ஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க

ஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க

நாம் MS OFFICE-ல் நாம் MS WORD,MS EXCEL,MS ACCESS,

MS POWER POINT உபயோகித்து வருகின்றோம்.

முக்கிய விவரங்களை - நமது தனிப்பட்ட

கணக்கு விவரங்களை - பதிவிட்டு இருப்போம்.

நாம் இல்லாத சமயத்தில் யாராவது நமது

கடிதத்தையோ - கணக்கு விவரங்களையோ

பார்த்தால் நமக்கு சங்கடம் வரலாம். அவர்கள்

அவ்வாறு பார்க்காமல் இருக்க நாம் நமது

கணக்கு விவரங்கள் மற்றும் கடிதங்களை

பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க முடியும்.

அதை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

முதலில் நாம் பாதுகாக்க வேண்டிய

கடிதத்தை திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து அதை Save us கொடுங்கள்.



உங்களுக்கு இந்த சரளம் ஓப்பன் ஆகும்.

அதில் பார்த்தீர்களே யானால் கீழே

Tools என்கிற காலம் இருக்கும். அதை

தேர்வு செய்தால் உங்களுக்கு இந்த

சாரளம் ஓப்பன் ஆகும்.



இப்போது இதில் உள்ள

General Options கிளிக் செய்யவும்.

உங்களுக்கு General Options சாரளம்

ஓப்பன் ஆகும். அதில் உள்ள

File encryption options for this document

கீழ் உள்ள

Password to Open என்கிற பெட்டியின்

உள்ளே நீங்கள் சேமிக்க விரும்பும்

பாஸ்வேர்டை டைப் செய்யவும்.



ஓகே கொடுக்கவும். மீண்டும் உங்களுக்கு

Confirm Password வரும் . அதிலும்



உங்களுடைய முந்தைய பாஸ்வேர்டையே

டைப்செய்யவும். ஓகே கொடுத்து

வெளியேறவும். அடுத்து Save செய்யவும்.

இப்போது அனைத்தையும் மூடி வெளியேறவும்.

இப்போது மீண்டும் அந்த ஆபிஸ் வேர்டையோ -

எக்ஸெல்லையோ திறக்கவும்.



உங்களுக்குஓப்பன் ஆகும் முன் உங்களிடம் பாஸ்வேர்ட்

கேட்கும்.நீங்கள் முன்பு கொடுத்த பாஸ்வேர்ட் கொடுத்தால்

தான் உங்களுடைய டாக்குமெண்ட்-கணக்குகள் ஓப்பன்

ஆகும். இதன்படி உங்கள் டாக்குமென்ட்களை

கணக்கு விவரங்களை பாதுகாக்கலாம்.

இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில்உதிரிப் பூ
உங்களிடம்உள்ளஇணையதளமுகவரிகளைதனியே
டைரியில்குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.
சமயத்தில் கணிணிபழுதடைந்து ஓஎஸ் மாற்றும்
போது மீண்டும் அவைகள் தேவைப்படலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Muthu Kumar N said...

வேலன், அருமையான உதவி செய்து கொண்டு வருகிறீர்கள் புதிதாய் கணிணி பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் உங்கள் பதிவுகள் மிக உதவியானது.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பேவரைட்ஸ் பேக்கப் செய்து எப்படி மறுபடியும் ரீஸ்டோர் செய்வது என்று பதிவிட்டால் எல்லோருக்கும் பயனளிக்குமே...


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

வேலன். said...

Muthu Kumar_Singapore கூறியது...
வேலன், அருமையான உதவி செய்து கொண்டு வருகிறீர்கள் புதிதாய் கணிணி பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் உங்கள் பதிவுகள் மிக உதவியானது.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பேவரைட்ஸ் பேக்கப் செய்து எப்படி மறுபடியும் ரீஸ்டோர் செய்வது என்று பதிவிட்டால் எல்லோருக்கும் பயனளிக்குமே...


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//

விரைவில் பதிவிடுகின்றேன் நண்பரே.

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

Jaleela Kamal said...

மிக்க நன்றி வேலன் சார், ரொம்ப நாளா இது புரியாமா இருந்தது, பளிச்சின்னு விளக்கிட்டிங்க, எனக்கு ரொம்ப பயன் படும் இந்த// பாஸ்வேர்ட் கொடுத்து ஃபயிலை பாதுகாப்பது.//

வேலன். said...

Jaleela கூறியது...
மிக்க நன்றி வேலன் சார், ரொம்ப நாளா இது புரியாமா இருந்தது, பளிச்சின்னு விளக்கிட்டிங்க, எனக்கு ரொம்ப பயன் படும் இந்த// பாஸ்வேர்ட் கொடுத்து ஃபயிலை பாதுகாப்பது.//

நன்றி ஜலிலா அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...