நம்மிடம் நிறைய இ-மெயில் அக்கவுண்ட்கள் உட்பட
பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே நுழையும் நிறைய
அக்கவுண்ட்கள் இருக்கும். பாஸ்வேர்ட் அனைத்துக்கு்ம்
ஒன்றையே நினைவில் வைத்துக்கொள்ள சொல்லுவார்கள்.
ஆனால் நமது பாஸ்வேர்ட் மற்றவர்களுக்கு தெரிந்து
விட்டால் அவ்வளவுதான். நமது அனைத்து அக்கவுண்ட்
களையும் எளிதில் திறந்து பார்த்துவிடுவார்கள். சரி
ஒவ்வொரு அக்கவுண்ட்க்கும் தனிதனி பாஸ்வேர்ட்
வைத்துக்கொண்டால்....? எந்த பாஸ்வேர்ட் எந்த
அக்கவுண்ட்க்கு கொடுத்தோம் என குழப்பம் நேரிடும்.
இந்த குழப்பங்களை தீர்க்க இந்த சாப்ட்வேர் உதவும்.
இந்த சாப்ட்வேரில் நம்மிடம் உள்ள கணக்கு விவரங்களை
யும்-பாஸ்வேர்ட்களையும் இதனிடம் கொடுத்துவிடவும்.
இந்த சாப்ட்வேர் திறக்க ஒரே ஓரு பாஸ்வேர்ட்
மட்டும் நாம் நினைவில் வைத்துக்கொண்டுஇருந்தால்
போதும்.(நம்மிடம் உள்ள அனைத்து அறை சாவிகளை
யும் மொத்தமாக ஒரு பெட்டியில் வைத்து அந்த
சாவியை நாம் பத்திரமாக வைத்துக்கொள்வது போன்று
இந்த சாப்ட்வேர் உதவும். உதாரணம் புரியும் என
எண்ணுகின்றேன்)
இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இது சின்ன சாப்ட்வேர்தான்
சுமார் 8 எம்.பிக்குள் தான் இருக்கும்.நீஙகள்
இதை டவுண்லோடு செய்து இன்ஸ்டால்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
இதில் முதலில் நீங்கள் Open Password Database தேர்வு செய்ய
வேண்டும். இதில் நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை
தேர்வு செய்யுங்கள். சேமிக்கும் பைலை .psafe3 என்கின்ற
பெயர்கொண்டு சேமியுங்கள். அடுத்து இதில் உள்ள
Safe Combination -ல் உங்களது பாஸ்வேர்டை டைப்
செய்யுங்கள்.(இதுதான் நமது மாஸ்டர் பாஸ்வேர்ட்
என்பதால் மிக கவனமாக செய்யுங்கள்.) இதில் உங்களுக்கு
கீ-பேர்ட் கொடுத்துள்ளார்கள். அதை கிளிக் செய்தால்
உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான கீ-போட்டில் தேவையான வார்த்தைகளை
தேர்வு செய்து அதில் உள்ள Insert கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஓ.கே.கொடுங்கள். உங்களுக்கான பாஸ்
வேர்ட் சேவ் ரெடியாகிவிட்டது. ரைட் .இப்போது
பாஸ்வேர்ட்களை சேமிப்போம். இப்போது மீண்டும்
பாஸ்வேர்ட் சேவ் திறந்துகொள்ளுங்கள்.டூல்பாரில்
Add New Entry கிளிக் செய்யுங்கள்.
Title என்பதில் உங்கள் இ-மெயில் அக்கவுண்ட் பெயர்-
நெட்ஓர்க் பெயர்-வெப் தளத்தின் பெயரை தட்டச்சு செய்
யுங்கள்.அடுத்துள்ள User Name என்பதில் அந்த அக்கவுண்ட்
கான உங்கள் பெயரை அல்லது லாகின் பெயரை அல்லது
உங்களது இ-மெயில் முகவரியை தட்டச்சு செய்யுங்கள்.
Password என்பதில் உங்கள் பாஸ்வேர்டை கவனமாக
தட்டச்சு செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்தது
சரியா என அதை Show கிளிக் செய்து சரிபார்த்துக்
கொள்ளவும்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
Notes என்பதில் மேலும் விவரங்கள்
தேவையெனில் தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.
