குழந்தைகளுக்கு பள்ளி துவங்கிவிட்டார்கள். விளையாடியது வரை போதும். இனிவரும் காலங்களில் அவர்களின் அறிவு வளர இந்த சாப்ட்வேரை பதிவிறக்கி அவர்களுக்கு கொடுங்கள்.மொத்தம் 12 வகையான அறிவு வளரக்கூடிய ஆங்கிலம் -கணக்கு -தட்டச்சு விளையாட்டுகள் உள்ளன.
குறைந்த கொள்ளளவாக 800 கே.பி. அளவுடன் இலவச சாப்ட்வேராக உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள How Many என்பதை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்சரியானவிடையைகிளிக்செய்யவும்.இதைப்போலகூட்டல்.கழித்தல். பெருக்கல் என இதில் கணக்குகள் உள்ளது. நான் தேர்வு செய்துள்ள பெருக்கல் கணக்கை கீழே காணுங்கள்.இதைப்போல Pick a Picture என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வந்துள்ள வார்த்தைகளுக்கான சரியான படத்தை தேர்வு செய்யுங்கள்.
அடுத்துள்ளது First Letter என்பதை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் படத்திற்கு ஏற்ப முதல் வார்த்தையை தேர்வு செய்யவும்.
அடுத்துள்ளது Memory என்பதை கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள கட்டங்களில் படங்கள் மறைந்திருக்கும். படத்தை தேர்வு செய்து அதைப்போல படம் வேறு எங்குள்ளது என்று பார்க்கவும்.
அடுததுள்ளது Word; Memory. இதில் 6 படங்களும் அதற்கான வார்த்தைகளும் இருக்கும். சரியான படத்திற்கு ஏற்ப வார்ததையை தேர்வு செய்யவேண்டும். அதைப்போலவே Hangman.சரியான வார்த்தையை நிரப்ப வேண்டும். இல்லையென்றால் மனித உருவம் Hang பண்ணி கொள்ளும். (இதைப்பற்றி ஏற்கனவே தனியே பதிவிட்டுள்ளேன்) அடுத்துள்ளது முறையே ABC Rain.Letter Rain.& 1-2 Rain .குழந்தைகள் தட்டச்சு செய்ய சுலபமான வழி இதுவாகும். கீபோர்டில் கையை சரியான பொசிஷனில் வைத்துக்கொண்டு வரும் லெட்டர்களு்க்கான எழுத்தை தட்டச்சு செய்யவேண்டும். சரியாக எழுத்தை தட்டச்சு செய்தால எழுத்து அங்கேயே நின்று அடுத்த எழுத்து கீழே வர ஆரம்பிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே தனிதனி லெட்டர் மழை..அடுத்ததாக இரண்டு இரண்டு எண்களாக வரும். அதை இரண்டையும் கூட்டி சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும். விடை சரியாக இருந்தால் லெட்டர் அந்தரத்தில் நின்று விடும்.கீழே உள்ள விண்டோவினை பாரு்ங்கள்.
இது குழந்தைகளுக்கான சாப்ட்வேர். நாம் குழந்தைகளாக இருந்த சமயம் இந்த மாதிரி வசதிகள் இல்லை..அதனால்.....அதனால் ....ஒரு முறை நாம் இதை விளையாடிவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாமே...
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
19 comments:
அருமையாக உள்ளது. விளையாடிப்பார்த்தேன். இந்தத் தலைமுறையினருக்குக் கிட்டியிருக்கும் வாய்ப்புகள்......ம்....
மா.மணி
நல்ல சஃப்ட் வேர்தான்
அருமையான தகவல்.... விளையாடிட்டே படிக்குற மாதிரி....
நன்றி....
அருமை..... குழந்தைகளின் அன்பு உங்களுக்கு கிட்டடும்
very useful software. Thank you for sharing the info. with us. :-)
போட்டோ சாப்பில் ஒரே நேரத்தில் 3 ,4 லேயர்கள் இருக்கிறது. அதில் ஒரு லேயரை மட்டும் ஜூம் செய்வது எப்படி?
உண்மையில் மிக நல்ல பதிவு திரு. வேலன்
பகிர்ந்தமைக்கு நன்றி
அருமை..... குழந்தைகளின் அன்பு உங்களுக்கு கிட்டடும்.
என் மகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..ரொம்ப நன்றி அண்ணன்
Manickam கூறியது...
அருமையாக உள்ளது. விளையாடிப்பார்த்தேன். இந்தத் தலைமுறையினருக்குக் கிட்டியிருக்கும் வாய்ப்புகள்......ம்....//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஜெய்லானி கூறியது...
நல்ல சஃப்ட் வேர்தான்//
நன்றி ஜெய்லானி சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Engineering கூறியது...
அருமையான தகவல்.... விளையாடிட்டே படிக்குற மாதிரி....
நன்றி...//
நன்றி சரவணன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
அருமை..... குழந்தைகளின் அன்பு உங்களுக்கு கிட்டடும்//
நன்றி ஞான சேகரன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,
வேலன்.
Chitra கூறியது...
very useful software. Thank you for sharing the info. with us. :-)//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
சண்முகம் கூறியது...
போட்டோ சாப்பில் ஒரே நேரத்தில் 3 ,4 லேயர்கள் இருக்கிறது. அதில் ஒரு லேயரை மட்டும் ஜூம் செய்வது எப்படி?
லேயர்கள் பாடத்தில் விரிவாக பதிவிடுகின்றேன் நண்பரே.
வாழ்க வளமுடன்,
வேலன்.
Tamil Blogger கூறியது...
உண்மையில் மிக நல்ல பதிவு திரு. வேலன்
பகிர்ந்தமைக்கு நன்றி//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
சே.குமார் கூறியது...
அருமை..... குழந்தைகளின் அன்பு உங்களுக்கு கிட்டடும்.//
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.
சிநேகிதி கூறியது...
என் மகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..ரொம்ப நன்றி அண்ணன்//
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
பூங்கொத்து!சாஃப்ட்வேர் இன்னும் அனுப்பலியா?
Post a Comment