வேலன்:-பிடித்த MP-3 பாடல் வரிகளை ஒரே பாடலாகசேர்க்க



நான் நேற்று MP-3 கட்டர் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்கு

நண்பர் கீழ்கண்டவாறு கருத்துரை கூறியிருந்தார்.
கருத்துரை கீழே:-

யூர்கன் க்ருகியர் கூறியது...

நல்ல விடயம் சார். பகிர்வுக்கு நன்றி!

சார் .. வெவ்வேறு பாடல்கள்களின் கிளிப்களை வேண்டிய
இடத்தில ஒன்று சேர்த்து நாமாகவே ஒரு ரி-மிக்ஸ் தயார்
பண்ற மாதிரி ஒரு சாப்ட்வேர் ஐ தேடி கொண்டிருக்கிறேன்.
August 25, 2009 10:42 AM
நண்பர் ஆசைபட்டுவிட்டார்...ஆசையை நிறைவேற்ற
இன்று MP-3 Joiner பற்றி பதிவிடுகின்றேன்.

நம்மிடம் பல எம்.பி.3 பாடல்கள் இருக்கலாம். அதில்
விருப்பமான இசை,பாடல் வரிகள் இருக்கலாம்.
சில பாடல்களில் பாடல் வரிகள் நன்றாக இருக்கும்.
சில பாடல்களில் இசை நன்றாக இருக்கும். நாம்
நமக்கு பிடித்த பாடலில் இருந்து பாடலையும்
பிடித்த இசையையும் ஒன்றாக சேர்த்து நமக்கு
விருப்பமான பாடலை உருவாக்கலாம்.அதற்கு
இந்த எம்.பி.3 ஜாயினர் உதவுகின்றது.

3 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு
கிளிக் செய்யுங்கள். உங்கள் கணிணியில் நிறுவிக்
கொள்ளுங்கள்.உங்களுக்கு இந்த சாப்ட்வேரை ஓப்பன்
செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோஇருக்கும்.

இதில் உள்ள Add Files -ல் உங்கள் கணிணியில் உள்ள பாடலை
தேர்வு செய்துகொள்ளலாம். இல்லை மொத்த போல்டரில் உள்ள
பாடல் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள்
Add file கிளிக் செய்து உங்கள் விருப்பமான பாடலை தேர்வு
செய்யுங்கள்.

இதைப்போல் நீங்கள் எத்தனை பாடல்களை தேர்வு செய்கின்
றீர்களோ அந்த பாடல்கள் மொத்தத்தையும் தேர்வு செய்து
கொள்ளுங்கள். இப்போது கீழ் வரிசையில் பார்த்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ இருக்கும்.


முதல் பாடலை தேர்வு செய்து பாடலை ஓட விடுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பாடல் வரிகளோ அல்லது இசையோ
வரும் சமயம் இதில் உள்ள Begin கிளிக் செய்யுங்கள். பாடல்
ஓடிக்கொண்டிருக்கும். நீங்கள் விரும்பிய பாடல்வரியோ -
இசையோ முடிந்ததும் இதில் உள்ள End கிளிக் செய்யுங்கள்.
இதைப்போல் இதில் உள்ள மொத்தப்பாடல் வரிகளையும்
தேர்வு செய்து முடித்ததும் இதில் உள்ள Join கிளிக் செய்யுங்கள்.

இதில் நாம் பாடலின் Format மாற்றிக்கொள்ளலாம். அதைப்
பேர்ல மேல்புறம் உள்ள UP Arrow -Down Arrow கிளிக் செய்வது
மூலம் பாடலை இடம்மாற்றம் செய்யலாம். அதைப்போல்
பாடலில் உள்ள Remove கிளிக் செய்வது மூலம் பாடலை நீக்கி
விடலாம். இதில் Skin கலர் மாற்றும் வசதி உள்ளது. கீழே
உள்ள படத்தை பாருங்கள்.



