ULTRA MOBILE 3 GP VIDEO CONVERTER
இப்போது செல்போன் இல்லாத மனிதர்களே
இல்லை என்று சொல்லலாம். ஆயிரம் ரூபாய் முதல்
முப்பதாயிரம் வரை அவரவர் வசதிக்கு செல்போன்
வைத்துள்ளார்கள். ஆனால் அதில் அவர்களுக்கு
பிடித்த பாடல்களை பதிவிறக்கம் செய்ய அவதிப்
படுவார்கள். அவர்களுக்காகவே இந்த இலவச
சாப்ட்வேர் உள்ளது. இதில் உங்களிடம் உள்ள
AVI,MPEG,WMV,MOV,RM ஆகிய பைல்களை 3GP
பைல்களாக சுலபமாக மாற்றிவிடலாம். 3 GP
பைல்களை உங்கள் செல்போனில் சுலபமாக
பதிவேற்றி படங்களை பார்த்து மகிழலாம்.

முதலில் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து
கணிணியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த சாப்ட்வேரை திறந்தவுடன் அதில்
உள்ள Try கிளிக் செய்து உள் நுழையுங்கள்.
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மேல்புறம் பார்த்தீரகளேயானல் இந்த மாதிரி தோன்றும்.

இதில் முதலில் உள்ள் Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.
உங்கள் வீடியோ பைல் உள்ள டிரைவை தேர்ந்தேடுங்கள்.

வீடியோ பைல்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்ய அதில்
உள்ள கட்டங்களில் பைல்கள் வந்து அமர்ந்துகொள்ளும்.

நீங்கள் தேர்வு செய்த வீடியோவை Preview பார்க்க வேண்டுமா?
நீங்கள் வீடியோவை டபுள் கிளிக் செய்யுங்கள்.பின் இடது
மூலையில் உள்ள Play பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு
படம் ஓட ஆரம்பிக்கும்.

அடுத்து நீங்கள் 3 GP யாக மாற்றம் செய்த பைல்களை சேமித்து
வைக்க ஏதாவது ஒரு டிரைவை தேர்ந்தேடுங்கள் .( டிரைவ்
நீங்கள் தேர்ந்தேடுக்கவில்லையென்றால் அந்த படம் ஆனது
சி-டிரைவில் அமர்ந்துகொள்ளும். சி-டிரைவில் அதிகபடியான
பைல்கள் சேமிப்பது கணிணியின் வேகத்தை மட்டுப்படுத்தும்)

உங்களுக்கு தேவையான டிரைவ் தேர்ந்தேடுத்து ஓகே
கொடுங்கள். அடுத்து உள்ளது Profile. இதில் உங்களிடம்
உள்ள பைல் எது - நீங்கள் மாற்ற விரும்பும் பைல்வகை
களை இங்கு தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து உள்ள Settings. இதில் உள்ள Video Quality யில்

உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.
அடுத்தது Resulation. இதில் உங்களுக்கு வேண்டிய
பிரேம் அளவை தேர்ந்தேடுக்கலாம்.

அடுத்து Audio Settings. இதிலும் உங்களுக்கு விருப்பமானதை
தேர்வுசெய்து கொள்ளுங்கள்.

ஆடியோ செட்டிங்ஸ் கீழ் உள்ளது Volume கன்ட்ரோல்.
இதன் மூலம் நீங்கள் விரும்பிய ஒலியை அதிக
படுத்திக்கொள்ளலாம்.

இவை அனைத்தும் முடிந்ததும் நீங்கள் மேலே உள்ள
Convert கிளிக் செய்யுங்கள். உங்கள் வீடியோவானது
Convert ஆக ஆரம்பிக்கும். இப்போது கீழே உள்ளவாறு

உங்கள் வீடியோ கன்வர்ட் ஆக ஆரம்பிக்கும்.
வீடியோ கன்வர்ட் ஆகும் பணிணை அது முடிந்ததும்
நீங்கள் விருப்பப்பட்டால் கணிணியை ஆப் செய்யும்
வசதியும் இதில் உள்ளது. உங்கள் விருப்பமான
வீடியோ பதிவு செய்து முடிந்ததும் உங்களுக்கு இந்த
மாதிரி விண்டோதோன்றும்.