ஓ.கே. கிளிக் செய்யுங்கள். உங்கள் அந்த அக்கவுண்ட்
கான பாஸ்வேர்ட் டேடாபேஸில் சேமிப்பாகிவிட்டது.
இதைப்போல் ஒவ்வோரு அக்கவுண்ட்டுக்கும்
விவரங்களை சேமித்துக்கொள்ளுங்கள்.
ரைட். இப்போது உங்களுடைய லாகின் மற்றும்
பாஸ்வேர்ட்டை மானிட்டரில் பார்க்கமால்
அதை கிளிப்-பேர்ட்டில் காப்பி செய்து தேவையான
இடத்தில் அதை பேஸ்ட் செய்துகொள்ளலாம்.
அதை எப்படி என இப்போது பார்க்கலாம்.
முதலில் உங்கள் பாஸ்வேர்ட் சேப் திறந்து
கொள்ளுங்கள். நீங்கள் சேமித்துள்ள அனைத்து
அக்கவுண்ட்களும் தெரியும். அதில் உங்களுக்கு
தேவையான அக்கவுண்ட்டை கிளிக்செய்யுங்கள்.
இப்போது நீங்கள் திறக்க வேண்டிய வெப்தளத்தை
திறந்து கொள்ளுங்கள். மீண்டும் பாஸ்வேர்ட்
சேப் தளத்திற்கு வாருங்கள். அதில் Edit டேபில்
உள்ள Copy Username to Clipboard கிளிக் செய்யுங்கள்.
இப்போது மீண்டும் நீங்கள் திறந்துள்ள வெப்தளத்திற்கு
வந்து லாகின் பெயர் உள்ள இடத்தில் Cont+v
அழுத்தினால் உங்கள் லாகின் பெயர் வந்துவிடும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் Ctrl+U அழுத்தினால் உங்கள் பெயரும் Ctrl+C
அழுத்தினால் உங்கள் பாஸ்வேர்டும் காப்பி ஆகும்.
அதை கொண்டுசென்று அந்த வெப்தளத்தில் பேஸ்ட்
செய்துகொள்ளலாம். டைப் அடிக்கவேண்டிய வேலை
இல்லை. அதேப்போல் இந்த சாப்ட்வேர் அப்ளிகேஷனை
நீங்கள் முடிவிட்டால் கிளிப்போர்ட்டில் உள்ளது தானே
அழிந்துவிடும். பயன் படுத்திபாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JOST FOR JOLLY PHOTOS:-
பசங்களா கொஞ்சம் இருங்க... ஒரு நல்ல உணவு
உங்களுக்கு இப்போ கொண்டுவரேன்...
இன்றைய PSD டிசைன் 40 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதுவரை பாஸ்வேர்ட் சேப் செய்துகொண்டவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
6 comments:
அன்பின் வேலன்,
ஆஹா, உங்களின் அனைத்து கடவு சொற்களையும் இந்த 'Password Safe' மென்பொருளில் தான் சேமித்து வைத்துள்ளீர்களா? ரொம்ப வசதியாக போய்விட்டது ! நீங்கள் இணைய இணைப்பில் இருக்கும் போது ஏதாவது ஒரு RAT ஐ வைத்து உங்களின் கணனியிலிருந்து அந்த மாஸ்டர் தகவல் தளத்தினை (Master Database) லபக்கிவிட்டால் உங்களின் குடுமி லபக்கியவனின் கையில் தான் !!!.
உங்களின் இந்த உதாரணத்தில் சின்ன மாற்றம் செய்தால் இந்த அபாயம் விளங்கும்.
// நம்மிடம் உள்ள அனைத்து அறை சாவிகளையும் மொத்தமாக ஒரு பெட்டியில் வைத்து அந்த சாவியை நாம் பத்திரமாக வைத்துக்கொள்வது போன்று இந்த சாப்ட்வேர் உதவும். உதாரணம் புரியும் என எண்ணுகின்றேன்) //
அதாவது பூட்டை பூட்டி சாவியை அதன் அருகிலேயே வைப்பது போன்றதுதான் இந்த மென்பொருளில் நமது கடவுசொற்களை வைத்திருப்பதும். எந்த கடவு சொல்லையும் கணனியில் வைப்பது பாதுகாப்பானது ஆகாது. எந்த கோப்பு , எந்த என்கிரிப்ஷனில் இருந்தாலும் உடைக்க இயலும். சில வகைகளுக்கு காலம் தான் அதிகமாகும். உடைக்க இயலாத எதுவும் கிடையாது. தொழில் ரீதியாக நாங்கள் இது போல நிறைய செய்துள்ளோம். பயப்படாதீர்கள். அவையனைத்தும் சட்டத்திற்கு உட்பட்ட எத்திகல் ஹேக்கிங் எனப்படும் "White Hate Hacking" தான்.