நீங்கள் விருப்பிய வாறு செய்து முடித்ததும் உங்கள் பாடலை
நீங்கள் விரும்பிய இடத்தில் விரும்பிய பெயர் கொடுத்து சேமித்து
வைத்து வேண்டிய சமயம் கேட்டு மகிழவும்.

முக்கிய விஷயம் இது டிரையல் விஷன் தான்.
பிடித்திருந்தால் வாங்கி உபயோகியுங்கள். பிடிக்காவிட்டால்
மறக்காமல் ஒட்டுப்போடுங்கள்.

சற்றுமுன் கிடைத்த தகவல்:- நண்பர் அவர்கள் இந்த
சாப்ட்வேருக்கான சீரியல் எண் தந்துள்ளார். அவரின் தளம்
செல்ல இங்கு கிளிக் செய்யவும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இதுவரை பாடலை ஓன்று சேர்த்தவர்கள்:-

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

பொன் மாலை பொழுது said...

உங்களின் படைப்புக்கள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் உதவிகரமானது.
நீங்கள் இவைகளை பதிவாக மாற்றி இங்கு கொண்டுவர நிறைய நேரமும் உழைப்பும் வேண்டும்.
நமக்கு விருப்பமான MP3 பாடல்களை மி அஞ்சலில் அனுப்புவது என்பது
"பாயை பிரண்டும் "வேலையாக போய்விட்டது வேலன். (தினமும் நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் ) இதற்கும் ஒரு வழி சொல்லுங்களேன். 'மாப்ஸ்' கேட்டாலே அள்ளிவிடும் நீங்கள் 'மாம்ஸ்' கேட்டால் என்ன செய்வீர்கள்? பார்க்கலாம்.


உங்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுதல்கள் வேலன் அவர்களே.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்தேன், நன்றி வேலன். ஆனால் அந்த DVD cutter தான் open செய்தால் 'files not found ' என்று வருகிறது. என்ன செய்ய?
மற்றபடி முதல் வோட்டு என்னுடையதுதான்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
உங்களின் படைப்புக்கள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் உதவிகரமானது.
நீங்கள் இவைகளை பதிவாக மாற்றி இங்கு கொண்டுவர நிறைய நேரமும் உழைப்பும் வேண்டும்.
நமக்கு விருப்பமான MP3 பாடல்களை மி அஞ்சலில் அனுப்புவது என்பது
"பாயை பிரண்டும் "வேலையாக போய்விட்டது வேலன். (தினமும் நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் ) இதற்கும் ஒரு வழி சொல்லுங்களேன். 'மாப்ஸ்' கேட்டாலே அள்ளிவிடும் நீங்கள் 'மாம்ஸ்' கேட்டால் என்ன செய்வீர்கள்? பார்க்கலாம்.


உங்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுதல்கள் வேலன் அவர்களே.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...ஜி-மெயிலில் பாடல் அனுப்புவது எனக்கு சிரமமாக தெரியவில்லை. தங்கள் மெயிலுக்கு பாடல் ஓன்றை அனுப்பியுள்ளேன். கேட்டுப்பாருங்கள்.பாடல் நன்றாக ஒலிப்பரப்பானால் அதைப்பற்றி விளக்கம் அளிக்கின்றேன்.மாம்ஸ்க்கு இதுகூட செய்யவில்லையென்றால் எப்படி,?

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

M.S.E.R.K. கூறியது...
ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்தேன், நன்றி வேலன். ஆனால் அந்த DVD cutter தான் open செய்தால் 'files not found ' என்று வருகிறது. என்ன செய்ய?
மற்றபடி முதல் வோட்டு என்னுடையதுதான்//

நன்றி நண்பரே...நீங்கள் பழைய டி.வி.டி.கட்டர் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மறுமுறை புதியதை முயற்சி செய்து: பார்க்கவும்...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

வேலன் சார்... கேட்ட ஒரே நாளில் தேடி பிடித்து பதிவு போட்ட உங்களுக்கு நன்றிகள்.

