வேலன்:-நித்தியானந்தா வீடியோவை மறைக்க

ரஜினிகாந்த் அவர்களின் படம் வெளிவரும் சமயம் மற்ற படங்களை வெளியிட தயங்குவார்கள்.அதைப்போல எவ்வளவு நல்ல பதிவாக எழுதியிருந்தாலும் நித்தியானந்தாவை போன்றவர்களின் பதிவு வரும் சமயம் மற்ற பதிவுகள் காணமல் போய்விடுகின்றது.சகோதரி சித்ராவும் - நண்பர் ஜெய்லானியும் அதையொட்டிய பதிவாக போட்டுள்ளனர். சரி நாமும் அதுசார்ந்த பதிவாக போடலாம் என்று இன்று இந்த பதிவை வெளியிடுகின்றேன்.இது சாதாரணமாக நாம் டெக்ஸ்டாப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் தகவலை மறைக்க உதவும் சின்னசாப்ட்வேர்.இதற்கு ஒரே கிளிக்கில் டெக்ஸ்டாப்பின் தகவலை மறைக்க என தலைப்பு கொடுத்திருக்கலாம். ஆனால் நேரத்திற்கு ஏற்ற தலைப்பாக இதை வைத்துள்ளேன்.இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கி உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின்னர் டாக்ஸ்பாரில் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இதில் உள்ள Show Settings கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Change என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் மாற்றவேண்டிய Short Key யை தேர்வு செய்து கொள்ளவும்.பின ஓ.கே.தரவும். அவ்வளவுதான். உங்களுடைய டாக்ஸ்க்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.இனி வழக்கமான பணிகளை செய்யலாம். திடீரென்று ஒருவர் பக்கத்தில் வந்துவிட்டால் Ctrl+E கீகளை அழுத்துங்கள்.நீங்கள் அதுவரை வேலை செய்துகொண்டிருந்த அப்ளிகேஷன் உடனே மறைந்துவிடும்.நீங்கள் மறைத்த அப்ளிகேஷனை டாக்ஸ்க்பாரில் பார்க்கமுடியாது. Window Task Manager -பட்டியலிலும் அந்த அப்ளிகேஷனை பார்க்க முடியாது. அருகில் வந்தவர் சென்றுவிட்டால் அந்த அப்ளிகேஷனை கிளிக் செய்து அதன்பாப்அப் மெனுவில் உள்ள நீங்கள் மறைத்த அப்ளிகேஷன் பெயரை கிளிக்செய்யுங்கள். அது மீண்டும் திரையில் தோன்றும். அப்ளிகேஷனைமறைக்கநீங்கள்Ctrl+Eக்குபதிலாகவேறு
கீகளையும்கொடுத்துக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்
.கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சிக்கன் ப்ரை - எறா ப்ரை ன்னு விதவிதமான பதிவுகளாக போடறாங்க. தவளையில் வைரைட்டியா ப்ரை ஏதும் பண்ண முடியுமானு கேட்டுச்சொல்லுங்களேன்.
இன்றைய PSD படம் கீழே:-
Design செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

Anonymous said...

தொழிற்நுட்பம் தவறான விஷயத்திற்கா?
நல்லவிதமாக சொல்லியிருக்கலாம்

வேலன். said...

உண்மைதான் சார்...இது நாம் செய்யும் தவறுகளை மறைக்கஉதவும் சாப்ட்வேர்.நாம் மற்றவர்களிடம் இருந்து எதையும் மறைக்கவேண்டாம் என விரும்பினால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

//உண்மைதான் சார்...இது நாம் செய்யும் தவறுகளை மறைக்கஉதவும் சாப்ட்வேர்.நாம் மற்றவர்களிடம் இருந்து எதையும் மறைக்கவேண்டாம் என விரும்பினால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம்//

குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் பயன்படும். நன்றி தலைவா!!

Chitra said...

ரஜினிக்கு ஒரு ஜே!

அப்புறம் எனக்கு பிடித்த ஜாலி போட்டோ: இங்குள்ள சைனீஸ் உணவகங்கள் பலவற்றில், தவளை கால்கள் fry என்று விற்கிறார்கள். அதை சாப்பிட்டுப் பார்த்த ஒரு கேரளா நண்பர், அவர்கள் ஊரில் இதை விட நன்றாக இருப்பதாக சொன்னார். ரெசிபி வாங்கி தரவா?

