வேலன்:-டிரைவ் எழுத்துக்களை மாற்ற


நமது தலையெழுத்தை மாற்ற முடியாது..ஆனால் நாம் உபயோகிக்கும் கம்யூட்டரின் டிரைவ் எழுத்துக்களை மாற்றலாம்..D.E.F.G.H.I...... என எத்தனை Drive -டிரைவ் உள்ளதோ அத்தனை எழுத்துக்களையும் நாம் நமது விருப்பமானபடி மாற்றிக்கொள்ளலாம். முதலில் My Computer -ல் ரைட் கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் Manage என்பதனை தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் Disk Management என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வரிசையாக உங்கள் கணிணியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கும். அதில் எந்த டிரைவ் பெயரை மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த டிரைவை தேர்வு செய்யுங்கள்.பின்னர் அதில் ரைட் கிளி்க் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் Change Drive Letter and Paths ...என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Change என்பதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வரிசையாக ஆங்கில எழுத்துக்கள் இருக்கும். அதில் எந்த எழுத்து  உங்களுக்கு தேவையோ - எந்த எழுத்து உங்கள் ஃபவரைட்டோ அதை தேர்வு செய்து ஒ.கே. கொடுங்கள்.. உங்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி வரும். 
Yes கொடுங்கள்.உங்கள் விருப்பமான டிரைவ்வுக்கு விருப்பமான எழுத்துக்கள் கொடுத்தாகி விட்டது. இதில் முக்கியமான C -டிரைவ் எழுத்தை மட்டும் மாற்றமுடியாது.ஏன் என்றால் அது கம்யூட்டரின் தலையெழுத்து அதை மாற்ற முடியாது.

வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
அம்மா...இந்த பூனைக்கு சிக்கன் -65 வேண்டுமாம்...!

இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-

டிசைன் செய்த பின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

ஹாய் அரும்பாவூர் said...

எப்படி தல
எளிமையான முறையில் சிறப்பான தகவல்கள்
நிச்சயம் சொல்லி தருவது கஷ்டம
அதிலும் எல்லோருக்கும் புரியும் வகையில்
ரியல்லி சூப்பர் கலக்குங்க
அன்புடன்
ஹாய் அரும்பாவூர்

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
எப்படி தல
எளிமையான முறையில் சிறப்பான தகவல்கள்
நிச்சயம் சொல்லி தருவது கஷ்டம
அதிலும் எல்லோருக்கும் புரியும் வகையில்
ரியல்லி சூப்பர் கலக்குங்க
அன்புடன்
ஹாய் அரும்பாவூர்//

யப்பா...என்ன பாஸ்ட் கமெண்ட்..நன்றி அரும்பாவூர்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி வேலன் - இருப்பினும் இதனால் ஒரு பயனும் இருக்காது - சில பிரச்னைகள் வரவும் வாய்ப்புண்டு - அனைவரும் பயன்படுத்தும் முறையான C D E F G H I என கணினி வைக்கும் பெயர்களை மாற்றாமல் இருப்பது நலம்.

ஆயினும் இம்மாதிரி ஒரு வசதி உண்டு என்பதனை எடுத்துக்காட்டி - தேவைப்படின் பயனபடுத்தவும் வழி வகை சொல்லிக்கொடுத்தமை நன்று - நல்லதொரு பணி தொடர்க !

நல்வாழ்த்துகள் வேலன் !

மைதீன் said...

thanks

ஜெய்லானி said...

மாற்றலாம்தான், சில நேரங்களில் (ஃபார்மெட் அல்லது புதிய டிரைவ் சேர்க்கும் போது )நமக்கே குழம்பிவிடும். இருந்தாலும் இது ஒரு வழி அவ்வளவுதான். புதியவர்கள் முயற்சிக்கலாம். நன்றி..

Chitra said...

சிக்கன் 65 க்கு, சிக்கன் இன்னும் கொஞ்சம் பெருசா ஆனால், நல்லா இருக்கும். ஹி,ஹி,ஹி,.....

Anonymous said...

பதிவுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

சசிகுமார் said...

sir good post, keep it up

பொன் மாலை பொழுது said...

நல்லா பதிவு மாப்ள.

மாணவன் said...

Thanks Boss.......

Keep it up....

Excellent...........

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
தகவலுக்கு நன்றி வேலன் - இருப்பினும் இதனால் ஒரு பயனும் இருக்காது - சில பிரச்னைகள் வரவும் வாய்ப்புண்டு - அனைவரும் பயன்படுத்தும் முறையான C D E F G H I என கணினி வைக்கும் பெயர்களை மாற்றாமல் இருப்பது நலம்.

ஆயினும் இம்மாதிரி ஒரு வசதி உண்டு என்பதனை எடுத்துக்காட்டி - தேவைப்படின் பயனபடுத்தவும் வழி வகை சொல்லிக்கொடுத்தமை நன்று - நல்லதொரு பணி தொடர்க !

நல்வாழ்த்துகள் வேலன் !//
மாற்றங்களில் பலன ்இருக்காது. ஆனால் அதையும் நாம் மாற்றலாம் என புதியவர்கள் அறிந்துகொள்ளவே இதை பதிவிட்டேன்.தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மைதீன் கூறியது...
thanks//

நன்றி மைதீன் சார்...்வாழ்க வளமுடன,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
மாற்றலாம்தான், சில நேரங்களில் (ஃபார்மெட் அல்லது புதிய டிரைவ் சேர்க்கும் போது )நமக்கே குழம்பிவிடும். இருந்தாலும் இது ஒரு வழி அவ்வளவுதான். புதியவர்கள் முயற்சிக்கலாம். நன்றி..//

நன்றி ஜெய்லானி சார்...வருகைக்கும் கருத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
சிக்கன் 65 க்கு, சிக்கன் இன்னும் கொஞ்சம் பெருசா ஆனால், நல்லா இருக்கும். ஹி,ஹி,ஹி,.//

அப்படியா....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
பதிவுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

நன்றி மஜீத் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
sir good post, keep it up


நன்றி சசிகுமார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்லா பதிவு மாப்ள.ஃ//

நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

simbu கூறியது...
Thanks Boss.......

Keep it up....

Excellent.........

நன்றி சிம்பு..தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...