அன்பில் திளைக்க வைத்து விட்டீர்கள்.

நண்பராக நீங்கள் எந்த அளவு அன்பு வைத்திருக்கிறீர்களோ அதை விட இரு மடங்கு அன்பு செலுத்த கடமைபட்டுள்ளவனாகிறேன்.

உங்கள் ராட் மாதவ் said...

இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி நண்பரே...

நித்தி said...

நன்றி வேலன் நல்ல பதிப்பு வாக்களிக்க வசதியாக தமிழிஷ் இல் ஒரு கணக்கை உருவாக்கி விட்டேன். இனி,உங்களின் படைப்புகளுக்கு மறக்காமல் வாக்களிக்கிறேன். என்னுடைய மின்னஞ்ச‌ல் முகவரி:
nithi75@hotmail.fr

Malu said...

Nice!

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
வேலன் சார்... கேட்ட ஒரே நாளில் தேடி பிடித்து பதிவு போட்ட உங்களுக்கு நன்றிகள்.

அன்பில் திளைக்க வைத்து விட்டீர்கள்.

நண்பராக நீங்கள் எந்த அளவு அன்பு வைத்திருக்கிறீர்களோ அதை விட இரு மடங்கு அன்பு செலுத்த கடமைபட்டுள்ளவனாகிறேன்//

நன்றி நண்பரே...உங்களுக்கான ஸ்பெஷல் பதிவு.ஆனால் உங்கள் ஓட்டை காணவில்லையே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன:.
வேலன்.

வேலன். said...

RAD MADHAV கூறியது...
இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி நண்பரே..//

நன்றி நண்பரே...உங்கள் தேவைகளை சொன்னால்தான் எனக்கு தெரியும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
நன்றி வேலன் நல்ல பதிப்பு வாக்களிக்க வசதியாக தமிழிஷ் இல் ஒரு கணக்கை உருவாக்கி விட்டேன். இனி,உங்களின் படைப்புகளுக்கு மறக்காமல் வாக்களிக்கிறேன். என்னுடைய மின்னஞ்ச‌ல் முகவரி:
nithi75@hotmail.fr//

நன்றி நண்பரே...உங்களை இ-மெயிலில் தொடர்பு கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Nice!ஃ

நன்றி நண்பர் மாலு அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வழிப்போக்கன் said...

பகிர்வுக்கு நன்றி...

sarans said...

technicality you are amazing u r true friend of all

sarans said...

technicality you are amazing u r true friend of all

sarans said...

technicality you are amazing u r true friend of all

வேலன். said...

வழிப்போக்கன் கூறியது...
பகிர்வுக்கு நன்றி.//

நன்றி நண்பர் வழிப்போக்கன் அவர்ளே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

sarans கூறியது...
technicality you are amazing u r true friend of all//

நன்றி.

நன்றி..

நன்றி...

வாழ்க வளமுடன்,

வேலன்.

வேலன். said...

தமிழ் கூறியது...
உங்களுக்கு ஒரு சிறிய விருது
http://svttechnologya.blogspot.com/2009/08/blog-post_27.html


வருகைக்கும் விருதுக்கும் நன்றி தமிழ்
அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

RAM said...

வேலன் அவர்களே ...
நான் கணினிக்கு புதுசு....
என்னுடைய SONY DVD தற்சமயம் சரியாக வேலை செய்யமாட்ட்ன்கிறது ...அதாவது வேலன் சார்... CD/DVD READ ஆவுது ... CD WRITE ஆவுது ... ஆனா பாருங்க DVD இல மட்டும் WRITE ஆக மாட்டேங்குது ... எப்படி சார் இதை சரி செய்வது ...

Anonymous said...

You could easily be making money online in the undercover world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]seo blackhat[/URL], Don’t feel silly if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses not-so-popular or not-so-known methods to produce an income online.

Related Posts Plugin for WordPress, Blogger...