Saturday, September 4, 2010

வேலன்-டெக்ஸ்டாப்பில் வைத்துகொள்ள விதவிதமான கிருஸ்மஸ் மரங்கள்.

கிருஸ்துவ நண்பர்களுக்காக ஏதாவது பதிவிடலாம் என தேடியபோது இந்த டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளும் விதவிதமான கிருஸ்மஸ் மரம் கிடைத்தது. கிருஸ்மஸ் வர இன்னும் 3 மாதம் இரு்க்கையில் இப்போது என்ன தேவை என நிங்கள் கேட்பது புரிகின்றது.இருப்பினும் அப்போதைய கொண்டாட்டத்தில் மறந்துவிட்டால் என்ன செய்வது.அதனால் இருக்கும் போதே கொடுத்துவிடலாம் என்று பதிவிடுகின்றேன்.கிருஸ்மஸ் சமயம் மீண்டும் ஞாபகபடுத்தினால் போச்சு.சரி..இப்போது பதிவிற்கு வருவோம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதில் 8 விதமான மரங்கள் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து முடித்ததும் ஒப்பன செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட படம் வரும்.

ஒவ்வோரு பைலுக்கும் ஒவ்வொருவிதமான படங்கள் வரும். அதில் ஏதாவது ஒரு படத்தின் அருகே வைத்து கிளிக் செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Transparent கிளிக்செய்து படத்தின் சதவீதத்தை தேர்வு செய்து கொள்ளலாம். அதிகமான சதவீதம்தேர்வு செய்தால் படம் மங்கலாகவும் குறைந்த அளவு தேர்வு செய்தால் படம் பிரகாசமாகவும் தெரியும். 
இதர கிருஸ்மஸ் மரங்கள் கீழே-








உண்மையில் மரம் நட்டால் நாம் அதை நகர்த்தி வைக்க முடியாது. ஆனால் இதில் நமக்குடெக்ஸ்டாப்பில் எங்கு வேண்டுமோ அங்கு சுலபமாக நகர்த்தி வைக்கலாம்.ஓரே மரம் பிடித்திருந்தால அதே மரம் எத்தனை வேண்டுமானாலும் ஒரே கிளிக் மூலம் கொண்டுவரலாம். அரசாங்கம் மரம் வளருங்கள் என்று சொலகின்றார்கள். நாம் முதலில் நமது கம்யுட்டரில் இருந்து மரம் வளர்க்க ஆரம்பிப்போம்.மரம் வளர்ப்போம். மண்வளம் காப்போம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- தீபாவளி - கிருஸ்மஸ் - பொங்கல் போன்ற விஷேஷ நாட்களில் இந்த ஞாயிறு கடை உண்டு என்று போர்டு போடுவார்கள்.அதைப்போல பதிவிட நிறைய பதிவுகள் உள்ளதால் இந்த ஞாயிறு நமது கடையும் உண்டு.நாளையும் மறக்காமல் நமது கடைக்கு (velang.blogspot.com)வந்துவிடுங்கள். 


11 comments:

  1. நன்றி வேலன்.

    ReplyDelete
  2. :-))
    அதுக்கு யார் தண்ணி ஊத்தறது..!!

    ReplyDelete
  3. அன்பின் வேலன்

    பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன்சீனா

    ReplyDelete
  4. வெறும்பய கூறியது...
    Thanks For Sharing Bro.//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. Chitra கூறியது...
    looks nice.ஃஃ

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. Robin கூறியது...
    நன்றி வேலன்

    நன்றி நண்பரே....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. ஜெய்லானி கூறியது...
    :-))
    அதுக்கு யார் தண்ணி ஊத்தறது.//

    பதிவிட்டு சிறிது நேரம் கழித்து யோசித்தேன். அடடா...தண்ணீர் ஊற்றுவது பற்றி சொல்லவில்லையே என்று...கம்யுட்டரை ஆப் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றவும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. cheena (சீனா) கூறியது...
    அன்பின் வேலன்

    பகிர்வினிற்கு நன்றி

    நல்வாழ்த்துகள்
    நட்புடன்சீனாஃ

    நன்றி சீனா சார்..தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்த்தியமைக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. வேலன் அண்ணா பதிவு பதிவு தான்....ரெம்ப நன்றி....அண்ணா.........

    ReplyDelete