ஆக கடவுசொற்களை/பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த இடம் நமது மேல் மாடியில் உள்ள மூளை தான். இதைவிட சிறந்த இடம் வேறில்லை. :-) . என்னதான் 'சோடியம் பென்டதால்' கொடுத்தாலும் தகவல்களை இதிலிருந்து டிகிரிப்ஷன் செய்வது மிகச சவாலான ஒன்றுதான்.
with care & love,
Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com
அக்காங் !! எனுக்கு மின்ன கருத்து சொன்ன !! வாஜார் சொன்னது
தான் !! என் கருத்தும் ,
ஒரு சின்ன மாற்றம் ,
//என்னதான் 'சோடியம் பென்டதால்' கொடுத்தாலும் தகவல்களை இதிலிருந்து டிகிரிப்ஷன் செய்வது மிகச சவாலான ஒன்றுதான்//
நம்பளுக்கு அது கூட தேவ இல்லை , ஒரு தட்டு தட்டி இன்னாடா டவுசரு இன்னு கேட்டா போதும் , எம் பாஸ் வேர்டு அப்பால உங்க பாஸ் வேர்டு அல்லாத்தையும் சொல்டுவேன் !! அப்பால ,
இது நம்ப ஊட்டுல கீர பொட்டிக்கி மட்டும் தானே !! வேற என்ங்கனா போய் போட்டி தட்டினா ? இன்னா பண்றது அத்த ரவ சொல்லுங்க
வாஜார் !!
Muhammad Ismail .H, PHD, கூறியது...

நீண்ட கருத்துக்கு நன்றி முகமது இஸ்மாயில் அவர்களே...
தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நான் குறிப்பிட விரும்பியது
நமது முக்கியமான பாஸ்வேர்ட்களை அல்ல..சில வலைதளங்களுக்கு செல்கையில் அவர்கள் கேட்கும் பயனாளர் பெயர்-கடவுச்சொல் போன்ற
வற்றிக்குதான் இதை பயன்படுத்த சொன்னேன்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
டவுசர் பாண்டி கூறியது...
அக்காங் !! எனுக்கு மின்ன கருத்து சொன்ன !! வாஜார் சொன்னது
தான் !! என் கருத்தும் ,
ஒரு சின்ன மாற்றம் ,
//என்னதான் 'சோடியம் பென்டதால்' கொடுத்தாலும் தகவல்களை இதிலிருந்து டிகிரிப்ஷன் செய்வது மிகச சவாலான ஒன்றுதான்//
நம்பளுக்கு அது கூட தேவ இல்லை , ஒரு தட்டு தட்டி இன்னாடா டவுசரு இன்னு கேட்டா போதும் , எம் பாஸ் வேர்டு அப்பால உங்க பாஸ் வேர்டு அல்லாத்தையும் சொல்டுவேன் !! அப்பால ,
இது நம்ப ஊட்டுல கீர பொட்டிக்கி மட்டும் தானே !! வேற என்ங்கனா போய் போட்டி தட்டினா ? இன்னா பண்றது அத்த ரவ சொல்லுங்க
வாஜார் !!
நீ நேரா மதராஸ் டூ பாண்டிச்சேரி போ வாத்தியாரே...உனக்கு எல்லாமே விளங்கிவிடும்...சரியா...
வாழ்க வளமுடன்,
வேலன்.
அன்பின் வேலன்
இடுகை ந்ல்ல இடுகை - பயனுள்ள் அதகவல் - பயன்படுத்துவோர் சாதக பாதகங்கள் ஆரய்ந்து பயன்படுத்த வேண்டும்
பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் வேலன்
cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்
இடுகை ந்ல்ல இடுகை - பயனுள்ள் அதகவல் - பயன்படுத்துவோர் சாதக பாதகங்கள் ஆரய்ந்து பயன்படுத்த வேண்டும்
பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள் வேலன்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...சாதாரண இணையதளங்களு்க்கு இந்த சாப்ட்வேரை உபயோகிக்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment