வேலன்-கீ போர்டில் பியானோ

பியானோ வாசிப்பதில் குழந்தைகளுக்கு அலாதி இன்பம். எனது மகனும் ஆசைப்பட்டான் என 100 ரூபாயில் ஒன்று வாங்கிதந்தேன். கொஞ்சநாளில் அது காலி..சிறிது நாள் கழித்து மீண்டும ஒன்று கேட்டு அடம் பிடித்தான்.உடைக்காமல் ஒழுங்காக வைத்துவிளையாடவேண்டும் என சொல்லி கொஞசம் விலை அதிகமாக 700 ரூபாயில் வாங்கி தந்தேன். வழக்கப்படி அதையும் ரிப்பேர் செய்துவிட்டான். அவனுக்கு பியானோவும் வாங்கி தரனும் ரூபாயும் செலவாக கூடாது என யோசித்தபோதுதான் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 98 கே.பி அளவுள்ள இது சிறந்த வேலையை செய்கின்றது. இதைபதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் Voice என்கின்ற விண்டோவினை கிளிக் செய்தால் சுமார் 130 ஒலிகளின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவரும்..பறவைகள் சத்தம்.டெலிபோன் ஒலி.புல்லாங்குழல் ஒலி.என என்னற்ற ஒலிகள் உள்ளது.நமக்கு விருப்பமான ஒலியை தேர்வு செய்து நமது கீ போர்டில் கீ களை அழுத்த ஒவ்வொரு கீ-கும் அதற்கேற்ற ஒலி ஒலிக்கின்றது.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அப்புறம் என்ன- .இன்ஸ்டால் செய்து குழந்தைகளை விளையாட விடுங்கள். பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

19 comments:

மாணவன் said...

வேலன் சார்,

அருமையான பதிவு...

அவ்வபோது இது மாதிரி சிறுவர்களுக்காகவும் பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்தி விடுகீர்கள்....

நன்றி சார்...

ஜெய்லானி said...

இனி வீட்டுகுள்ள குயில் கூவும் . மீண்டும் தன் முகம் காட்டாமல்..!!

Unknown said...

Hi,
என்னையும் கொஞ்சம் Follow செய்யுங்களேன்.

Ananya Mahadevan said...

super!
எனக்கே ரொம்ப ஜாலியா இருக்கு! உடனே பண்ணிட்டேன். நோட்ஸ் தெரிஞ்சா நாமளும் வாசிக்கலாம்! ஃப்ர்ஸ்டு க்ளாஸ்!

பொன் மாலை பொழுது said...

என் செல்ல மாப்ள! எனக்கு "நொம்ப நொம்ப " பிடிச்சிருக்கு
இனிமே நானும் பியானோ வாசிப்பேன். (தனியா இருக்கும்போத்தான் )
பகிவுக்கு நன்றி மாப்ஸ்.

mahaboob said...

சூப்பர் வேலன் சார்

Good citizen said...

Very interesting for children's entertainement ,,Thanks Bro from me and my children

ஆ.ஞானசேகரன் said...

வாவ்வ்வ்வ்வ்... நன்றிங்க வேலன்

தமிழார்வன் said...

நண்பர் வேலனுக்கு வணக்கம்,
தங்கள் படைப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன‌.
இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. பயனுள்ள படைப்பு
வாழ்த்துக்கள். மேலும் தொடரவும். . .

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

அருமையான பதிவு...

அவ்வபோது இது மாதிரி சிறுவர்களுக்காகவும் பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அசத்தி விடுகீர்கள்....

நன்றி சார்...//

தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் ஒட்டுக்கும் நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
இனி வீட்டுகுள்ள குயில் கூவும் . மீண்டும் தன் முகம் காட்டாமல்.//

உண்மைதான் சார்..இனி வீட்டுக்குள்ள குயில் கூவ ஆரம்பிக்கும். தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

vai279 கூறியது...
Hi,
என்னையும் கொஞ்சம் Follow செய்யுங்களேன்.//

வருகைக்கு நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அநன்யா மஹாதேவன் கூறியது...
super!
எனக்கே ரொம்ப ஜாலியா இருக்கு! உடனே பண்ணிட்டேன். நோட்ஸ் தெரிஞ்சா நாமளும் வாசிக்கலாம்! ஃப்ர்ஸ்டு க்ளாஸ்!//

நோட்ஸ் இருக்கு நண்பரே்..பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
என் செல்ல மாப்ள! எனக்கு "நொம்ப நொம்ப " பிடிச்சிருக்கு
இனிமே நானும் பியானோ வாசிப்பேன். (தனியா இருக்கும்போத்தான் )
பகிவுக்கு நன்றி மாப்ஸ்.//

தனியா வாசித்தால் தப்பாக நினைக்கபோறாங்க மாம்ஸ்...தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
சூப்பர் வேலன் சார்//

நனறி மஹாபூப் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

moulefrite கூறியது...
Very interesting for children's entertainement ,,Thanks Bro from me and my children//

எங்க சார் உங்கள ரொம்பநாளா கருத்துரையில் காணவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
வாவ்வ்வ்வ்வ்... நன்றிங்க வேலன்//
நன்றி ஞானசேகரன் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழார்வன் கூறியது...
நண்பர் வேலனுக்கு வணக்கம்,
தங்கள் படைப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன‌.
இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. பயனுள்ள படைப்பு
வாழ்த்துக்கள். மேலும் தொடரவும். . .//

நன்றி நண்பரே..தங்கள் பதிவின் கருத்துரைக்கு முதன்முதலாக வந்துள்ளீரு்கள் என எண்ணுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

சரவண பெருமாள் said...

பியானோ நோட்ஸ் எப்பொழுது வெளியிடுவீர்கள்...... இல்லையெல் முன்பே வெளியிட்டு விட்டீர்களா? கொஞ்சம் உதவும்..... மன இறுக்கத்தின் போது குறைக்க இதையாவது செய்யலாமே? மன மகிழ்ச்சிகாக.....

Related Posts Plugin for WordPress, Blogger...