Friday, May 7, 2010

வேலன்:-போட்டோஷாப் செய்முறை பயிற்சி


வித்தியாசமாகவும் புதுமையாகவும் புகைப்படங்களை வெளியிடுவதில் விகடனுக்கு நிகர் விகடனே...அதில் வரும் புகைப்படங்களைபார்த்தே நாம் போட்டாஷாப்பில் புதுமையான டிசைன்களை கற்றுக்கொள்ளலாம்.  அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் (சுமார் 4 வருடங்களுக்கு முன்னர்) விகடனில் ஒரு மனிதர் அவருடைய தலையை கையில் வைத்துள்ளதாக படம் வெளிவந்தது. அது எப்படி செய்திருப்பார்கள் என யோசித்து அப்போதே நான் செய்துபார்த்த புகைப்படங்கள் இது. இனி இதை எப்படி நாம் கொண்டுவரலாம் என பார்க்கலாம்.முதலில் கையை தனியே வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். படம் கீழே:-
அதைப்போலவே முகத்தை பிடிததுள்ளதுபோல் மற்றும் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளவும். ஆனால் இருக்கும் போசிஷன் மாறக் கூடாது.கை மட்டும் தான் மாற வேண்டும்.
இப்போது பென் டூல் மூலம் இரண்டாவது படத்தில தலையை மட்டும் கட் செய்து பின்னர் மூவ் டூல் மூலம் நகர்த்தி பின்னர் டிரான்ஸ்பார்ம் டூல்(Ctrl+T -அழுத்தினால் வரும் டூல்) மூலம் சரியாக பொருத்தவும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இதைப்போல மற்றும் ஓரு புகைப்படம் கீழே:-
குறிப்பிட்ட வயது வரைதான் மகன்கள் நமக்கு குழந்தை.நமக்கு 60 வயதாகிவிட்டபின் நாம்தான் அவர்களுக்கு குழந்தை.அதை உணர்த்தவே இந்த புகைப்படம்.முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது மகன் படத்தை பென்டூலால் கட் செய்து மூவ் டூலால் நகர்த்தி எனது தலையில பொருத்தவும்.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
இப்போது எனது புகைப்படத்தை கட் செய்து அதைப்போல நகர்த்தி எனது மகன் தலையில் வைத்து டிரான்ஸ்பார்ம் டூலால் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
பார்க்க வேடிக்கையாக இருக்கலாம்.போட்டாஷாப் என்றாலே வேடிக்கையும் கற்பனையும் தானே.  போட்டாஷாப்பில இதை ஒர்க் செய்து பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
குளோசப் உபயோகிக்க சொன்னால் உபயோகிக்காமல் இப்படி குளோசப்பில் வந்து வாயை பிளக்கிறேயே....!


இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

28 comments:

  1. வேலன் சார்,

    அருமை, போட்டோசாப்பில் நிறைய வித்தைகளை கற்று தருகிறீர்கள்

    பிரமாதம் சார்...

    தொடர்க உங்கள் பணி...

    நன்றி சார்

    ReplyDelete
  2. அடேயப்பா வில்லங்கமான ஆளா இருப்பீங்க போல? அசத்தல் பதிவு. இதற்கு போட்டோஷாப் பயிற்சி செய்பவர்கள் டிஜிட்டல் புகைப்பட கருவியை நன்றாக கையாள தெரிந்திருந்தால் இலகுவாக போட்டோஷோப்பில் இன்னும் கலக்கலாம்.

    ReplyDelete
  3. வழக்கம் போல கலக்கல் பதிவு வேலன் சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அட்டகாசமான trick போட்டோஸ். சூப்பர்!


    jolly photo comment: close-up shot இன்னைக்கு இருக்கும் என்று தெரியும்ல. close-up use பண்ணி பல் விளக்கிட்டு வந்திருக்கலாம். கப்பு தாங்கல. :-)

    ReplyDelete
  5. அப்பாவும் , பிள்ளையும் கடைசி போட்டோ சூப்பரோ சூப்பர்.!!

    ReplyDelete
  6. வேலன் சார்,

    நல்ல தகவல், அருமையான புகைப்படங்கள்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  7. மாப்ல , உண்மையிலேயே ஜமாசிடீங்க,
    நல்ல idea இது.

    ReplyDelete
  8. நல்ல படைப்பு..........பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  9. சூப்பர்ர் சகோ!!

    ReplyDelete
  10. உபோயோகமான பகிர்வு.

    மிக்க நன்றிங்க வேலன்

    ReplyDelete
  11. முஹம்மது நியாஜ்May 7, 2010 at 8:50 PM

    அன்புமிகு வேலன் சார் அவர்களுக்கு
    நீண்ட நாட்களாக போட்டோ ஷாப் பற்றி ஏதுமில்லை என்று நினைத்தேன்.
    பாடம் வந்து விட்டது. மிக்க மிகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  12. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    வேலன் சார்,

    அருமை, போட்டோசாப்பில் நிறைய வித்தைகளை கற்று தருகிறீர்கள்

    பிரமாதம் சார்...

