Wednesday, June 3, 2009

வேலன்:-கையடக்க மவுஸ் காலை வாரும்போது



கையடக்கமான மவுஸ் சமயத்தில் வேலை

செய்யாமல் காலை வாரும் சமயம்

நமக்கு டென்ஸன் கூடிவிடும். ஒரு

முக்கியமான கடிதத்திற்காக கணிணியில்

நாம் வேலை செய்யும் சமயம் மவுஸ்

வேலை செய்யவில்லையென்றால் நாம்

கடுப்பாகிவிடுவோம். அந்த மாதிரியான

நேரத்தில் முதலில் நாம் ரிலாக்ஸ்

செய்துகொள்ளவேண்டும். அடுத்து

மவுஸின் (பழைய மவுஸாக இருந்தால்)

உள்ளே உள்ள பால் சரியாக உருள்கின்றதா

-தூசி ஏதும் படிந்துள்ளதா என பார்க்கவும்.

புதிய மவுஸாக இருந்தால் மவுஸின் அடியில்

-மவுஸ் பேட்டில் தூசி படிந்துள்ளதா என

பார்க்கவும். இருந்தால் அதை சுத்தமாக

துடைத்துவிடவும். அடுத்து மவுஸின் கேபிள்

நன்றாக உள்ளதா என பார்க்கவும். எதற்கும்

ஒரு முறை கேபிள் பின்னை வெளியில்

எடுத்து மறுமுறை சொருகிபார்ககவும்.

வேறுஒரு புதிய யு,எஸ.பி.போர்டில் சோதனை

செய்து பார்க்கவும். அப்படியும் சரியாக

வில்லையா கணிணியை ஒரு முறை ரீ-ஸ்டார்ட்

செய்யவும். அப்படியும் சரியாகவில்லையா...

பதற்றம் வேண்டாம். நமது கீ-போர்டையே

மவுஸாக உபயோகிக்கலாம். அதை எவ்வாறு

உபயோகிப்பது என இப்போது பார்க்கலாம்.

இப்போது கீ-போர்டில் நீங்கள் Alt+Shift+Num Lock

(இந்த கீ எங்கே இருக்கு என தேட வேண்டாம்.

இது நம்பர் கீ களின் மேல் முதலாவதாக

இருக்கும்) ஆகிய கீ -களை அழுத்துங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒன்று

ஓப்பன் ஆகும்.

இப்போது உள்ளபடியே உங்களுக்கு

மவுஸின் செயல்பாடு வேண்டும்எனில்

ஓகே கொடுங்கள். நீங்கள் மாற்றங்களை

விரும்பினால் அதில் உள்ள செட்டிங்ஸ

கிளிக் செயயுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட

விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் கீ-போரட்,சவுண்ட்,டிஸ்பிளே, மவுஸ் மற்றும்

ஜெனரல் என ஐந்து டிவிஷன்கள் உள்ளது. ஒவ்வோன்றும்

ஒவ்வோறு செட்டிங் படி செயல்படும். ஒய்வில்

இருக்கும் சமயம் ஒவ்வொன்றாக முயற்சிசெய்து

பாருங்கள்.இனி ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.

இப்போது உங்களுக்கு மவுஸ்ஸானது கீ-போரட்

வழி செயல்படும். அதற்கு அடையாளமாக மவுஸ்

படமானது உங்கள் கணிணியின் கெடிகாரத்திற்கு

பக்கத்தில் தெரியும். இதில் நீங்கள் நம்பர் உள்ள

கீ களில் பார்த்தால் உங்களுக்கு அம்புகுறிகள்

போட்டிருப்பார்கள். அந்த திசைகளில் உங்களுக்கு

மவுஸின் கர்சரானது நகர ஆரம்பிக்கும்.

இதில் நடுவில் உள்ள 5 ஆம் எண் கீ ஆனது

மவுஸ் கிளிக் பட்டனாக செயல்படும்.

+ கீ எதேனும் ஆப்ஜேட் மீது கர்சரை வைத்து

டபுள் கிளிக் செய்திட அது செயல்படும்.

Insert கீ Mouse கிளிக் பட்டனாக செயல்படும்.

Delete கீ மவுஸ் பட்டனை ரீலிஸ் செய்ய

பயன்படும். நீங்கள் பழையபடி திரும்ப

விரும்பினால் நம்பர்லாக் கீயை தட்டவும்.

