Thursday, July 29, 2010

வேலன்-போட்டோஷாப் -சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

ஹலோ...ஹலோ....கொஞ்சம் இருங்க...என்னடா இவன் இப்போதான் பதிவுலகுக்கு வந்தான். இதற்குள் இவனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுட்டாங்களே என நினைக்கவேண்டாம்.இன்று நாம் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். நாளையே நாம் நாடு போற்றும் பெரிய மனிதர்களாக மாறி நமக்காக சிறப்பு தபால்தலை வெளியிட்டால் எப்படி இருக்கும்.நமது கற்பனையை போட்டோஷாப் மூலம் செயல்படுத்தலாம். போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். இந்த ஸ்டாம்ப் ஆக்ஷனை இங்குகிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.போட்டோஷாப்பினுள் லோடு அக்ஷன் மூலம் அதனை கொண்டுவந்துவிடுங்கள்.(முந்தைய போட்டோஷாப் பதிவில் இதைப்பற்றி போட்டுள்ளேன்)இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் இரண்டு மாடல்களில் ஸ்டாம்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்யுங்கள்.
 படம் தேர்வானதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். மீண்டும் அக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் நீங்கள் விரும்பும் தேதியை நிரப்பிக்கொள்ளுங்கள்.இந்த தேதிதான் உங்கள் ஸ்டாம்பில் முத்திரை தேதியாக வரும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேதியை தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளுங்கள்..
மீண்டும் கிளிக் செய்து இறுதியாக ஸ்டாப் வரும் வரை ஓ.கே. தாருங்கள். கீழே வந்துள்ள Stamp புகைப்படம்
நாளைய பிரபலங்கள்-




என்னங்க....சிறப்பு அஞ்சல்தலை யை போட்டோஷாப்பில் கொண்டுவரு வதை பார்த்திங்களா...இப்போ முத்திரை குத்துவதாக நினைத்து உங்க ஓட்டை குத்திட்டுபோங்க...நாளை சந்திப்போம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

20 comments:

  1. ஹ ஹ ஹா.... அருமை தல!
    நம்ம பேர்ல ஒரு தபால் தலை?

    ReplyDelete
  2. i saw your website today its very excellent and very useful. but download links open same window. its very disturb. pls arrange download links open in a new window it is possible?

    ReplyDelete
  3. நல்லா இருக்கே இது.

    அதுசரி... வேலன் அண்ணா கலக்குங்க.

    ReplyDelete
  4. கலக்கல்! அசத்தல் படங்கள்..... வாவ்!

    ReplyDelete
  5. போங்க சார் போங்க ..நானெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது சார்

    ReplyDelete
  6. அழகா இருக்கு வேலன்
    தகவலுக்கு நன்றி.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. ம்ம்ம் என்னங்க இது! நம்ம பேரிலும் தபால் தலையா? சரி சரி இருக்கட்டும்.....


    மிக்க நன்றிங்க வேலன்..... ஓட்டு போட்டாச்சு

    ReplyDelete
  8. வெறும்பய கூறியது...
    Anna Good post..//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. கிரி கூறியது...
    ஹ ஹ ஹா.... அருமை தல!
    நம்ம பேர்ல ஒரு தபால் தலை?//

    ஆமாம் நம்ப பெரிய ஆளாக வரவேண்டாமா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. கக்கு - மாணிக்கம் கூறியது...
    எனக்கு பிடிக்கல//

    மரணத்திற்கு பின்னர்தான் மரியாதைகொடுப்பது இங்குள்ள வழக்கம். அவர்கள் உயிருடன் இருக்கும்போது மரியாதை செய்வது கிடையாது. அவர்கள் மறைந்துவிடடபின் அவர்களுக்கு சிலைவைப்பதும் - ஸ்டாம்ப் வெளியிடுவதும் நடைபெறுகின்றது.ஏன் நமது இந்தியா உயிருடன் உள்ள ஒருவருக்கு ஸ்டாம்ப் வெளியிட்டு மரியாதை செய்யகூடாது...முன்னேட்டமாகதான் ஸ்டாம்ப் வெளியிட்டேன்.இப்போது பதிவு பிடிக்கும் என நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. Sankar கூறியது...
    i saw your website today its very excellent and very useful. but download links open same window. its very disturb. pls arrange download links open in a new window it is possible?//

    தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி...விரைவில் நிறைவேற்றுகின்றேன் நண்பரெ..
    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் கூறியது...
    நல்லா இருக்கே இது.

    அதுசரி... வேலன் அண்ணா கலக்குங்க//
    நன்றி குமார் சார்....
    தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. Chitra கூறியது...
    கலக்கல்! அசத்தல் படங்கள்..... வாவ்//

    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  14. யூர்கன் க்ருகியர் கூறியது...
    போங்க சார் போங்க ..நானெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது சார்//

    சார்..7 ரூபாய் ஸ்டாம்ப்பை விட 4 ரூபாய் ஸ்டாம்ப் தான் அதிகம் விற்கும். நிறைய பேருக்கு சென்று அடையும்.உங்களை போய் வொர்த் இல்லையின்னு சொல்றீங்களே...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. ♠புதுவை சிவா♠ கூறியது...
    அழகா இருக்கு வேலன்
    தகவலுக்கு நன்றி.

    வாழ்க வளமுடன்//

    நன்றி சிவா சார்..
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. ஆ.ஞானசேகரன் கூறியது...
    ம்ம்ம் என்னங்க இது! நம்ம பேரிலும் தபால் தலையா? சரி சரி இருக்கட்டும்.....


    மிக்க நன்றிங்க வேலன்..... ஓட்டு போட்டாச்சு//

    நன்றி ஞானசேகரன் சார். தங்கள் வருகைக்கும் கருததுக்கும் ஓட்டுபோட்டமைக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  17. நான் பகலவன் திரட்டி இல் சேர்ந்திருக்கிறேன், நீங்களும் இதை விரும்புவீர்கள் என்று நினைக்கிறேன். அதைப் பார்க்க, கீழுள்ள இணைப்பைப் பின்தொடர்க:

    http://www.periyarl.com/

    பல மேம்பட்ட வசதிகளுடன் ஒரு தமிழ் திரட்டி - http://www.periyarl.com/

    உங்கள் கருத்துக்களை இன்னும் வேகமாக முன்னிருத்தவும் உங்கள் எழுத்துக்களை மேலும் விரிவடைய செய்யவும் நமது குழுமத்தில் இருந்து ஒரு திரட்டியை உருவாக்கி உள்ளோம்.உங்களிடம் blog இருக்குமே ஆனால் பகலவன் திரட்டியின் vote button யை உங்கள் blog யில் பின்வரும் இணைப்பை பயன்படுத்தி இணைத்து கொள்ளுங்கள்.

    vote button இணைப்பு - http://periyarl.com/page.php?page=vote



    நன்றி
    பகலவன் திரட்டி
    http://www.periyarl.com/
    பகலவன் குழுமம்

    ReplyDelete
  18. சே.குமார் கூறியது... நல்லா இருக்கே இது. அதுசரி... வேலன் அண்ணா கலக்குங்க// நன்றி குமார் சார்.... தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி.. வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete