போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-3



போட்டோஷாப்பில் இன்று மூன்றாவது பாடம்.

முதல் இரண்டு பாடங்கள் படிக்காதவர்கள்

இரண்டு பாடங்களையும் படித்துவிட்டு

தொடர்ந்து இந்த பாடம் படிக்கவும். புதியவர்

களுக்காக முதல் இரண்டு பாடங்கள் கீழே:-



போட்டோஷாப் முதல் பாடம்-1
போட்டோஷாப் இரண்டாம் பாடம்-2


சென்ற வார பதிவுகளில் Morquee Tools

பற்றி பார்த்தோம். இப்போது இந்த

மார்க்யு டூலை தேர்வுசெய்து மேலும்

பல வசதிகளை பெறுவது பற்றி பார்ப்போம்.

இப்போது நீங்கள் உங்கள் போட்டோஷாப்பில்

பார்த்தீர்களே யானல் உங்களுக்கு File,Edit,Image

பாருக்கு கீழ் இருப்பதுதான் Options Bar. இதில்

செலக் ஷன் டூல்கள் 4 இருக்கும். அந்த டூல்கள்

தான் இவை:-




இதில் முதலில் இருப்பது New Selection. சென்ற பதிவில்

இதை பார்த்தோம். சதுரமாகவோ - செவ்வகமாக வோ

படம் இருந்தால் தேர்வு செய்துவிடுகின்றோம். ஆனால்

அதுவோ செவ்வகம் நெடுக்கு வசத்திலும் - படுக்கை

வசத்திலும் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால் என்ன

செய்வீர்கள். அதற்குதான் இந்த இரண்டாவதாக

உள்ளAdd to Selection Tool உதவுகிறது.

இப் போது இந்த படத்தைபாருங்கள்.


இந்த படத்தில் நமக்கு கோபுரமும் பிரகாரம்

மட்டும் வேண்டும்.ஆனால் New Selection Tool-ல்

தேர்வு செய்யும் போது மொத்தமாக தேர்வாகும்.

ஆனால் Add Selection Tool-ல் பயன்படுத்துவது பார்ப்போம்.

முதலில் New Selection மூலம் கோபுரம் மட்டும்

தேர்வு செய்யுங்கள்.



அடுத்து Add Selection Tool மூலம்

பிரகாரம் மட்டும் தேர்வு செய்யுங்கள். படத்தை பாருங்கள்.





இப்போது சென்ற பாடத்தில் சொன்னவாறு காப்பி -பேஸ்ட்

செய்யுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி படம் வரும்.




இப்போது இந்த படத்தில் பார்த்தீர்களே யானல் இதில்

ஒரு பெண்மணி கோயிலுக்கு செல்கின்றார்.அவர்

நமக்கு வேண்டாம். எப்படி அவரை நீக்குவது?

அதற்கு இந்த Subtract Selection Tool உதவும்.

முன்பு சொன்னவாறு படம் தேர்வு செய்து இந்த

டூல் மூலம் அந்த பெண்மணியை மட்டும்

தேர்வு செய்யவும். இப்போது இந்த பெண்மணி

மட்டும் தேர்வாகும். படத்தை பாருங்கள்.


முன்பு கூறியபடி தேர்வுசெய்து கட்-காப்பி-பேஸ்ட்

செய்யுங்கள். இப்போது உங்களுக்கு அந்த பெண்மணி

நீங்கலாக படம் தேர்வாகும். படத்தை பாருங்கள்.



வரும் பாடங்களில் வெண்மைநிறத்தை பேட்ச் ஓர்க் மூலம்

நிரப்புவதை பின்னர் பார்க்கலாம். கடைசியாக உள்ளது

Intersect with Selection. படத்தில் உள்ள கிணறை மட்டும்

தேர்வு செய்ய இந்த டூலால் முடியும். படத்தை பாருங்கள்.



இப்போது கிணறை தேர்வு செய்து கட்- காப்பி-பேஸ்ட்

செய்தால் உங்களுக்கு இவ்வாறு படம் கிடைக்கும்.



இதுவரை நாம் Rectangle Marquee Tool பார்த்தோம். அதுபோல்

Eliptical Marquee Tool லும் நாம் படங்களை தேர்வு செய்யலாம்.


இதிலும் மேற்படி நாம் Selection Tool ஆல் தேர்வு செய்ததை

பாருங்கள்.



இதுபோல் புகைப்படங்களை நீங்கள் தேர்வு செய்து

விதம்விதமாக கட் செய்து பார்க்கலாம். ஆனால்

நீங்கள் புகைப்படங்களை மாறுதல் செய்யும் முன்

மறக்காமல் டூப்ளிகேட் எடுத்துவைதது செய்யவும்.

பதிவின் நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

மீண்டும் போட்டோஷாப் பாடம் அடுத்தவாரம் பார்க்கலாம்.

புகைப்பட மாதிரிக்காக நான் எடுத்த

கங்கைகொண்ட சோழபுரம்

கோயிலின் புகைப்படம் பயன்படுத்தியுள்ளேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
ஒரு படத்தில் ஒரு இன்ச்சில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையே DPI ஆகும். 200 DPI என்றால் 1 இன்ச்சில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையை குறிக்கும். புள்ளிகள் அதிகமாக அதிகமாக படம் அழகாக இருக்கும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

சுரேகா.. said...

அட...

வித்யாசமான முயற்சி..
தொடருங்கள்
வாழ்த்துக்கள்!

வான்முகிலன் said...

திரு. வேலன் அவர்களுக்கு வணக்கம்.

தாம் கற்றறிந்தததை மற்றவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உங்களது பரந்த மனதை மனதாரப் பாராட்டுகிறேன். இந்த கணிணி யுகத்தில் பெருமளவில் இந்த எண்ணம் யாருக்கும் வராது. உண்மையிலேயே மிகச் சிறந்த பணி. அதுவும் தமிழில் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
வான்முகிலன்
22.03.2009

வேலன். said...

சுரேகா.. கூறியது...
அட...

வித்யாசமான முயற்சி..
தொடருங்கள்
வாழ்த்துக்கள்!//

நன்றி சுரேகா அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வான்முகிலன் கூறியது...
திரு. வேலன் அவர்களுக்கு வணக்கம்.

தாம் கற்றறிந்தததை மற்றவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உங்களது பரந்த மனதை மனதாரப் பாராட்டுகிறேன். இந்த கணிணி யுகத்தில் பெருமளவில் இந்த எண்ணம் யாருக்கும் வராது. உண்மையிலேயே மிகச் சிறந்த பணி. அதுவும் தமிழில் இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.

தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நன்றி
வான்முகிலன்//

தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி திரு்.வான்முகிலன் அவர்களே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வடுவூர் குமார் said...

படங்கள் திறக்க கால தாமதமாகிறது,பிறகு வருகிறேன்.

ஆ! இதழ்கள் said...

தொடருங்கள்,, நாங்களும் தொடருகிறோம்.

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
படங்கள் திறக்க கால தாமதமாகிறது,பிறகு வருகிறேன்.//

நன்றி வடுவூர் குமார் அவர்களே...
தாங்கள் வசம் உள்ள ரேம் அளவை அதிகரித்துப்பாருங்கள்.படங்கள் விரைவாக திறக்கும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ! இதழ்கள் கூறியது...
தொடருங்கள்,, நாங்களும் தொடருகிறோம்.//

தங்கள அனைவரது தொடர்தலையும் ஆவலுடன் எதிர்பார்த்து

வாழ்க வளமுடன்,
வேலன்.

வடுவூர் குமார் said...

அதே அளவு ரேமுடன் இன்று படம் திறந்தது.இணைய இணைப்பில் பிரச்சனை என்று நினைகிறேன்.
GIMP யில் இப்படி செய்யமுடியுமா? என்று தெரியவில்லை.பார்க்கவேண்டும்.

வேலன். said...

வடுவூர் குமார் கூறியது...
அதே அளவு ரேமுடன் இன்று படம் திறந்தது.இணைய இணைப்பில் பிரச்சனை என்று நினைகிறேன்.
GIMP யில் இப்படி செய்யமுடியுமா? என்று தெரியவில்லை.பார்க்கவேண்டும்.//

கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Tech Shankar said...

Thanks sir

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
Thanks sir//

நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

நிஜமா நல்லவன் said...

மிக்க நன்றி!

வேலன். said...

நிஜமா நல்லவன் கூறியது...
மிக்க நன்றி!//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

SPECTRUM VIDEOS said...

Wonderful lessons. keep it up.
Muralidharan

வேலன். said...

murali கூறியது...
Wonderful lessons. keep it up.
Muralidharan//

நன்றி முரளிதரன் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Unknown said...

vanakkam .nan velan's kku puthiavan . photoshop cs 9 versin ennidam ulladu/ lesson 3 enakku puriavellai please deatail anuppurvigala

Thiagarajan.S PMP said...

Hi
is there any compile on your photo shop lessons.

I am not able to find all your photoshop lessons.

Can you post a links to all your photoshop lessons.

Thanks.

Thiagarajan.S PMP said...

is there any compile on your photo shop lessons.

I am not able to find all your photoshop lessons.

Can you post a links to all your photoshop lessons.

Thanks.

sjay jkm said...

தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா

Related Posts Plugin for WordPress, Blogger...