இது தற்காலிக முறைதான். மவுஸ் சரி

செய்யும்வரை அவசரத்திற்கு உபயோகித்து

கொள்ளுங்கள். என்னதான் இருந்தாலும்

நமக்கு மவுஸ் வழி வராது....என்ன நான்

சொல்வது சரிதானே?

பதிவை படித்துப்பாருங்கள்...

பிடி்த்திருந்தால் மறக்காமல் ஒட்டு

போடுங்க்ள.

வாழ்க வளமுடன்,

வேலன்.


பின்குறிப்பு:-

கடந்த மே மாதம் 5 வெள்ளிக்கிழமை,

5 சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக்கிழமை

வந்தது. இதுபோல் மீண்டும் வர

780 வருடங்கள் ஆகலாமாம். இந்த

ஜெனராஷன் மக்களுக்கு கிடைத்த

அரிய வாய்ப்பாம் இது...

இதுவரை கீ-போர்டை மவுஸாக உபயோகித்தவர்கள்:-
web counter

13 comments:

  1. Dear Velan,

    Good Job, keep it up. Very useful for beginners.

    Best Wishes
    Muthu Kumar.N

    ReplyDelete
  2. உங்கள் பின் குறிப்பு நல்ல தகவல் . இது போன்று பழைய செய்திகளாக இருந்தாலும் புதிய செய்திகளாக இருதாலும் போடுங்கள் .புதிய கண்டுபிடிப்புகள் யார் யார் எதை எல்லாம் கண்டுபிடித்தார்கள் போன்ற தகவல் களை பின்குறிப்பாக போடுங்கள்

    ReplyDelete
  3. 2015 மேயிலும் 5 வெள்ளிக்கிழமை,

    5 சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக்கிழமை
    வருது .

    ReplyDelete
  4. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    Dear Velan,

    Good Job, keep it up. Very useful for beginners.

    Best Wishes
    Muthu Kumar.N//

    நன்றி சார்...

    என்றும் அன்புடன்,
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
    Thanks Sir..//

    நண்பரே...இரண்டு பதிவுகளாக உங்கள் கருத்துரைக்கு முதலில் பதில் போட முயல்கின்றேன். முடியவில்லை...
    கருத்துக்கு நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. malar கூறியது...
    உங்கள் பின் குறிப்பு நல்ல தகவல் . இது போன்று பழைய செய்திகளாக இருந்தாலும் புதிய செய்திகளாக இருதாலும் போடுங்கள் .புதிய கண்டுபிடிப்புகள் யார் யார் எதை எல்லாம் கண்டுபிடித்தார்கள் போன்ற தகவல் களை பின்குறிப்பாக போடுங்கள்//

    நன்றி சகோதரி...தாங்கள் சில பதிவுகளில் கருத்துரை சொல்ல வரவில்லை...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. 2015 மேயிலும் 5 வெள்ளிக்கிழமை,

    5 சனிக்கிழமை, 5 ஞாயிற்றுக்கிழமை
    வருது //

    நன்றி சகோதரி...நானும் தாங்கள் சொன்ன தேதியை சரிபார்க்கின்றேன்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. பாலபாடம்தான்.இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் அவசரத்துக்கு உதவும் என்பது அனுபவ பூர்வமா தெரிந்தது.நன்றி.

    ReplyDelete
  9. ராஜ நடராஜன் கூறியது...
    பாலபாடம்தான்.இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் அவசரத்துக்கு உதவும் என்பது அனுபவ பூர்வமா தெரிந்தது.நன்றி//

    உண்மைதான் நண்பரே.்..

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள தகவல்....
    நண்பி மலர் கூறியது போல் பழைய செய்திகளாக இருந்தாலும் புதிய செய்திகளாக இருதாலும் போடுங்கள் . இது போல பல பதிவுகள் எதிர்பார்க்கிறேன்....

    ReplyDelete
  11. கிராமத்து பயல் கூறியது...
    மிகவும் பயனுள்ள தகவல்....
    நண்பி மலர் கூறியது போல் பழைய செய்திகளாக இருந்தாலும் புதிய செய்திகளாக இருதாலும் போடுங்கள் . இது போல பல பதிவுகள் எதிர்பார்க்கிறேன்..//

    நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. thanks for once again.. your posting all comments its very very useful for us.. i want photoshop software can i have it that or give me a link..

    thank u very much
    Mr. VelanG

    ReplyDelete