Saturday, June 26, 2010

வேலன்-பைல்களை நொடியில் பிடிஎப்பாக மாற்ற

நம்மிடம் உள்ள பைல்களை பிடிஎப் ஆக மாற்ற பல பிடிஎப் சாப்ட்வேர்கள் இருந்தாலும் இந்த பிடிஎப் சாப்ட்வேர் அளவில் குறைவானதாகவும் உபயோகிக்க எளிதாகவும் உள்ளது. 4 எம்.பி. அளவில் இலவச சாப்ட்வேராகவும் உள்ளது. சரி...இதை எப்படி பயன்படுத்துவது...அதற்கு முன் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் create க்கு பக்கத்தில் உள்ள கட்டத்தை கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள டாக்குமெண்டை தேர்வு செய்யுங்கள். அடுத்து உள்ள create கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எங்கு பைலை சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
இறுதியாக ஓ.கே. தாருங்கள். அவ்வளவு தான் உங்கள் பிடிஎப் பைல ரெடி. இதைப்போல நீங்கள் பிரிண்ட் வழியே சென்றும் டாக்குமெண்டை பிடிஎப்பாக மாற்றலாம். கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
dopdf தேர்வு செய்து ஓ.கே.கொடுங்கள். அவ்வளவுதான். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

18 comments:

  1. வேலன் சார்,

    பயனுள்ள பதிவு சார்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  2. தங்கள் பதிவுக்கு நன்றி கீழ்க்கண்ட
    இணைப்பில் உள்ள Primo PDF என்னும் மென்பொருள் 13 எம்.பி அளவுள்ளது. ஆனால் இதில் நாம் pdf வடிவில் மாற்றும்போதே அதைப் படிப்பதற்கும் password கொடுக்கும் வசதி உள்ளது. மேலும் நமது fileல் உள்ள படங்கள் எந்த அளவு resolution இருக்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கும் வசதியும் உள்ளது.அதிகப் பக்கங்கள் உள்ள கோப்பாக இருந்தால் ebook வடிவில் மாற்றும் வசதியும் உள்ளது.

    http://primopdf.brothersoft.com/primopdf3.1

    www.avantbrowser.com என்ற இணைய தளத்தில் வழங்கப்படும் avantbrowser என்ற உலாவியில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை அப்படியே jpg வடிவில் சேமிக்கும் வசதியும் உள்ளது.

    கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள PDFMerge என்ற மென்பொருள் மூலம்
    தனித்தனி ஃபைல்களை ஒரே pdf ஃபைலாகவும் பல பக்கங்கள் கொண்ட ஒரு ஃபைலில் இருந்து குறிப்பிட்ட ஒரு பக்கத்தைத் தனியாகப் பிரித்து எடுக்க வும் முடியும்

    http://sourceforge.net/projects/pdfmerge

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு வேலன் சார்,

    பிரகாசம் சார் நீங்கள் கொடுத்து மென்பொருலும் அருமை.

    உங்கள் இருவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. அருமை... வாழ்த்துகள் வேலன்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  5. ஈஸியாதான் இருக்கு..!!

    ReplyDelete
  6. DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
    வேலன் சார்,

    பயனுள்ள பதிவு சார்...

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்//

    நன்றி சிம்பு சார்..தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. Chitra கூறியது...
    Thank you. :-)//

    நன்றி சகோதரி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. பிரகாசம் கூறியது...
    தங்கள் பதிவுக்கு நன்றி கீழ்க்கண்ட
    இணைப்பில் உள்ள Primo PDF என்னும் மென்பொருள் 13 எம்.பி அளவுள்ளது. ஆனால் இதில் நாம் pdf வடிவில் மாற்றும்போதே அதைப் படிப்பதற்கும் password கொடுக்கும் வசதி உள்ளது. மேலும் நமது fileல் உள்ள படங்கள் எந்த அளவு resolution இருக்க வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கும் வசதியும் உள்ளது.அதிகப் பக்கங்கள் உள்ள கோப்பாக இருந்தால் ebook வடிவில் மாற்றும் வசதியும் உள்ளது.

    http://primopdf.brothersoft.com/primopdf3.1

    www.avantbrowser.com என்ற இணைய தளத்தில் வழங்கப்படும் avantbrowser என்ற உலாவியில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை அப்படியே jpg வடிவில் சேமிக்கும் வசதியும் உள்ளது.

    கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள PDFMerge என்ற மென்பொருள் மூலம்
    தனித்தனி ஃபைல்களை ஒரே pdf ஃபைலாகவும் பல பக்கங்கள் கொண்ட ஒரு ஃபைலில் இருந்து குறிப்பிட்ட ஒரு பக்கத்தைத் தனியாகப் பிரித்து எடுக்க வும் முடியும்

    http://sourceforge.net/projects/pdfmerge4ஃஃ//

    நன்றி பிரகாரசம் சார்.நான் ஏற்கனவே Primo PDF பற்றி பதிவிட்டுள்ளேன்.தங்களது மற்ற சாப்ட்வேர் பற்றி இப்போதுதான் கேள்விபடுகின்றேன். உபயோகித்துப்பார்க்கின்றேன்.தங்கள் வருகைக்கும்கருததுக்கும் நன்றி பிரகாசம் சார்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. Thomas Ruban கூறியது...
    பயனுள்ள பதிவு வேலன் சார்,

    பிரகாசம் சார் நீங்கள் கொடுத்து மென்பொருலும் அருமை.

    உங்கள் இருவருக்கும் நன்றிகள்.//

    நன்றி தாமஸ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. ஆ.ஞானசேகரன் கூறியது...
    அருமை... வாழ்த்துகள் வேலன்

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்//

    நன்றி ஞர்னசேகரன் சார்..தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. ஜெய்லானி கூறியது...
    ஈஸியாதான் இருக்கு..!!//

    நன்றி ஜெய்லானி சார்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. Mrs.Menagasathia கூறியது...
    மிக்க நன்றி!!//

    நன்றி சகோதரி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. தங்கள் சேவைக்கு மிக்க நன்றி. நான் சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் பதிவுகளை வாசித்து வருகிறேன். எனவே தங்களின் முந்தைய பதிவு பற்றித் தெரியவில்லை.

    ReplyDelete
  14. sir i want help from you i want reboot software how can i will contact u

    ReplyDelete