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
எங்கே நீங்களும் உங்கள் பதிவில் நித்த்யானந்த ரஞ்சனிக்கு வழங்கி ஆசி பற்றிய குறும் படம் போட்ப்போகிறீர்களா...என்று பயந்தேன்.நல்ல வேலை தலைப்புதான் அப்படி, படைப்பு நல்லபடி.
என்றும் அன்புடன்
முஹ்ம்மது நியாஜ்
கோலாலம்பூர்

பொன் மாலை பொழுது said...

// திடீரென்று ஒருவர் பக்கத்தில் வந்துவிட்டால் Ctrl+E கீகளை அழுத்துங்கள்.நீங்கள் அதுவரை வேலை செய்துகொண்டிருந்த அப்ளிகேஷன் உடனே மறைந்துவிடும்.நீங்கள் மறைத்த அப்ளிகேஷனை டாக்ஸ்க்பாரில் பார்க்கமுடியாது. Window Task Manager -பட்டியலிலும் அந்த அப்ளிகேஷனை பார்க்க முடியாது. //

நீங்க தரையில் போட்ட கோலத்தில் கூட நுழைந்து வெளிவரும் பார்ட்டி என்று எனக்குத்தான் தெரியுமே.அதனால்தான் "மாஸ்டர் " கிடைத்தது மாப்சுக்கு!!

எனக்கு இது போன்ற சங்கடங்கள் வருவதில்லை. மறைக்கும் படியான சரக்குகளை கையாள்வதில்லை.அதான்.

ஆனாலும் இங்கு நிறைய பேருக்கு, அலுவலகத்தில் ப்ளாக் எழுதும் அநேகருக்கும் இது மிக்க பயன்பாடான ஒன்று.
வழக்கம் போல தூள்!!

Muthu Kumar N said...

Dear Velan Sir,

Really you are great. Good and useful info for who use office computer for more personal use.

Best wishes
Muthu Kumar.N

Thenammai Lakshmanan said...

மங்குனி அமைச்சர் சித்ராவின் ப்ளாக்கில் பின்னூட்டத்தில் சொன்னது போல அடுத்த சாமியார் பதிவா என வந்தேன் வேலன் ... நல்ல வேளை... அதை மறைப்பது இது... நல்ல பதிவு ..

puduvaisiva said...

நல்ல தகவல் வேலன்

ஆனா நாங்க டபுல் டிஸ்க் டாப் - ஐ (Double Desktop)பயன்படுத்துறோம் இது ரொம்ப எளிது.

:-)))

பயன் படுத்தி பாருங்க
http://www.brothersoft.com/doubledesktop-16011.html

Unknown said...

Dear Velan,

can please give some stylish Tamil fonts.

i am also a photoshop fan.

and i am flowing your blog. very helpfull for me.

this is my email id: tamilfont@gmail.com

thanks
kanna

அன்பு said...

பயனுள்ள பதிவு.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
//உண்மைதான் சார்...இது நாம் செய்யும் தவறுகளை மறைக்கஉதவும் சாப்ட்வேர்.நாம் மற்றவர்களிடம் இருந்து எதையும் மறைக்கவேண்டாம் என விரும்பினால் இந்த சாப்ட்வேர் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம்//

குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் பயன்படும். நன்றி தலைவா!!//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
ரஜினிக்கு ஒரு ஜே!

அப்புறம் எனக்கு பிடித்த ஜாலி போட்டோ: இங்குள்ள சைனீஸ் உணவகங்கள் பலவற்றில், தவளை கால்கள் fry என்று விற்கிறார்கள். அதை சாப்பிட்டுப் பார்த்த ஒரு கேரளா நண்பர், அவர்கள் ஊரில் இதை விட நன்றாக இருப்பதாக சொன்னார். ரெசிபி வாங்கி தரவா?//

ஆஹா...சகோதரி நீங்களும் ரஜனி ரசிகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
எங்கே நீங்களும் உங்கள் பதிவில் நித்த்யானந்த ரஞ்சனிக்கு வழங்கி ஆசி பற்றிய குறும் படம் போட்ப்போகிறீர்களா...என்று பயந்தேன்.நல்ல வேலை தலைப்புதான் அப்படி, படைப்பு நல்லபடி.
என்றும் அன்புடன்
முஹ்ம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ//

