Wednesday, July 28, 2010

வேலன்-படங்களை சேர்க்கும் விளையாட்டு

சின்ன வயதில் நாம் இந்த விளையாட்டை விளையாடி இருப்போம். நமது காலங்களில் பிளாஸ்டிக் பாக்ஸில் இந்த விளையாட்டு வந்தது.எண்கள்  - படங்கள் என இருக்கும். ஆனால் ஒரு விளையாட்டுதான் அதில் இருக்கும். நவீன காலத்திற்கு ஏற்ப கம்யுட்டரில் இந்த விளையாட்டு வந்துள்ளது.இதில் 15 க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும்.
 சிறுவர்களுக்கு  நன்கு பொழுதுபோகும் விளையாட்டு ஆகும்.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்

ஒரு படத்தை 9.16.25.36என்று சிறு கட்டங்களாக வேண்டிய அளவில் பிரித்துக்கொள்ளலாம்.அதிக எண்ணிக்கையில் கட்டங்கள் பிரிக்கையில் நமக்கு பொருத்துவது கடினமாக இருக்கும். வலது புறம் வந்துள்ள படம் இடது புறம் கலைந்தது போல் இடம் மாறி இருக்கு்ம். இப்போது இடது பக்கம் உள்ளது போல வலது பக்கமும் நாம் படத்தை கொண்டுவரவேண்டும்.எந்த படம் காலியாக உள்ள இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்திற்கு படத்தை நகர்த்துங்கள்.கர்சர் கொண்டு அதை நகர்தினால் காலியாக உள்ள கட்டத்திற்கு படம் நகர்ந்துவிடும்.இதைப்போல முழுப்படமும் நீங்கள் நகர்த்தவேண்டும். நகர்த்தி முடித்தவுடன் வந்துள்ள படத்தை பாருங்கள்.
நீங்களும் ஓய்வு நேரங்களில் விளையாடி பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
போட்டோஷாப் பாடம் போடலாம் என்றிருந்தேன். என்னிடம் உள்ள வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் சரியாக வேலை செய்யததால் திருக்கழுக்குன்றம் பிளாக்கில் புதிய பதிவை போட இயலவில்லை. இன்று சரி செய்து பதிவினை போட்டுள்ளேன். அந்த பதிவினை காண திருக்கழுக்குன்றம்(ஊரின் பெயரில் கிளிக் செய்தால் அந்த தளத்திற்கு வருவீர்கள்) வாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

12 comments:

  1. நல்ல பகிர்தல் .மிக்க நன்றி

    ReplyDelete
  2. நல்லா இருக்கே.... :-)

    ReplyDelete
  3. நல்லா இருக்கே...

    நன்றி.

    ReplyDelete
  4. அடுத்து ஒரு கலக்கல்....

    ReplyDelete
  5. வெறும்பய கூறியது...
    Good Post Bro...//

    நன்றி சகோதரரே...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. JOE2005 கூறியது...
    நல்ல பகிர்தல் .மிக்க நன்றி//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. Chitra கூறியது...
    நல்லா இருக்கே.... :-)//

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. சே.குமார் கூறியது...
    நல்லா இருக்கே...

    நன்றி//

    நன்றி குமார் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன.

    ReplyDelete
  9. மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
    வேலன் சார் சூப்பர்.//

    நன்றி மணி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. ஆ.ஞானசேகரன் கூறியது...
    அடுத்து ஒரு கலக்கல்....//

    நன்றி ஞர்னசேகரன் சார்..
    வாழ்க வளமுடன்,
    வேலன.

    ReplyDelete