DVD கட்டர் உபயோகிப்பது எப்படி?

DVD கட்டர் உபயோகிப்பது எப்படி?




DVD கட்டர் உபயோகிப்பது எப்படி?

நம்மிடம் இப்போது சாதாரணமாக DVD க்கள்

உள்ளது. அதில் நாம் விரும்பிய பாடல்கள்,

சண்டைகாட்சிகள், நகைச்சுவைகள் என

அந்த படத்தில் விரும்பியதை கட் செய்து

தனியே பார்க்க விரும்புவோம். ஆனால்

DVD யிலிருந்து நாம் விரும்பியதை

எப்படி கட் செய்து தனியே சேமிப்பது என

இப்போது பார்ப்போம்.

முதலில் இந்த தளம் சென்று இந்த இலவச

சாப்ட் வேரை டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.

முகவரி தளம்:-http://www.aivsoft.com/downloads/dvdcutter/download.html

இப்போது இந்த சாப்ட்வேரை நிறுவிவிட்டோம்.

இதை கிளிக் செய் து ஓப்பன் செய்யவும்.


மேற்கண்ட தளம் உங்களுக்கு ஓப்பன் ஆகும்.

அடுத்து நீங்கள் இதில் உள்ள ஓப்பன் செலக்ட் செய்யவும்.


நீங்கள் ஓப்பன் செலக்ட் செய்ததும் கீழ்கண்ட

தளம் ஓப்பன்ஆகும்.





நீங்கள் கட் செய்ய விரும்பும் படம் கம்யூட்டரில் சேமித்து

இருந்தால் படம் உள்ள டிரைவையும் டிவிடியிலேயே

இருந்தால் நேரடியாக டிவிடி டிரைவ் உள்ள டிரைவையோ

தேர்ந்தெடுக்கவும்.

தேவையான டிவிடி பட போல்டரை தேர்ந்தேடுத்ததும்

உங்களுக்கு நீங்கள் தேர்ந்தேடுத்த டிவிடி படம்

ஓட ஆரம்பிக்கும்.

படம் ஓடட்டும். நீங்கள் விரும்பும் பாடலோ

காமெடிகாட்சியோ அல்லது சண்டைகாட்சியையோ

வரும் சமயம் நீங்கள் இதில் உள்ள Set Start

கிளிக் செய்யவும்.



உங்களுக்கு இதில் உள்ள Slider Position நகர ஆரம்பிக்கும்.

நீங்கள் தேர்வுசெய்த பாடலோ - பட காட்சிகளோ முடிவடை

யும் சமயம் அதில் உள்ள Set End கிளிக் செய்யவும்.


உங்களது Slider Position ஆனது மேற்கண்ட வாறு

நீல நிறத்துடன் காட்சியளிக்கும்.


அதுபோல் உங்களுக்கு இந்த Track Time மும் கிடைக்கும்.

அடுத்து நீங்கள் தேர்வு செய்ததை Save Selection

செய்யவும்.


நீங்கள் தேர்வு செய்தது கணிணியின் டிரைவாக இருந்தால்

தனியே போல்டர் போட்டு சேமித்து வைக்கவும். அதுபோல்

டிவிடி டிரைவாக இருந்தால் கணிணியின் டிரைவில்

சேமிக்கவும். டிவிடி டிரைவில் சேமிக்க முடியாது.



இப்போது உங்களுக்கு மேற்கண்ட வாறு தளம்

தேர்வாகும். இதில் இந்த சிலைடிங் முடிந்ததும்

உங்களுக்கு இந்த வாறு தோன்றும்.



அடுத்து நீங்கள் சேமித்து வைத்ததை மீண்டும்

ஒரு முறை சோதித்து பார்க்கலாம்.

இந்த சாப்ட்வேரை உபயோகித்து பாருங்கள்.

கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் கம் யூட்டரில் C-Drive ல் அதிக படியான சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்யாதீர்கள். C-Drive –ல் அளவின் பாதிக்கு மேல் காலியாக வைத்திருங்கள். இதனால்கணிணியின் வேகம் கூடக்கூடும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

ஆனந்த். said...

மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் 100 பதிவை எதிர் பார்க்கிறோம்.

RAMYA said...

பயனுள்ள பதிவை கொடுத்து இருக்கின்றீர்கள் இன்னும் பல நல்ல பயனுள்ள பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்!!

வேலன். said...

ஆனந்த். கூறியது...
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் 100 பதிவை எதிர் பார்க்கிறோம்.//

தங்கள் போன்ற வாசகர்களின் அன்பும் ஆதரவும் இருந்தால் 100 அல்ல 1000 பதிவுகளும் சாத்தியமே...

கருத்துக்கும் ஆசிகளுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

RAMYA கூறியது...
பயனுள்ள பதிவை கொடுத்து இருக்கின்றீர்கள் இன்னும் பல நல்ல பயனுள்ள பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்!!//

தங்கள் கருத்துக்கு நன்றி ரம்யா அவர்களே..நான் சிறந்தது என கருதும் பதிப்புக்கள் ஒட்டுக்கள் பெறாமல் பின்தங்கி விடுகின்றது. அதை நினைத்தால்தான் மனது கஷ்டப்படுகிறது.
இருப்பினும் தங்கள் போல் வரும் வாசகர்கள் தரும் கருத்துக்களே எழுத
எனக்கு உற்சாகம் தருகிறது.

கருத்துக்கு நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

மாலி நடராஜன் said...

Velan, Nice to see ur blog. Very useful for learners like me. Can u tell me how to convert .vop and other media files to mp4/mp3 to upload into youtube/google videos.
Natrajan

வேலன். said...

nTamil கூறியது...
Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்//

தங்கள் உதவிக்கு நன்றி ntamil குழுவினரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

M கூறியது...
Velan, Nice to see ur blog. Very useful for learners like me. Can u tell me how to convert .vop and other media files to mp4/mp3 to upload into youtube/google videos.
Natrajan//

விரைவில் பைல் மாற்றுவது பற்றி
பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Tech Shankar said...

Thanks to : வேலன்

வேலன். said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
Thanks to : வேலன்//

நன்றி நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களே....

வாழ்க வளமுடன்,
வேலன்.

KASI,PANAIKULAM said...

velan! remba arumayana No1 ENAYAthalam. VANAKKAM.. VAALTHUKKAL..

KASI,PANAIKULAM said...
This comment has been removed by the author.
வீரசிங்கம் said...

மிக்க நன்றி எப்படி அதை பயன்படுத்துவது என்று புரியாமல் இருந்தேன் மிக்க நன்றி மேலும் தாங்கள் நிறைய எழுதவேண்டும்

யாத்ரீகன் said...

டிவிடி ரிப்பர் என்றவகையிலான மென்பொருட்கள் பற்றிய தகவல் தந்தால் பயனுள்ளதாய் இருக்கும்.. நன்றி..

Unknown said...

Thanks Sir

Premanandhan said...

Thanks a lot Velan

Related Posts Plugin for WordPress, Blogger...