    தொடர்க உங்கள் பணி...

    நன்றி சார்//

    நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. PRAKASH கூறியது...
    அடேயப்பா வில்லங்கமான ஆளா இருப்பீங்க போல? அசத்தல் பதிவு. இதற்கு போட்டோஷாப் பயிற்சி செய்பவர்கள் டிஜிட்டல் புகைப்பட கருவியை நன்றாக கையாள தெரிந்திருந்தால் இலகுவாக போட்டோஷோப்பில் இன்னும் கலக்கலாம்.//
    கேமரா நன்றாக கையளாத்தெரிந்திருந்தால் பெரும்பாலான பணிகளை கேமராவிலேயே முடித்துவிடலாம்.தங்கள் வருகைக்கும்் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. சசிகுமார் கூறியது...
    வழக்கம் போல கலக்கல் பதிவு வேலன் சார். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

    நன்றி சசி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. Chitra கூறியது...
    அட்டகாசமான trick போட்டோஸ். சூப்பர்!


    jolly photo comment: close-up shot இன்னைக்கு இருக்கும் என்று தெரியும்ல. close-up use பண்ணி பல் விளக்கிட்டு வந்திருக்கலாம். கப்பு தாங்கல. :-)//

    தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. ஜெய்லானி கூறியது...
    அப்பாவும் , பிள்ளையும் கடைசி போட்டோ சூப்பரோ சூப்பர்.!!//
    நன்றி ஜெய்லானி சார்...வருகைக்கும் கருத்துக்கும நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    நல்ல தகவல், அருமையான புகைப்படங்கள்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துக்குமார் சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

    ReplyDelete
  18. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ல , உண்மையிலேயே ஜமாசிடீங்க,
    நல்ல idea இது.//

    நன்றி மாம்ஸ்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. நித்தி கூறியது...
    நல்ல படைப்பு..........பகிர்ந்தமைக்கு நன்றி//

    நன்றி நித்தி சார்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. Mrs.Menagasathia கூறியது...
    சூப்பர்ர் சகோ!!//

    நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  21. ராம் கூறியது...
    உபோயோகமான பகிர்வு.

    மிக்க நன்றிங்க வேலன்//

    நன்றி ராம் சார்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  22. முஹம்மது நியாஜ் கூறியது...
    அன்புமிகு வேலன் சார் அவர்களுக்கு
    நீண்ட நாட்களாக போட்டோ ஷாப் பற்றி ஏதுமில்லை என்று நினைத்தேன்.
    பாடம் வந்து விட்டது. மிக்க மிகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்//
    நன்றி நண்பரே...நேரம் போதவில்லை..ஆதனாலேயே போட்டோஷாப் பாடம் பதிவிட காலதாமதம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  23. வணக்கம் வேலன் அண்ணா, இந்த பதிவை பார்கும் அனைத்து அன்பர்களுக்கும் பிடித்தாக இருக்கும் என்று கருதுகிறேன்.காரணம், photo shop முழமையாக கற்றவர்களாள் இதைப்போன்ற பல image உருவாக்க முடியும்.ஆனால் என்னை போன்ற புதிதாக கற்கும் அனைவராலும் முடியும் என்று சிந்திக்கவைத்து, அந்த சூட்சுமத்தை கற்றுதந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  24. ரொம்ப அருமையான விளக்கம் நண்பா தொடருங்கள் உங்கள் அன்பான பணியை

    ReplyDelete
  25. அருமை, போட்டோசாப்பில் நிறைய வித்தைகளை கற்று தருகிறீர்கள்

    ReplyDelete
  26. மச்சவல்லவன் கூறியது...
    வணக்கம் வேலன் அண்ணா, இந்த பதிவை பார்கும் அனைத்து அன்பர்களுக்கும் பிடித்தாக இருக்கும் என்று கருதுகிறேன்.காரணம், photo shop முழமையாக கற்றவர்களாள் இதைப்போன்ற பல image உருவாக்க முடியும்.ஆனால் என்னை போன்ற புதிதாக கற்கும் அனைவராலும் முடியும் என்று சிந்திக்கவைத்து, அந்த சூட்சுமத்தை கற்றுதந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.//

    நன்றி மச்சவல்லவன்்.உங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  27. சே.குமார் கூறியது...
    அருமை, போட்டோசாப்பில் நிறைய வித்தைகளை கற்று தருகிறீர்கள்//

    நன்றி குமார் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  28. hello sir unga padiugal nanraga irukkiradu but photoshop edi download panninal easyaga irukkumnu sollungalen pls

    ReplyDelete