வேலன்-போட்டோஷாப்- பிலிம்ரோலில் புகைப்படம் கொண்டுவர

ஆஹா..! இவன் பிலிம் காட்டறான் பாரு ....என வேடிக்கையாக சொல்லுவார்கள். நாம் போட்டோஷாப்பில் பிலிம் ரோலில் புகைப்படம் கொண்டுவருவது எப்படி என பார்க்கலாம். முதலில் போட்டோஷாப் திறந்துகொண்டு அதில் பிலிம் ரோல் ஒன்றை உருவாக்கிஅதன்பிறகு அதில் போட்டோக்களை இணைக்கவேண்டும். முதலில் பிலிம் ரோல் உருவாக்குவதை காணலாம்.
கீழ்கண்ட அளவுகளில் புதிய விண்டோவினை திறந்து கொள்ளுங்கள்.
அதன்பிறகு அதிலேயே புதிய லேயர் ஒன்றை உருவாக்கிகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும். ஓ,கே.தாருங்கள்.
பின்னர் Rectangular Marquee Tool -லில் அகலம் 225 பிக்ஸல் உயரம் 500 பிக்ஸல் என அமைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது அந்த அளவில் விண்டோவினை அமைத்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள வாறு விண்டோ தோன்றும். நிறத்திற்கு கருப்பு அ்ல்லது கிரே நிறம் அமைத்துக்கொள்ளலாம்.
இப்போது Eraser Tool-லில் Background Eraser Tool தேர்வு செய்து கொள்ளுங்கள். கீழே உள்ள வி்ண்டோவினை பாருங்கள்.
இப்போது மவுஸை ரைட்கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கீழே உள்ள வாறு பிரஷ் அளவுகளை அமைத்துக்கொள்ளவும்.
ரைட். இப்போது உங்கள் கர்சரானது வட்டத்திற்குள் + குறியுடன் இருக்கும். விண்டோவில் கருப்பு நிற மூலையில் வைத்து கிளிக் செய்து Shift Key அழுத்திக்கொண்டு அதன் நேர்கீழே கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சிறு கட்டங்கள் வரும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதைப்போல இரண்டுபுறமும் வட்டங்கள் கட்செய்துகொள்ளுங்கள்.இப்போது மூன்று புகைப்படங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள். ஓரே அளவாக வர கிராப் டூல் மூலம் 225x150 pix.அளவில் புகைப்படங்கள் கட்செய்து கொள்ளுங்கள்.ஒவ்வோரு படமாக மூவ் டூல் மூலம் கொண்டுவாருங்கள்.
சரியான இடைவெளியில் மூன்று புகைப்படங்களையும் அமைத்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதை நன்றாக செய்துபாருங்கள். பழக பழக சரியாக வரும்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.இதன் தொடர்ச்சியை அடுத்த போட்டோஷாப் பதிவில் பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

Chitra said...

Thats a cool project! :-)

S Maharajan said...

வழக்கம் போலவே கலக்கல் சார்

mahaboob said...

நன்றி வேலன் சார்

Unknown said...

வணக்கம் நண்பரே ,
எனது இணைய இணைப்பு Limited Broadband ஆகும்.
சில இணையப்பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தன்னியக்கமாக இயங்குவதால் அதிகளவு MB செலவாகிறது.
இவற்றை நிறுத்த நான் ஒவ்வொருதடவையும் Stop Button இனை அழுத்தவேண்டி உள்ளது.
Stop Button இனை அழுத்தாமல் நிரந்தரமாகவே Online Radio கள் Play ஆவதை நிறுத்த முடியுமா.
E-Mail: vai279@yahoo.com

ஜெய்லானி said...

அருமையா இருக்கு....!!

Mohamed Niyaz said...

Dear Velan,
As usally you posted a good Photoshop lesson for us. Thanking you and always appreciated your service.
For Ever
Mohamed Niyaz.
Kuala Lumpur.

பொன் மாலை பொழுது said...

அட இது கூட நல்லாத்தான் இர்ருக்கு மாப்ஸ்,
இரண்டு புறங்களிலும் உள்ள ஓட்டைகள் /பொத்தல்களை
சிறிய நீள்சதுரமாக அமைக்கலாமே பிலிமில் உள்ள பொத்தைகள் போலவே?
இன்னும் செய்து பார்கல..........

அதுசரி, உங்க ஊரு காரு ......ஆக்காங் ......நம்ம ஆட்டோ சங்கருதான்
திரும்பி வந்துட்டாராமே ?

