்களுக்கு கிடைக்கும்.அதுபோல முப்பரிமான வடிவங்களில் 11 வடிவங்கள் கொடுத்துள்ளார்கள்.
இதிலிலும் நமக்கு தேவையான அளவினை கொடுத்தால் நமக்கான விடை உடனே கிடைக்கும். மாணவர்களுக்கு இது மிகவும் பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, October 23, 2020

வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister

எழுத்துருக்களில் வேண்டிய டிசைன் செய்து பயன்படுத்திட நாம் போட்டோஷாப் மற்றும் வேர்ட் பயன்படுத்துவோம்  ஆனால் இந்த மென்பொருளில் தேவையான டிசைன்கள் செய்திட உதவுகின்றது.
இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதில் இரண்டாவதாக உள்ள டைட்டிலில் உங்களுக்கு விருப்பமான எழுத்துருவினை தட்டச்சு செய்திடவும்.

 இதன் கீழே உள்ள டேப்பில் ஸ்டைல் என்கின்ற தலைப்பில் நிறைய டிசைன்கள்கொடுத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்திட ப்ரிவியூ விண்டோவில் எழுத்துருக்கள் மாறுவதினை காணலாம்.
 இதில் உள்ள சர்பேஸ் என்பதினை கிளிக் செய்திட வரும் விண்டோவில் எழுத்துருக்கள் என்ன என்ன டிசைன்கள் வேண்டுமோ அதனை கொண்டுவரலாம். 
 மைக்ரோசாப்ட் வேர்டில் எழுத்துருக்கு என்று தனியே டிசைன்செய்திடலாம். அதனை விட கூடுதலாக இதில் வேவ்வெறான டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில பாருங்கள். 
 இதனை போல அவுட்லைன் மற்றும் 3டி பெவல் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்திட ப்ரிவியூவிண்டோவில் அது மாறுவதினை நாம் காணலாம்.
 எழுத்துருவில் நிழல் எபெக்ட் கொண்டுவர இதனை பயன்படுத்தலாம்.
 தேர்ந்தெடுத்த வார்த்தையினை நாம் ப்ரேம் கொண்டு டிசைன்செய்யலாம். விதவிதமான ப்ரேம்கள் கொடுத்துள்ளார்கள்.
 இதில் கூடுதலாக எடிட் இமெஜ் கொடுத்துளார்கள்.அதில் வேண்டிய ஸ்லைடரினை நகர்த்துவது மூலம் தேவையான மாடலினை நாம் கொண்டுவரலாம்.
 நாம் ஒவ்வொன்றாக மாற்றிப்பார்க்காமல் மொத்த டிசைன்களினையும் ப்ரிவியூவாக கொண்டுவர இதில் டெக்ஸ்ட் எபெக்ட் ஜெனரேட்டர் கொடுத்துள்ளார்கள். 
அதில் உள்ள ஸ்டார்ட் கிளிக் செய்திட நமக்கான எழுத்துருவானது விதவிதமாக மாறுவதினை காணலாம். தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் யூடியூப் பிலும் எழுத்துருவினை கொண்டுவரலாம். மேலும் விவரமாக அறிந்துகொள்ள பிடிஎப் வடிவில் இதில் கையேடும்கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Thursday, October 22, 2020

வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player

நிறைவான வசதிகளுடன் பயன்படுத்த எளிமையான ப்ளேயராக இந்த வீடியோ ப்ளேயர் உள்ளது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களுக்கான வீடியோ தேர்வு செய்திடவும்.வீடியோவானது ப்ளே ஆக ஆரம்பிக்கும்.
 இதில் உள்ள மெனு கிளிக் செய்திட கீழ்கணட விண்டோ ஓப்பன்ஆகும்.இதில் நிறைய ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
 இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வீடியோவில் தேவையான மாற்றங்கள் நாம் இதில் செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, October 21, 2020

வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF

பிடிஎப் பைல்களை PDF to Images.Images to PDF.Excell to PDF.PDF to Word.Word to PDF என மாற்றிடவும்.Merge/Splite.Rotate Page.Crop Pages.Extract Page.Remove Pages.Watermark.என வகைப்படுத்தவும்.கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது, இதன்இணையதளம்சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் டிராக் அன்ட் டிராப் முறையிலோ பைல்களை தேர்வு செய்தோ உங்களிடம் உள்ள பிடிஎப் பைலினை தேர்வு செய்திடவும்.

இதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
எந்த ஆப்ஷனை நீங்கள் பயன்படுத்தப்போகின்றீர்களோ அதனை தேர்வுசெய்திடவும். பக்கத்தில் உள்ள விண்டோவில் அதற்கான வசதிகள்கொண்ட பக்கம் உங்களுக்கு திறக்கும்.