நண்பருக்கு...தலைப்பில் பெயர் வைத்ததற்கே எனக்கு 1300 க்கும் மேற்பட்ட விசிட்டர்கள் வந்து சென்றுள்ளார்கள்..என்னத்தை சொல்றது..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
// திடீரென்று ஒருவர் பக்கத்தில் வந்துவிட்டால் Ctrl+E கீகளை அழுத்துங்கள்.நீங்கள் அதுவரை வேலை செய்துகொண்டிருந்த அப்ளிகேஷன் உடனே மறைந்துவிடும்.நீங்கள் மறைத்த அப்ளிகேஷனை டாக்ஸ்க்பாரில் பார்க்கமுடியாது. Window Task Manager -பட்டியலிலும் அந்த அப்ளிகேஷனை பார்க்க முடியாது. //

நீங்க தரையில் போட்ட கோலத்தில் கூட நுழைந்து வெளிவரும் பார்ட்டி என்று எனக்குத்தான் தெரியுமே.அதனால்தான் "மாஸ்டர் " கிடைத்தது மாப்சுக்கு!!

எனக்கு இது போன்ற சங்கடங்கள் வருவதில்லை. மறைக்கும் படியான சரக்குகளை கையாள்வதில்லை.அதான்.

ஆனாலும் இங்கு நிறைய பேருக்கு, அலுவலகத்தில் ப்ளாக் எழுதும் அநேகருக்கும் இது மிக்க பயன்பாடான ஒன்று.
வழக்கம் போல தூள்!!//

நீங்கள் சொல்வதுபோல் அலுவலக பதிவர்களுக்கு மிகவும் பயன்படும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்:வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Really you are great. Good and useful info for who use office computer for more personal use.

Best wishes
Muthu Kumar.N//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

thenammailakshmanan கூறியது...
மங்குனி அமைச்சர் சித்ராவின் ப்ளாக்கில் பின்னூட்டத்தில் சொன்னது போல அடுத்த சாமியார் பதிவா என வந்தேன் வேலன் ... நல்ல வேளை... அதை மறைப்பது இது... நல்ல பதிவு ஃ//
தாங்கள் எனது பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
நல்ல தகவல் வேலன்

ஆனா நாங்க டபுல் டிஸ்க் டாப் - ஐ (Double Desktop)பயன்படுத்துறோம் இது ரொம்ப எளிது.

:-)))

பயன் படுத்தி பாருங்க
http://www.brothersoft.com/doubledesktop-16011.html//
தாங்கள் சொல்வது போல 6 டெக்ஸ்டாப் பற்றி கட்டுரையை தயார் செய்துவைத்துள்ளேன். அது இன்னும் வசதியாக இருக்கும். பாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Kanna கூறியது...
Dear Velan,

can please give some stylish Tamil fonts.

i am also a photoshop fan.

and i am flowing your blog. very helpfull for me.

this is my email id: tamilfont@gmail.com

thanks
kanna
ஃஅனுப்பி வைக்கின்றேன் நண்பரே்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அன்பு கூறியது...
பயனுள்ள பதிவுஃஃ//

நன்றி அன்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

பா.வேல்முருகன் said...

ஊரே _________ -ஆ திரியும்போது, நாம மட்டும் கோமணம் கட்டினா கோமாளி ஆயிடுவோம்.

வாங்க. நீங்களும் நித்யானந்தா ஜோதில ஐக்கியம் ஆகுங்க.

நல்ல பதிவு.

வேலன். said...

Vels கூறியது...
ஊரே _________ -ஆ திரியும்போது, நாம மட்டும் கோமணம் கட்டினா கோமாளி ஆயிடுவோம்.

வாங்க. நீங்களும் நித்யானந்தா ஜோதில ஐக்கியம் ஆகுங்க.

நல்ல பதிவு//

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

Unknown said...

வணக்கம் வேலன் நான் இத்தாலி இருந்து விக்கி....
என்னுடைய கணணியில் தொடர்ந்து வொர்க் செய்வதாலே கண் பாதிக்கிறது அதற்க்கு கூலான மென்பொருள் தர முடியுமா?
(தயவு செய்து தரவும் )
rajh.m.c.bishma@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...