Engineering said...

அருமை நண்பரே....
நானும் இனிமே ஆல்பம் தயாரிக்காமல்
பிலிம்...லேயே போட்டோ காண்பிக்க போறேன்.....
நன்றி....

சுமதி said...

ஹாய் நண்பா,

ஆஹா இது நல்லாயிருக்கே, அதுசரி இத நான் நேத்தே பாக்கலியே... ஏன்னா எனக்கு இதுல ஒரு JOINT PHOTO
வேனுமாயிருக்கு, அது மாதிரி ட்ரை பண்ணியிருந்தா இன்னிக்கு ஒரு 100 ரூ மிச்சமாயிருக்குமே..... தெரியாம போச்சே.... சரி அதுல ஜாயிண்ட் போட்டோ பண்ணமுடியுமா நண்பா?

சரி என்னுடைய மெயில் பாக்கலியா? பதிலேதும் வரலியே?

வேலன். said...

Chitra கூறியது...
Thats a cool project! :-)//

தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
வழக்கம் போலவே கலக்கல் சார்//

தங்களது 50 ஆவது பதிவிற்கு வாழ்ததுக்கள் மஹாராஜன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
நன்றி வேலன் சார்//

நன்றி மஹாபூப் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

vai279 கூறியது...
வணக்கம் நண்பரே ,
எனது இணைய இணைப்பு Limited Broadband ஆகும்.
சில இணையப்பக்கங்களில் உள்ள Online Radio, Video கள் தன்னியக்கமாக இயங்குவதால் அதிகளவு MB செலவாகிறது.
இவற்றை நிறுத்த நான் ஒவ்வொருதடவையும் Stop Button இனை அழுத்தவேண்டி உள்ளது.
Stop Button இனை அழுத்தாமல் நிரந்தரமாகவே Online Radio கள் Play ஆவதை நிறுத்த முடியுமா.
E-Mail: vai279@yahoo.com//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..தங்களுகு்கு தனியே மெயில் அனுப்புகின்றேன். நன்றி வாழ்க வளமுடுன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அருமையா இருக்கு...//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mohamed Niyaz கூறியது...
Dear Velan,
As usally you posted a good Photoshop lesson for us. Thanking you and always appreciated your service.
For Ever
Mohamed Niyaz.
Kuala Lumpur.//

நன்றி முஹம்மது நியாஜ் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அட இது கூட நல்லாத்தான் இர்ருக்கு மாப்ஸ்,
இரண்டு புறங்களிலும் உள்ள ஓட்டைகள் /பொத்தல்களை
சிறிய நீள்சதுரமாக அமைக்கலாமே பிலிமில் உள்ள பொத்தைகள் போலவே?
இன்னும் செய்து பார்கல..........

அதுசரி, உங்க ஊரு காரு ......ஆக்காங் ......நம்ம ஆட்டோ சங்கருதான்
திரும்பி வந்துட்டாராமே ?//

இது உடனடியாக செய்வது.நமது போட்டோக்களையே பிலிமில் உள்ள பொத்தல்களாக வைக்கலாம். ஆனால் நிறைய நேரம் எடுக்கும். தங்கள் வருகை்க்கும் கருத்துக்கும ்நன்றி் வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
அருமை நண்பரே....
நானும் இனிமே ஆல்பம் தயாரிக்காமல்
பிலிம்...லேயே போட்டோ காண்பிக்க போறேன்.....
நன்றி.//

வாங்க சார்..தங்கள் வருகைக்கும ்கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன.

வேலன். said...

சுமதி கூறியது...
ஹாய் நண்பா,

ஆஹா இது நல்லாயிருக்கே, அதுசரி இத நான் நேத்தே பாக்கலியே... ஏன்னா எனக்கு இதுல ஒரு JOINT PHOTO
வேனுமாயிருக்கு, அது மாதிரி ட்ரை பண்ணியிருந்தா இன்னிக்கு ஒரு 100 ரூ மிச்சமாயிருக்குமே..... தெரியாம போச்சே.... சரி அதுல ஜாயிண்ட் போட்டோ பண்ணமுடியுமா நண்பா?

சரி என்னுடைய மெயில் பாக்கலியா? பதிலேதும் வரலியே?//

ஜாயிண்ட் போட்டோபற்றி தனியெ பதிவிடுகின்றேன் நண்பா...மெயில் அனுபு்பிவிட்டேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...