நமது கீ-போர்டில் Insert Key என்று ஒன்று இருப்பதை
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா... Delete Key க்கு மேல்புறம்
இருக்கும். இதுவரை கவனிக்கவில்லையென்றால் அது
இருக்கும் இடத்தை கவனித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இனி அந்த கீ- எதற்கு எல்லாம் நமக்கு பயன்படுகின்றது
என பார்க்கலாம்.
முதலில் வேர்டில் ஒரு டெக்ஸ்டை தட்டச்சு செய்கின்றோம்.
அதற்கு இடையில் நமக்கு வேறு ஒரு வார்த்தை வரவேண்டும்.
அப்போது நாம் வார்த்தையை சேர்க்க வேண்டிய இடத்தி்ல்
கர்சரை வைத்து பின் இந்த இன்சர்ட் கீயை அழுத்தி வேண்டிய
டெக்ஸ்டை தட்டச்சு செய்யலாம்.(இன்சர்ட் கீ-யை அழுத்தாமலே
யே அந்த இடத்தில் நாம் தட்டச்சு செய்யலாமே என நீங்கள்
கேட்பது புரிகின்றது) டெக்ஸ்ட் மீது தட்டச்சு செய்தால்
அடிக்கப்படும் டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்டுடன்
இணைக்கப்படும்.
அதே டெக்ஸ்டில் அந்த வார்த்தையை-வரிகளை எடுத்துவிட்டு
வேறு வார்த்தையை சேர்க்க என்ன செய்வோம். அதை டெலிட்
செய்துவிட்டு அந்த இடத்தில் வார்த்தைகளை தட்டச்சு செய்வோம்.
ஆனால்இந்த இன்சர்ட் கீ-டாகுல் கீயா (Toggle Key)
உள்ளதால் இந்த இன்சர்ட் கீ-யை அழுத்திவிட்டு அந்த இடத்தில்
நீங்கள் தட்டச்சு செய்தால் அந்த வார்த்தைகள் அழிக்கப்பட்டு
நீங்கள் தட்டச்சு செய்கின்ற வார்த்தைகள் வரும்.
சரி இதை நாம் வேறு எதற்கு பயன்படுத்தலாம்.
வேர்டில் டாக்குமெண்ட் தயாரிக்கையில் ஒரு
இடத்தில் உள்ள டெக்ஸ்டை கட் செய்து அதை வேறுஒரு
இடத்தில் ஒட்ட என்ன செய்கின்றோம். எந்த இடத்தில்
ஒட்ட வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை கொண்டு
சென்று பின் Edit மெனு சென்று Paste பிரிவில் கிளிக்
செய்வோம். மற்றும் ஒரு முறையில் Ctrl+V அழுத்தி
Pasteசெய்யலாம். அல்லது மவுஸை ரைட் கிளிக்
செய்து வரும் மெனுவில் Paste பிரிவை கிளிக் செய்யலாம்.
ஆனால் Insert Key யையே நாம் Paste கீ யாகவும் பயன்
படுத்தலாம்.அதை எப்படி என்று இப்போது காணலாம்.
முதலில் வேர்ட் திறந்துகொண்டு மெனுபாரில் உள்ள
Tool கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதில் Options கிளிக் செய்து வரும் விண்டோவில் Edit டேபை
கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
பல செக்பாக்ஸ் இருக்கும் அதில் வட்டம் மிட்டு காட்டியுள்ள
"Use the Ins Key for Paste"எதிரில் உள்ள ரேடியோ பட்டனை
தேர்வு செய்து ஓ.கே . கொடுங்கள்.
இனி நீங்கள் டெக்ஸ் அல்லது படத்தை பேஸ்ட் செய்ய
விரும்பினால் டெக்ஸ்ட் அல்லது படத்தை தேர்வு செய்துவிட்டு
எந்த இடத்தில்வரவேண்டுமோ அந்த இடத்தில் கர்சரைவைத்து
இந்த இன்சர்ட் கீ யை அழுத்தினால் போதும். ஒரே அழுத்தலில்
உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிடும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஏய்....நல்லா உள்ளே வா.... கவிழ்ந்திட போறே...
இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதுவரை Insert Key பயன்படுத்தியவர்கள்:-
12 comments:
எனக்கு இது புதிய செய்தி,பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பக்ரீத் தின நல் வாழ்த்துக்கள்!
அன்புடன் மஜீத்.
அருமையா பொறுமையா விளக்கியிருக்கீங்க! பூங்கொத்து!
பகிர்விற்கு நன்றி
பெயரில்லா கூறியது...
எனக்கு இது புதிய செய்தி,பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் பக்ரீத் தின நல் வாழ்த்துக்கள்!
அன்புடன் மஜீத்.ஃஃ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் மஜித் அவர்சளே.....
வாழ்க வளமுடன்,
வேலன்.
அன்புடன் அருணா கூறியது...
அருமையா பொறுமையா விளக்கியிருக்கீங்க! பூங்கொத்து!ஃ
நீண்ட நாட்களுக்கு பின் கருத்துரையிட வந்துள்ளீர்கள் சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பூங்கொத்துக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
எட்வின் கூறியது...
பகிர்விற்கு நன்றிஃஃ
நன்றி நண்பர் எட்வின் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
nanri nanbare !!!
நல்ல உபயோகமான தகவல்.
நன்றி
அன்புடன்
அதிரை தங்க செல்வரஜன்
வேலன் சார்,
வாழ்த்துகள் நல்ல தகவல் புதியவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
ganapathi.s.n. கூறியது...
nanri nanbare !!!//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் கணபதி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Thanga கூறியது...
நல்ல உபயோகமான தகவல்.
நன்றி
அன்புடன்
அதிரை தங்க செல்வரஜன்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் அதிரை தங்க செல்வராஜன் அவர்களே...(தங்கள் பெயர் அதிரையா அல்லது ஆதிரையா..)
வாழ்க வளமுடன்,
வேலன்.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
வாழ்த்துகள் நல்ல தகவல் புதியவர்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
மிக்க நன்றி முத்துக்குமார் சார்...
வாழ்க வளமுடன்,'
என்றும் அன்புடன்,
வேலன்.
Post a Comment