 அதுபோல பிடிஎப் பைல்களை நீங்கள் கடவுச்சொல்கொடுத்தும் பாதுகாக்கலாம். அதற்கான ஆப்ஷனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Print.Modify.Copy.Annotation.Formfil.Accessablity.Document assebly.High resolution printing என நிறைய ஆப்ஷன்களுக்கு எதிரே ரேடியோ பட்டனை கொடுத்துள்ளார்கள் நீங்கள் :தேவையானதை தேர்வு செய்து கடவுச்சொல்லும் கொடுத்து பாதுகாக்கலாம். பாதுகாப்பு தேவையில்லாதபோது அதனை மேற்கொண்ட முறையில்நீக்கி விடலாம்.பல வசதிகள்கொண்ட இந்த மென்பொருளை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, October 20, 2020

வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.

சில புகைப்படங்கள் நாம் எடுக்கையில் வெளிச்சம் குறைவாகவும் புகைப்படம் தரம் குறைவாகவும். அவ்வாறான புகைப்படங்களை நாம் போட்டோஷாப் துணையில்லாமல் நாம் விரும்பியவாறு கொண்டுவர இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்றுஇதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான புகைபப்டத்தினை தேர்வு செய்திடவும். கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும்.

 Automatic Optimization,Auto Color என இரண்டு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில் ஆட்டோமெடிக் என்கின்ற ஆப்ஷனை ஆன் செய்து நமக்கு விருப்பத்திற்கு ஏற்றவாறு புகைப்படத்தினை கொண்டுவரலாம்.புகைப்படத்தினை பற்றிய விவரம் அறிய இதில் வசதி செய்து கொடுத்துள்ளார்கள்.
 மேலும் புகைப்படத்தின் தரம் குறையாமல் அளவினை குறைக்கவும்,வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இதில் ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.
இறுதியாக புகைப்படத்தினை நீங்கள் விரும்பிய இடத்தில் சேவ் செய்து பயன்படுத்தலாம். இதில் நேரடியாக ப்ரிவியூ பார்க்கும் வசதி கொடுத்துள்ளார்கள். பார்த்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, October 19, 2020

வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.

lநம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியோக்களை ஒன்றாக இணைக்கவும்.வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். 
 இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நமக்கு தேவையான வீடியோக்களை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து எந்த பார்மெட்டில் நமக்கு வீடியோ வரவேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும். 
 இறுதியாக ஒ.கே. தரவும் .உங்களுடைய வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டுக்குமாறுவதை காணலாம்.

கடைசியாக நீங்கள் சேமித்த இடத்திற்கு சென்று வார்த்தால் உங்களுடைய வீடியோவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் உள்ளதை காணலாம்;.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, October 18, 2020

வேலன்:-செல்பேசியில் உள்ள தொடர்புஎண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ள -Cell phone Contact to print.

செல்பேசியில் உள்ள தொடர்பு எண்களை கணினியில் எக்ஸெல் பைல்களாக சேமிக்கவும். தனியே பிரிண்ட் எடுத்து வைக்கவும் எப்படி என பார்க்கலாம். முதலில் உங்கள் கைபேசியில் உள்ள தொடர்பு எண்களை உங்கள் கூகுள் கணக்கில்சேமியுங்கள். பின்னர் உங்கள் ஜிமெயில் கணக்கினை திறந்துகொள்ளுங்கள். இப்போது இதில் உள்ள கூகுள் ஆப்ஸ்  கிளிக் செய்யுங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில் உள்ள கான்டாக்ட் (Contacts) கிளிக்செய்திடவும். இப்போது இதில் உள்ள மோர் (More) என்பதினை கிளிக் செய்யுங்கள். இப்போது கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள எக்ஸ்போர்ட் (Export) என்பதினை கிளிக் செய்யவும்.
 வரும் விண்டோவில் Which export Format? என்பதில்   Google (Csv Format ) என்பதினை தேர்வு செய்து எக்ஸ்பர்ட் (Expert) கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கான கான்டாக்ட் பைலானது எக்ஸெல் பார்மெட்டில் சேமிப்பாகும்.
 இதனையோ நீங்கள் பிரிண்ட் எடுத்து சேமிக்க விரும்பினால் More என்பதினை கிளிக் செய்து அதில் Print என்பதினை தேர்வு செய்யவும்.


இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
அதில் பிரிண்ட் என்பதினை தேர்வு செய்யவும். உங்களுக்கான கான்டாக்ட் பைலானது மீண்டும் உங்களுக்கு கிடைக்கும். இதில் கர்சரினை பைலினுடைய நடுவில் வைத்து ரைட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இப்போது உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் பிரிண்ட் என்பதினை தேர்வு செய்திடவும். இப்போது உங்களுக்கான பிரிண்டர் விண்டோ திறக்கும் உங்கள் வசம் பிரிண்டர் இருந்தால்  தொடர்பு எண்களை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதையே நீங்கள் பிடிஎப் பைலாக வேண்டுமானாலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.