அதன் பின் நீங்கள் Output Folder சென்று அங்குள்ள
வீடியோ பதிவை உங்கள் செல்போனுக்கு மாற்றிக்
கொள்ளுங்கள். இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய
பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்கமால்
ஓட்டுப்போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
வலைப்பூவில் உதிரிப்பூக்கள்
Ctrl+U கொடுத்தால் வேர்டின் டெக்ஸ்ட் டாக்கு
மெண்ட்களில் அடியில் கோடுடன் வருவதை
காணலாம். ஆனால் அவ்வாறு அழுத்துகையில்
சொற்கள் மட்டும் இன்றி இடையில் உள்ள
இடைவெளிகளிலும் அடிக்கோடு வருவதை காணலாம்.
(வாழ்க வளமுடன் அவ்வாறு இடைவெளியில்லாமல்
அடிக்கோடு போட்டுள்ளதை பாருங்கள்). ஆனால்
நமக்கு இடைவெளி வர Ctrl+Shift+W அழுத்தினால்
சொற்களுக்கு இடையே கோடு வராது.
14 comments:
வேலன்,
அசத்திட்டீங்க போங்க இந்த பதிவு நிச்சயம் கைத்தொலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் நிச்சயம் பயன்படும்.
அதுவும் மிகவும் சுலபமாக புரியும் வண்ணம் தெளிவாக விளக்கப் படங்களுடன்.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுட்டோம்.
நன்றி
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,
அசத்திட்டீங்க போங்க இந்த பதிவு நிச்சயம் கைத்தொலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் நிச்சயம் பயன்படும்.
அதுவும் மிகவும் சுலபமாக புரியும் வண்ணம் தெளிவாக விளக்கப் படங்களுடன்.
வளர்க உங்கள் பணி.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
உங்களுக்கு ஆபிஸ் லீவு.நாளை தான் தங்கள் கருத்துபோடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
தமிழ்நெஞ்சம் கூறியது...
இந்தப் பதிவுக்கு ஓட்டுப் போட்டுட்டோம்.
நன்றி//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
Mobile 3GP Video Converter இன் potable version னை [Register பண்ணப்பட்டது] download பண்ண:
http://www.box.net/shared/d4soxxt6v6
நல்லாத்தான் கீது, எது எதுக்கோ , இந்த செல்லு போனு யுசு ஆவுதே ? இனி மேட்டு ஐயா, போனுல சினிமா படமே ஓடும் , ரொம்ப டான்க்குசுபா ,
TamilhackX கூறியது...
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.
Mobile 3GP Video Converter இன் potable version னை [Register பண்ணப்பட்டது] download பண்ண:
http://www.box.net/shared/d4soxxt6v6//
தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
டவுசர் பாண்டி. கூறியது...
நல்லாத்தான் கீது, எது எதுக்கோ , இந்த செல்லு போனு யுசு ஆவுதே ? இனி மேட்டு ஐயா, போனுல சினிமா படமே ஓடும் , ரொம்ப டான்க்குசுபா ,//
நன்றி டவுசர் பாண்டி...நல்ல படம் மட்டும் பாருங்கள். அப்புறம் செல்லுக்கும் வைரஸ் வந்துவிடும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நன்றி வேலன் சார்!
ரொம்ப நல்ல மென்பொருள்,போட்டோஷாப் அடுத்த வகுப்பு எப்போ?
ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
நன்றி வேலன் சார்!//
நன்றி நண்பர் ஜுர்கேன் க்ருகேர் அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.
முருகன் ஜெயராமன் கூறியது...
ரொம்ப நல்ல மென்பொருள்,போட்டோஷாப் அடுத்த வகுப்பு எப்போ?//
அடுத்த போட் டோஷாப் பதிவு 11.04.09 அன்றோ அல்லது அதற்குமுன்போ பதிவிடுவேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஐயா,
யானை இருக்கும் படம் கும்பகோணம் ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் எடுக்கப்பட்டதென நினைக்கிறேன்.
சரியா?
தியாகராஜன் கூறியது...
ஐயா,
யானை இருக்கும் படம் கும்பகோணம் ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் எடுக்கப்பட்டதென நினைக்கிறேன்.
சரியா?//
சரியாக சொன்னீர் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்
Post a Comment