
கீ போர்ட் கீ கள் பாடம் -1
கீ போர்ட்டில் கீ கள் பார்த்திருப்போம்.
ஆனால் அதில் உள்ள ஆங்கில கீ கள்
26 - ம் நம்பர் எழுத்துக்கள் 0-முதல் 9 வரை
தான் அதிகம் உபயோகிப்போம். மற்ற கீ களின்
பயன்களை நாம் அவ்வளவாக பயன் படுத்துவது
இல்லை. நிறைய கீ பயன்பாடுகள் நமக்கு தெரிவ
தில்லை - தெரிந்தும் பயன்படுத்துவதில்லை.
இன்று முதலில் பிரிண்ட் ஸ்கீன் Print Screen
key பயன்பாடு கள் பற்றி பார்ப்போம்.
நம்மிடம் உள்ள டாக்குமெண்ட், புகைப்படங்கள்,
பிடிஎப் பைல்கள் பார்ப்போம். அதில் உள்ள
படங்கள் , குறிப்புகள் நமக்கு தேவைப்படும்.
ஆனால் குறிப்பி்ட்ட பகுதியை மட்டும்
(நமது டெக்ஸ்டாபில் தெரிவதை) தேர்ந்த்
தேடுத்து அதை பயன் படுத்த உதவுவதுதான்
இந்த பிரிண்ட் ஸ்கிரீன் கீ. சரி இதை எப்படி
பயன் படுத்துவது என பார்ப்போம்.
நீங்கள் விரும்பும் புகைப்படமோ - டாக்குமெண்டோ
பிடிஎப் பைலோ முழுதிரையில் கொண்டு வாருங்கள்.
அடுத்து பிரிண்ட் ஸ்கீரினை அழுத்துங்கள்.
அடுத்து மவுஸ் மூலம் Start - Programes-Accessories-
Paint தேர்ந்தேடுங்கள்.

மேற்கண்ட படி தேர்ந்தேடுங்கள்.
இப்போது உங்களுக்கு Paint Open ஆகும்.

அதில் உள்ள Edit- Paste தேர்ந்தேடுங்கள்.

கிளிக் செய்யுங்கள். உங்களது படம் ஆனது Paint-ல்
காப்பி ஆகும். அதை விரும்பிய டிரைவில்
சேவ் செய்யவும்.
இங்கு புகைப்படங்களின் தொகுப்பை
பதிவிட்டுள்ளேன்.
இதில் தஞ்சாவூரின் புகைப்படங்கள் உள்ளது.

இதில் தஞ்சாவூர் கோபுரம் மட்டும் நமக்கு தேவை.
அதைமட்டும் தனியாக எப்படி எடுப்பது?
முதலில் மேற்கண்டபடி பிரிண்ட் ஸ்கிரீன்
கீ யை அழுத்தி பெயிண்ட்டில் பேஸ்ட்
செய்யவும். அடுத்து அதில் உள்ள செல்க்சன்
டூல் மூலம் தேவையான படத்தை செல்ட்
செய்து அதை காப்பி செய்து புதிய பெயிண்ட்
சாரளம் திறந்து மீண்டும் பேஸ்ட் செய்யவும்.
நான் தனியாக தேர்ந்தேடுத்துள்ள
தஞ்சாவூர் கோயிலி்ன் கோபுரம் படம் கீழே.

இதுபோல் நீங்கள் உங்கள் டாக்குமெண்ட்கள்,
பிடிஎப் பைல்களின் குறிப்பிட்ட பகுதிகள்
தேர்ந்தெடுக்கலாம்.
நமது கணிணியில் வரும் எரர் மெசேஜ்யை
மேற்கண்ட முறையில் காப்பி செய்து
கணிணி சர்வீஸ் இன்ஜினியர் வரும்
சமயம் காண்பிக்கலாம்.
இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
CD-R க்கும் CD-RW க்கும் என்ன வித்தியாசம்?
CD-R ல் தகவல்களை ஒரு முறை மட்டுமே எழுத முடியும்.
CD-RW ல்தகவல்களை பலமுறை எழுதி
அழித்து மீண்டும் எழுத முடியும்.
great tips
ReplyDelete//நமது கணிணியில் வரும் எரர் மெசேஜ்யை
மேற்கண்ட முறையில் காப்பி செய்து
கணிணி சர்வீஸ் இன்ஜினியர் வரும்
சமயம் காண்பிக்கலாம்.
தமிழ்நெஞ்சம் கூறியது...
ReplyDeletegreat tips
//நமது கணிணியில் வரும் எரர் மெசேஜ்யை
மேற்கண்ட முறையில் காப்பி செய்து
கணிணி சர்வீஸ் இன்ஜினியர் வரும்
சமயம் காண்பிக்கலாம்.//
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்:,
வேலன்.