Monday, January 18, 2021

வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.

 -குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.

பிஎஸ்என்எல் பைபர் நெட் ஓர்க் குறைந்த கட்டணத்தில் புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்திஉள்ளது. அக்டோபர் 2020 மாதத்தில் இருந்து புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்திஉள்ளது. ரூபாய் 449 -ல் ஆரம்பித்து வெவ்வேறு டெரிப்புகளில் 16999 வரை மாதக்கட்டணம் உள்ளது. மாதம் 449 ரூபாய் கட்டணத்தில் 3300 ஜிபி வரை 30 Mbps வேகத்தில் கிடைக்கின்றது.


இதுதவிர வைபை இணைப்பும் கிடைப்பதால் வீட்டில்எந்த இடத்திலும் இதன் சிக்னலை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் #லேண்ட்லைன் போன் #அன்லிமிடெட் கிடைக்கின்றது.மோடத்திற்கான கட்டணம் 3000 ரூபாய் உங்களுக்கு வரும் முதல் பில்லில் சேர்ந்துவரும்.நீங்கள் இணைப்பு பெற்ற நாளில் இருந்து 6 மாதங்களுக்கு இந்த சலுகைகளை அனுபவிக்கலாம். அரசாங்கம் சலுகை காலத்தினை மேலும் நீட்டிக்கலாம்.இந்த இணைப்பின் மூலம் #லேப்டாப்.#பிசி.#ஆன்ட்ராய்ட் டிவி மற்றும் #மொபைல்போன்கள் பயன்படுத்தலாம். மொபைல்போன் 5 வரை வைபை இணைப்பின் மூலம் பயன்படுத்தினாலும் இதன் வேகம் குறைவதில்லை.



நீங்கள் வீட்டில் தனிதனியே ஒவ்வொரு மொபைலுக்கும் பணம் செலவழிப்பதை தவிர்த்து ஒரே கட்டணத்தில் அனைத்து வசதிகளையும் பெறலாம்.நான் இரண்டு மாதமாக இந்த இணைப்பை பயன்படுத்தி வருகின்றேன். மாதக்கட்டணம் மொத்தம் 518 மட்டுமே வருகின்றது

.#புதிய இணைப்பு பெற இதில் லிங்க் கொடுத்துள்ளேன். உங்கள் பகுதி கேபிள் ஆப்பரேட்டரையும் நீங்கள் தொடர்பு கொண்டு இணைப்பினை பெறலாம். நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லிய தகவலை அனைவரும் அறிந்துகொள்ள இதனை பதிவிடுகின்றேன்.