வேலன்-பெரிய எம.பி.3 பாடல்களை சிறியதாக மாற்ற


திரைப்பட பாடல்களை ரிங்டோனாக வைத்திருப்போம். அதில் குறிப்பிட்ட பகுதியை - இசையை - பாடல்வரியை மட்டும் தேர்வு செய்து ரிங்டோனாக வைத்துக்கொள்ள இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. ஒரு சிடியில் பொதுவாக 14 பாடல் வரை பதிவு செய்யலாம். அதே எம்.பி.3 என்றால் 70 பாடல்கள் வரை பதிவு செய்யலாம். இந்த சாப்ட்வேரில் எம்.பி.3 பாடல்களையே மினி எம்.பி.3 ஆக மாற்றிவிடும்.மேலும் இதில் பாடல்களை வேவ் பைல்களாக மாற்றிவிடலாம். சில ஆடியோ சிடிக்களை நாம் கேட்க முடியும். ஆனால் கம்யுட்டரில் சேமிக்கவும் எம்.பி.3 ஆகவும் மாற்ற முடியாது. இந்த சாப்ட்வேரில் அதுவும் சாத்தியமே. இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில நியு கிளிக்செய்து பாடலை தேர்வு செய்யுங்கள.
பாடலின் விருப்பமான இடம் வந்ததும் கர்சரால் தேர்வு செய்யவும். தேர்வு செய்த பகுதியானது நிறம் மாறிஉள்ளதை கீழே உள்ள படத்தினில் பார்க்கலாம்.
இப்போது சிடியில் இருந்து பாடலைதனியே பிரிப்பதை காணலாம். ஆடியோ சிடியை டிரேயில் போடவும். பாடலை தேர்வு செய்யவும். வேண்டிய பார்ம்ட்டையும் சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போலவே பெரிய எம்.பி.3 பாடலில் இருந்து மினி எம்.பி.3 பாடலாக மாற்ற பாடலை தேர்வு செய்யுங்கள. தனிதனியாகவோ மொத்தமாகவோ பாடலை தேர்வு செய்யுங்கள். கன்வர்ட் கிளிக்செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில உள்ள செட்டிங்ஸை கிளிக்செய்வதன் மூலம் வேண்டிய வசதியினை பெற்று பயனடையலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

16 comments:

ஹாய் அரும்பாவூர் said...

நல்ல பயனுள்ள தகவல் நன்றி வேலன்

தொடரட்டும் உங்கள் சேவை உங்கள்
நண்பன்
ஹாய் அரும்பாவூர்

ஜெய்லானி said...

இதையும் முயற்சி செய்திடுறேன்..

பொன் மாலை பொழுது said...

மாப்ள உங்க பதிவு ஒவ்வொன்னும் பிரமாதம் போங்க.
மாம்சுக்கு பெருமை தாங்களா அய்யா!

சசிகுமார் said...

டவுன்லோட் செய்து விட்டேன் நண்பரே, எப்பவும் போல நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பொன் மாலை பொழுது said...

அதெல்லாம் சரிதான் மாப்ள, என் நண்பர் ஒருவர் 110 கிலோ எடையுடன்
அல்லாடுகிறார். அவரின் எடையை 80 கிலோவாக குறைக்க ஏதேனும்
சாப்ட் வேர் உள்ளதா? இருந்தால் அப்படியே அதனை "அந்த" பக்கம் தள்ளிவிடுங்களேன்
புண்ணியமாய் போகும்!

puduvaisiva said...

பயனுள்ள தகவல் நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
நல்ல பயனுள்ள தகவல் நன்றி வேலன்

தொடரட்டும் உங்கள் சேவை உங்கள்
நண்பன்
ஹாய் அரும்பாவூர்//

நன்றி நண்பர் அரும்பாவூர்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
இதையும் முயற்சி செய்திடுறேன்//

நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள உங்க பதிவு ஒவ்வொன்னும் பிரமாதம் போங்க.
மாம்சுக்கு பெருமை தாங்களா அய்யா//


நன்றி மாம்ஸ்...எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்.வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
டவுன்லோட் செய்து விட்டேன் நண்பரே, எப்பவும் போல நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சசிகுமார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அதெல்லாம் சரிதான் மாப்ள, என் நண்பர் ஒருவர் 110 கிலோ எடையுடன்
அல்லாடுகிறார். அவரின் எடையை 80 கிலோவாக குறைக்க ஏதேனும்
சாப்ட் வேர் உள்ளதா? இருந்தால் அப்படியே அதனை "அந்த" பக்கம் தள்ளிவிடுங்களேன்
புண்ணியமாய் போகும்!///

முந்தைய பதிவுகளிலேயே போட்டுள்ளேனே.பிடிஎப் பைலாக அவருக்கு தாருங்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
பயனுள்ள தகவல் நன்றி வேலன்

வாழ்க வளமுடன்.//

சிவா சார். உங்களை பார்த்ததும் தான் சின்ன குழந்தைகளுககான சாப்ட்வேர் நினைவுக்கு வந்தது. அடுத்த பதிவு அதையே போட்டுடலாம். வருகைக்கு நன்றி சார். வாழ்க வளமுடன்,வேலன்.

பாலராஜன்கீதா said...

http://www.formatoz.com/
என்ற சுட்டியில் உள்ள formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.

வேலன். said...

பாலராஜன்கீதா கூறியது...
http://www.formatoz.com/
என்ற சுட்டியில் உள்ள formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.//

நன்றி சகோதரி 7-6=2010 பதிவில் அதைப்பற்றி பதிவிட்டுள்ளேன். வந்து பார்க்கவும். வாழ்க வளமுடன்,வேலன்.

sakthi said...

hai, i don't no how to use please tel me how to use

இப்னு இஸ்மாயில் said...

நன்றி அண்ணா
தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
நான் விண்டோஸ் 7 அல்டிமேட் பேக் முன்பு போட்டேன்
அனால் எனது லாப்டாப் சி டி டிரைவ் வீணாகிவிட்டது நான் போட்டுள்ள டெமோ வெர்சன் முடிவடிந்துவிட்டதால் நாட் ஜெனுன் என்று வருகிறது நான் வேறு ஒ எஸ் போடா என்ன செய்யவேண்டும்

Related Posts Plugin for WordPress, Blogger...